Articles for April 2015

திரு தாமோதரம்பிள்ளை லோகநாதன்

112624

திரு தாமோதரம்பிள்ளை லோகநாதன் (இந்திரன்) அன்னை மடியில் : 7 பெப்ரவரி 1957 — ஆண்டவன் அடியில் : 27 ஏப்ரல் 2015

துயர் பகிர்வோம்.

யாழ். அச்சுவேலி இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு விசுவமடு, கிளிநொச்சி புளியம்பொக்கனை, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு .தாமோதரம்பிள்ளை லோகநாதன் அவர்கள் 27-04-2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை(ஆசிரியர்), பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யசோதா(பபா) அவர்களின் அன்புக் கணவரும்,
விதுர்ஷன், அகில்ஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவலோகம், சிறீஸ்கந்தராசா, காலஞ்சென்ற இராசலெட்சுமி, பரமேஸ்வரன், காலஞ்சென்ற கதிர்காமநாதன், சிற்றம்பலம், மல்லிகாதேவி, கந்தையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, தெய்வநாயகி, முருகேசு, கண்ணகி, ரஞ்சிதமாமலர், தவமணி, தவராஜா, சுபத்திரா, ஜெயசிறி, வசீகரன், யசோதரன், தயாபரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 02/05/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 03/05/2015, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 03/05/2015, 12:00 பி.ப
முகவரி: St. John’s Norway Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு
யசோதா(மனைவி) — கனடா
தொலைபேசி: +14164385518
கந்தையா(சகோதரர்) — கனடா
தொலைபேசி: +19052948810

திருமதி. மோகனதாசன் புஸ்பவதி

 துயர் பகிர்வோம்.

112594

திருமதி. மோகனதாசன் புஸ்பவதி அன்னை மடியில் : 20 ஓகஸ்ட் 1962 — ஆண்டவன் அடியில் : 24 ஏப்ரல் 2015

 

யாழ். அச்சுவேலி இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Heimberg ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி .மோகனதாசன் புஸ்பவதி அவர்கள் 24-04-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலாயுதம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்.

திரு.மோகனதாசன் அவர்களின் அன்பு மனைவியும்,

தனுயன், அபினா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கதிர்காமசுந்தரம், தெய்வநாயகி, சத்தியவேலன், ஆறுமுகவேல், கயிலமணி, கௌசலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ராசநாயகம், மகேஸ்வரி, ஞானேஸ்வரி, புஸ்பராணி, கிருஷ்ணராஜா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் தினமும் பி.ப 12:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை Haslifeldweg 1, 3672 Oberdiessbach, Switzerland எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்படும்.

இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மோகனதாசன்(கணவர்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41317712033
சத்தியவேலன்(சகோதரன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41765346450
ஆறுமுகவேல்(சகோதரன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41787962780

 

இடைக்காடு கலைமகள் சனசமூகநிலையம்

2015_Scan1  இடைக்காடு கலைமகள் சனசமூகநிலையம் கடிதம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது

இடைக்காடு கலைமகள் சனசமூகநிலையம் – சேவைகளும் செயற்பாடுகளும்
கடந்தகாலத்தில் எமதுநாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக பல தடங்கல்களை எதிர்நோக்கியிருந்த எமது கலைமகள் சனசமூகநிலையம் அண்மையில் தெரிவுசெய்யப்பட்ட இளைய தலைமுறையினரின் நிர்வாகத்தின்கீழ் சிறப்புடன் செயற்பட்டுவருவதனை அண்மையில் நான் ஊருக்குச் சென்றுவரும்போது அவதானித்ததுடன் புதியநிர்வாகத்துடன் ஆரோக்கியமான கருத்துப்பரிமாற்றங்களையும் மேற்கொண்டிருந்தேன்.. மேலும் வாசகர்களுக்கு வேண்டிய புதியபுத்தகங்களை பெறுவதில் பல சிக்கல்லளை எதிர்நோக்கியிருந்ததனால் எமதூரில் இயங்கிவரும் மற்றைய சனமூகநிலையமான மாணிக்க இடைகாடர் சனசமூகநிலையத்த்ற்கு இங்குள்ள புத்தகங்களை கையளித்த்து அவர்களே அப்பணியினை திறம்பட இயங்குவதற்கு வழிசமைக்கப்பட்டுள்ளது.
மேலும் தமது 2014ம் ஆண்டுக்கான முன்னேற்ற அறிக்கை கனடா, இங்கிலாந்து, சுவிற்சிலாந்து, பிரான்சு, ஜேர்மனி, அவுஸ்திரேலியா முதலிய எம்மவர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாட்டிலுள்ள அனைவரையும் செண்றடையவேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்ட்தற்கிணங்க கனடா பழையமாண்வர் சங்க இணையதளத்திலும்(idaikkaduweb.com) இடைக்காடு சமூக இணையதளத்திலும் (idaikkadu.com) வெளியிடும்படி என்னைக் கேட்டுக்கொண்டதனால் அது இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. தமது சீரிய செயற்பாட்டுக்கு பலவீனமான தமது நிதிநிலை தடையாக இருப்பதனால் அதனை மேம்படுத்துவதற்கு முக்கியமாக புலம் பெயர் உறவுகளின் ஆதரவினை எதிர்பார்த்து நிற்கின்றனர். இதுதொடர்பாக ஏதும் கருத்துக்களையோ விளக்கங்களையோ அறியவிரும்பின் என்னுடன் தொடர்புகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.. எனது தொ. இல. 416 525 6299. மற்றும் 715 587 1366.
நன்றி.
சு.நவகுமார். (நந்தன்) – கனடா
10.4.2015

