Articles for 2015

அவதிப் பொதுமை

அவதிப் பொதுமை

இங்கே அவதி எனும் பதம்; எதனையும் ஆராய முற்படாத அவசரம் என்பதாக அர்த்தப் படுகிறது. ;கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் போய்- தீர விசாரித்தறிவதே மெய்; என்ற முதுமொழி , வழக்கொழிந்து வருவது போலத் தெரிகின்றது, சாட்சியங்களின் அடிப்படையில் வழங்கப்படும் சட்டபூர்வமான தீர்ப்புக்கள் கூட சிலவேளைகளில் சர்ச்சைக்குள்ளாகின்றன,
பொதுவாழ்வில் ஒருவர் எவ்வளவுதான் நன்மைகளைச் சமூகத்திற்கு நயந்திருப்பினும் சந்தர்ப்பவசமாக நேரக்கூடிய ஒரு சிறு தவறு , ;வெண்திரையின் கரும் புள்ளியாகத் தெட்டத்தெளிவுறத் தெரியும், குறித்த நபருக்கு ஏதேனும் விபரீத விளைவு விளையுமாயின் ,இந்தக் கரும்புள்ளியே அதற்குக் காரணியாக்கப் படுகிறது,
சூழ்ந்திருந்த அவ்வினையே இது; என்பது சுருக்கமான தீர்ப்பாகி விடுகிறது, தமது இறுதிக் காலத்தில் ஓரளவு பொருளாதார பலத்துடனும் சமூக மதிப்புடனும் இயங்கிக் கொண்டிருக்கும் ஒருவருக்கு , அவரது ஒரே வாரிசினால் எதிர்பாராத பேரிழப்பு ஏற்படுகிறது என வைத்துக் கொள்ளலாம், வருவாயிலும் கூடுதலாகச் செலவினம் உயர்கையில் ; சாண் ஏற முழம் சறுக்குகிறதே!…எனச் சம்மந்தப்பட்டோர் அங்கலாய்ப்பர், இங்கோ மில்லி மீற்றர் ஏற கிலோ மீற்றர் சறுக்கிற அதலபாதாள வீழ்ச்சி, பெரும் புதிராக, இத் தேட்டங்கள் யாவும் போய்த் தொலைந்த இடம் இப்பிரபஞ்சத்தின் ஏதுமொரு கருந்துளையோ? எனும் படியாக ஆச்சரியமே எல்லோர் எண்ணங்களிலும் நிலவுகிறது, அவரது குடும்பம் தனிமைப்படுகிறது,
இப்போது குறித்த குடும்ம்பத்தலைவரின் ஏதோ கடந்த கால பாரிய தவறுதான் அவர்களின் நரக நுழைவுக்கு மூலகாரணி! என்ற பிரேத பரிசோதனை அறிக்கை பிரகடனமாகிறது, இவ்வகையான குத்ர்க்கக் கூற்றுக்களை நியாப்படுத்துவதற்கு; அவதிப் பொதுமை: ஏதுவாகிறது, உண்மையில், பாதணிகளுக்குப் பொருந்துமாறு பாதங்களைச் செதுக்கும்” அபத்த காரியமே இங்கு நிகழ்ந்திருக்கின்றது,
மெய்–பொய்களின் தாற்பரியங்களை வேறு படுத்திப் புரிந்து கொள்ள முன்வாராத சில குறுகிய மனதுடையோரின் இந்த அவதிப் பொதுமைத் தீர்ப்புக்கள் அசல் தீர்வுகள் அல்ல!, அவர்களின் சுய அளவு கருவிகளினால் ஏற்கனவே நிர்ணயிக்கக் பட்டிருக்கும் கணிப்பீடுகளே அவை,
இந் நிலையானது தனி நபர் அல்லது குடும்பமொன்றின் சுமுகமான சமூக உறவிற்கோ சகஜமான இயல்பு வாழ்விற்கோ துணை வராது, மாறாக மன விரிசல்களை மேலும் விசாலிப்பதற்கும், அவலக் குழிகளை இன்னும் ஆழப்படுத்துவதற்குமே வகை செய்யும்,
பொதுவில், இந்த ;அவதிப் பொதுமை: ஆனது, குதர்க்க வாதங்களின் குவியல், அபத்தங்களின் அரைவேக்காட்டு அவியல், அவ்வளவே!.

இடைக்காடு இளைய பண்டிதன்.

திரு.சிற்றம்பலம் பாலசிங்கம்

துயர் பகிர்வோம்.

2015_12240057_1085557924788757_4730705717813767772_n

திரு.சிற்றம்பலம் பாலசிங்கம்

இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வட்டக்கச்சியை வதிவிடமாகவும் கொண்ட சிற்றம்பலம்
பாலசிங்கம்(கோழிப்பண்ணை பாலசிங்கம்) அவர்கள் இன்று 16/11/2015 திங்கட்கிழமை இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம்-கண்ணகைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான பொன்னையா-வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற தம்புச்சாமி அவர்களின் அன்புச் சகோதரரும் இராசம்மாவின் அன்புக்கணவரும் காலஞ்சென்ற நாகம்மா மற்றும் செல்லத்துரை, காலஞ்சென்ற செல்லம்மா, தெய்வானை(Canada) காலஞ்சென்ற சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் காலஞ்சென்றவர்களான சிவசக்தி, புவனசக்தி மற்றும் பராசக்தி(Canada), வெற்றிவேல்(UK), பர்வதசக்தி(ஆசிரியை, கிளி/கிளிநொச்சி மகா வித்தியாலயம்), ஆனந்தசக்தி(ஆசிரியை, கிளி/இராமநாதபுரம் மகாவித்தியாலயம்) காலஞ்சென்ற திலகசக்தி ஆகியோரின் பாசமிகு தந்தையாரும் சிவகுமார்(Germany), கமலேஸ்வரன்(Canada), ஜெயவதனி(UK), விமலேஸ்வரன்(DPDHS, கிளிநொச்சி), மோகனகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும் மயூரன், டினேசன், டனுசன், கௌதமி, பிரேமி, பவிக்சன், பவிந்தன், நிமோதரன், வினோஜன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் வட்டக்கச்சியில் புதன் கிழமை 18/11/2015 அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று அதன் பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.

கிரியை நடைபெறும் இடம்
இல 727 சிவிக் சென்ரர்
வட்டக்கச்சி, கிளிநொச்சி

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு
வெற்றிவேல்(UK): 020 85745720
பராசக்தி: +1 514 7314805
வட்டக்கச்சி: + 94 21 2060352/ 0778138876

Diwali 2015

மனம் நிறைந்த இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்.

2015

இடைக்காடு பழையமாணவர் சங்கம்

images (1)

Summer-2015 gathering in Canada

Summer-2015 gathering in Canada photos can be viewed by clicking the link given below. These pictures are taken by Ms.SHANTHIRASEKAR SHARMINI. The Canada – Idaikkadu Organizers thanks to her for the great contribution in this event.

IMG_2941
Summer Get-Together 2015 Photos

கனடா- மாரிகால ஒன்றுகூடல்- 2015

இடைக்காடு பழையமாணவர் சங்கம், கனடா- மாரிகால ஒன்றுகூடல்- 2015

party-dec-25-2014-27A

11.10.2015 அன்று கூடிய இடைக்காடு பழையமாணவர் சங்கம் கனடாவின்
நிர்வாகசபைக் கூட்டத்தில் மேற்கொண்ட தீர்மானத்திற்கிணங்க, வழமைபோல் இவ்வாண்டும் 25.12.2015 அன்று மாரிகால ஒன்றுகூடலை நடாத்துவதென்றும் அதன் முக்கிய நிகழ்வாக கலை நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவோர் 31.10.2015 க்கு முன்பதாக தமது பெயர் விபரங்களை பின்வருவோரிடம் பதிவுசெய்யுமாறு தயவுடன் கேட்கப்படுகின்றனர்.