G.C.E O/L BEST RESULTS – 2014

J/IDAIKKADU MAHA VIDYALAYAM ATCHUVELY G.C.E O/L BEST RESULTS – 2014

logo

NO                NAME                                                                           RESULTS
1          KANDASAMY.THUVARAGAN                                               7A,C,S
2          SIVANESWARAN .VITHURSAN                                            4A,2B,C,S
3          NANTHAKUMAR. KOKULARAJ (BILINGUAL MEDIUM)      5A,2B,2C
4          VELMURUGAN .ARUPAN                                                     A,B,4C,2S
5          JOKESVARAN. KAJEEPAN                                                   A,B,4C,2S
6          SUSEENTHIRARAJ. KANEESTAN                                       2A,3B,2C,S
7          JEEVAKARAN .THARANSIGA                                              A,B,5C,S
8          BALAPOOPAL. DANJIKA                                                      2A,5B,C
9          PAHEERATHAN .ELAKGIYA                                                 2A,4B,C,S
10        SRIKUMAR. MATHIVATHANAN                                            3A,4C,S
11        RAVINTHIRAN .THENUJA                                                     2A,B,5C
12       SANTHALINGAM. KAMJINI                                                    2A,4B,2C,S

The Idaikkadu Maha Vidyalaya Old Students Association of Canada is incredibly proud of these students. Their excellence and work fills us with pride and we wish them all the best in all their future endeavours.

திரு.சின்னப்பாபிள்ளை தம்பிமுத்து

திரு.சின்னப்பாபிள்ளை தம்பிமுத்து (Ret . divisional superintendent of postal department.) தோற்றம் : 23/01/ 1923 — மறைவு : 09/04/ 2015

துயர் பகிர்வோம்.

திரு.சின்னப்பாபிள்ளை தம்பிமுத்து
(Ret . divisional superintendent of postal department.)

யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சின்னப்பாபிள்ளை தம்பிமுத்து அவர்கள் 09-04-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிமுத்து, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், வேலுப்பிள்ளை கண்ணகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வள்ளிநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

நவமலர்(பிரான்ஸ்), ரஞ்சிதமலர், சரோஜா, காலஞ்சென்ற முத்தாம்பிகை, இந்திராணி(கனடா), கிருஷ்ணகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், தங்கரத்தினம், தம்பி, மற்றும் ராஜேஸ்வரி(கனடா), கமலாம்பிகை(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

விமலநாதன், சிவகுமார், செந்தில்குமரன்(கனடா), விஜிதாம்பரநாதன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, நாகலிங்கம், சோமசுந்தரம், ஆறுமுகம், மற்றும் கமலாசனி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுதாஜினி, சுதர்சன், செனிகா, திபியன், பெனிஷா, சியாந்தன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-04-2015 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாமித்திடல் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.

 

தகவல்:

மனைவி,பிள்ளைகள்,மருமக்கள்.
தொடர்புகட்கு:
இந்திராணி – விஜி(கனடா)     416-2671812
416-9992254
சிவகுமார் (இலங்கை)             94213215400
94776582085

திரு.வேலுப்பிள்ளை தம்பித்துரை

2015_tham

துயர்பகிர்வோம்

வளலாயைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் வளலாய், (மார்க்கம்) கனடா ஆகிய இடங்களில்  வாழ்ந்தவரும், முன்னாள் அச்சுவேலி கிராமசபைத் தலைவராகவும்,(சேர்மன்) இருந்த  திரு வேலுப்பிள்ளை தம்பித்துரை, ஆயுர்வேத வைத்தியர், (மார்க்கம்,) கனடா வைத்திய சாலையில் செவ்வாய்கிழமை இரவு 10.47 மணியளவில் (பங்குனி 31 2015) சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தெய்வானைபிள்ளை தம்பதிகளின் தவப்புதல்வரும், சீனிப்பிள்ளை செல்லம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

மதனமோகன்(கனடா), மோகனா(கனடா), மதிவதனி(கனடா), ரவிசந்திரமோகன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை(ஆசிரியர்), Dr.விசயரத்தினம், மற்றும் நாகரத்தினம் ஆகியோரின் பிரியமான சகோதரரும்,

வாசுகி, நடேசன், சத்தியநாதன், சுகிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தம்பையா, வடிவேலு, தம்பிராசா(செட்டிமாமா), மங்கையற்கரசி, தம்பிராசா(விதானையார்), மற்றும் விசாலாட்சி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜனகன், சாருஜா, சுஜன், அபிரா, சகீரன், விதுஷன், வினோஷன், சாயினா, மிதுஷன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.

தகவல்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

தொடர்புகளுக்கு ,
மதனமோகன் (மோகன்) +1 905 471 8239
மோகனா +1 289 660 1717
மதிவதனி +1 905 471 4969
ரவிசந்திரமோகன் +1 613 822 1433

நிகழ்வுகள்

பார்வைக்கு Saturday:04/04/2015:4.0Pm-8.0PM
sunday:4.0PM-8.0PM
Ogden Funeral Home, 4164 Sheppard Ave East, Scarborough

கிரியை :8.30AM Monday Ogden Funeral Home, 4164 Sheppard Ave East, Scarborough

தகனம்: 11.30AM ,St.JohnNorway Cemetry,256 kingston rd,M4L 1S7