Mr. Ponnesan: 416-439 8613
Mr. Ruban: 416-286 6567
Mr. Kiri (Rajani): 416-431-3796
Mrs. Siha(Siva) : 416 431 0829
Mr.Puvanachandran: 647 724-8068
Mr. Mahesan: 416 949-1815

இருவர் ஒரே நிகழ்ச்சியை நடாத்துவதைத் தவிர்க்கும்பொருட்டு தாம் மேடையேற்றவிருக்கும் நிகழ்ச்சியை அல்லது பாடலின் பெயரினை முன்கூட்டியே தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும் சங்கீதக்கதிரை முதலான உள்ளக விளையாட்டு நிகழ்ச்சிக்கு வேண்டிய பரிசில்களை வழங்க விரும்புவோர் தமது பெயரினை தலைவரிடமோ செயலாளரிடமோ தெரிவிக்குமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

விழா நடைபெறும் இடம்: 231 Milner Ave, Scarborough, ON M1S 5E3 என்னுமிடத்தில் அமைந்துள்ள Peter and Paul Banquet Hall Scarborough மண்டபத்தில் நடைபெறும். நிகழ்வுகள் மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகும். கட்டணம் Family – $60 senior couples- $40 single or over 21 working people- $20 ஆகும்.
நன்றி
வே.இளங்கோ–தலைவர் 416 909 1107
நா.மகேசன் —–செயலாளர் 416 949 1815

IMV Scholarship Results

Qualified for the grade 5 scholarship examinations held in 2015 from J/Idaikkadu M.V.
The cut out marks is 153.

2015_imv_schol

1. Vettivelu Saranjah (166, Idaikkadu)
2. Selvavel Jathusha (161, Idaikkadu)

In addition, the following three students close to the cut out marks:
1. Sivagnanaseelan
Arnikan (150, Idaikkadu)
2. Arudkovil Mithunan (151, Idaikkadu)
3 .Suthakar Thishani (151, Valalai)

திரு . மகாதேவா

துயர் பகிர்வோம்.

Thipam

திரு . மகாதேவா(யா/இடைக்காடு மகாவித்தியாலயத்தின் ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர்)அவர்கள் (08.10.2015) அன்று காலமானார்
மேல் விபரங்கள் பின்பு வெளியிடப்படும்
அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.
தகவல் :
திரிகரன் அமுதலிஙகம்

இலங்கையின் அதியுயர் நிர்வாக

இலங்கை கடல்கடந்த நிர்வாக சேவைக்கு தெரிவு
(SRILANKA OVERSEAS SERVICE – SLOS GRADE – III)

Kiritharanஇலங்கையின் அதியுயர் நிர்வாக சேவையான “இலங்கை கடல்கடந்த நிர்வாக சேவைக்கு” எமது கிராமத்தைச் சேர்ந்த திரு கிரிதரன் குமாரசாமி அவர்கள் 14.09.2015 அன்று தெரிவுசெய்யப்பட்டுள்ளார் இவர் தனது ஆரம்பக் கல்வியை யா / வளலாய் அ.மி.த.க. பாடசாலையிலும் இடைநிலை மற்றும் உயர் கல்வியை யா / இடைக்காடு மகா வித்தியாலயத்திலும் கற்றார். 1995 இல் யாழ் பல்கலைக் கழகத்தில் கலைப் பிரிவுக்குத் தெரிவு செய்யப்பட்ட இவர் இளங்கலை (புவியியல்) சித்தி பெற்றார்.
சித்திரை 7 2015, கொழும்பு ரெலிகிராப் பத்திரிகையில் வெளிவிவகார அமைச்சினால் (COLOMBO TELEGRAPH) வெளியிடப்பட்ட விபரங்களின் படி இலங்கை கடல்கடந்த சேவைக்காக தெரிவுசெய்யப்பட்ட 42 நபர்களிலில் அகரவரிசைப்படி 18 வது ஆளாக காணப்படும் கிரிதரன் குமாரசாமி என்பவர் வளலாய் அச்சுவேலி ஐச் சேர்ந்தவர் என்பதை தெரியப்படுத்துவதில் வளலாய் இணையம் பெருமைப்படுகின்றது.
திரு கிரிதரன் குமாரசாமி M.A. M.Ed., 2005 இலிருந்து 2007 வரை வவுனியா செட்டிக்குளம் மகா வித்தியாலயத்திலும் 2007 இலிருந்து 2012 வரை வவுனியா இறம்பைக்குளம் மகா வித்தியாலத்திலும் 2012 இலிருந்து இன்றுவரை யா / நெல்லியடி மத்தியகல்லுரியிலும் ஆசிரியராக பணியாற்றுகின்றார். “பௌதீகப் புவியியல்” “சூழற்புவியியல்” ஆகிய நூல்களை எழுதி வெளியிட்டுள்ள கிரிதரன் ஆசிரியர் முதுகலைப் படிப்பை பேராதனைப் பல்கலைக் கழகத்திலும் M.Ed. பட்டத்தை யாழ் பல்கலைக்கழகத்திலும் பொருளாதரச் சிரமங்கள் இடம்பெயர்வுகளுக்கு மத்தியிலும் தன்னாற்றலால் ஆங்கில மொழி மூலம் கற்றுத் தேர்ந்துள்ளதோடு வளலாய் கிராமத்துக்கும் பெருமையும் புகழும் சேர்த்துள்ளார். அவர் SLOS – GR II, GR I தேர்வுகளிலும் சித்தி பெற்று வெளிநாட்டு தூதுவராக பதவி உயர்வு பெற வாழ்த்தும் கனடா வாழ் வளலாய் உறவுகள்.

இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது

திருமதி. செல்லம்மா இளையதம்பி

2015_CIMG202dx2EDதுயர் பகிர்வோம்.
யாழ். அச்சுவேலி இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி
செல்லம்மா இளையதம்பி அவர்கள் இன்று 06-10-2015 செவ்வாய்க்கிழமை தனது 91 ஆவது வயதில் சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை-சின்னாச்சி தம்பதிகளின் அன்புமகளும் காலஞ்சென்ற இளையதம்பி(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், கந்தையா(முத்து), சின்னத்துரை மற்றும் கண்மணி, தங்கம்மா ஆகியோரின் அன்புச்சகோதரியும் மகேசன், தேவகி(UK), பராசக்தி, மகேந்திரன்(France), சுவாமிநாதன், கண்ணகி, சகுந்தலா(Germany), செல்வக்குமாரன்(UK), குணதாசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் வாசவன்- யசோதா, மகிபன்-கல்பனா, ரமேஷ்-தர்சினி, கணேஸ்வரன்-சிபி, வசந்தா- பார்த்திபன், ஸ்கந்தகுமார்-சுமங்கலி, சுதர்சனி-சிவநாதன், ஸ்ரீகாந்த்-சிந்தியா, சரிதா-ஹரிராஜேந்திரன், மகிந்தன்-தர்மினி, அனுசா, குகமாறன், நர்த்தனன், சுதர்சன், நித்தியா, பிரசாந்த், வனிதா-ரமணன், ரஜீவ், ரதீப், சரண்யா, சேரன், குகாகினி, கோகிலா ஆகியோரின் அன்பு பேர்த்தியும் ஜெனனி, கண்ணன், அபிஷேக், அர்ஜுன், அனோஷ்கா,அபிராமி, காவியா, சூரியா, திவ்யா,ராமன், கீரன், அனோஷ், ஸ்ரீநிஷ், முகிலன், ஷெல்டன், ஆதவன், ஓவியா கார்த்திகா ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
அன்னாரது இறுதிக் கிரியைகள் நாளை புதன்கிழமை காலை 10.00 மணிக்கு இடம்பெற்று பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகேசன்(இடைக்காடு) : +94 21 7903176
மகேந்திரன்(France): +33 130661824
சகுந்தலா (Germany): +49 3069817230
செல்வன்(UK): + 44 20 85615570

இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் -கனடா

இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் -கனடா நிர்வாகசபைக்கூட்டம்

New Logo

மேற்படி எமது சங்கத்தின் நிர்வாகசபைக்கூட்டம், இவ்வாண்டுக்கான மாரிகால ஒன்றுகூடல் பற்றியும் வேறுபல விடயங்கள் பற்றியும் கலந்துரையாடு வதற்காக கூடுவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
காலம் : 11.10.2015 (ஞாயிறு) @ 9:00 AM
இடம் : Siva –Sika இல்லம்
16 Milford Haven Dr,Toronto, ON, M1G 3C6
நிவாகசபை அங்கத்தவர்களயும் மற்றும் நலன்விரும்பிகளையும் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆக்கபூர்வமான கருத்துக்களைத் தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
நன்றி
செயலாளர்.
N மகேசன்
Mahesan 416-949-1815
Siva-Siha 416-431-0829