Articles for May 2015

கோடைகால ஒன்றுகூடல் – 2015-கனடா

இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் -கனடா கிளை.

New Logo

செயற்குழுக் கூட்டம் .
காலம் : 06-06 2015 சனிக்கிழமை. காலை 10.00 மணி
இடம் : 260 Drinkwater RD , Brampton, L6y 5W4

விடயம் : இடைக்காடு பழையமாணவர் சங்கம் – கனடா கோடைகால ஒன்றுகூடல் – 2015
கனடாவாழ் இடைக்காடு வளலாய் மக்களின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் எதிர்வரும் யூலை 19 ந் திகதி ஞாயிறு (19.07.2015) அன்று ஸ்காபுறோ நெல்சன் பூங்காவில் நடைபெற ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
மேற்படி விடையம் தொடர்பாக அங்கத்தவர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அறிவதற்காகவும் அது சம்பந்தமான முடிவுகளை எடுப்பதற்காகவும், அங்கத்தவர்கள் , நலன் விரும்பிகள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்,
நன்றி
செயலாளர்.
N மகேசன்
30-05-2015.

Dr.ஞானசச்சிதானந்தசிவம் ஞானசுப்பிரமணியம்

துயர் பகிர்வோம்.

Gnanasachithananthasivam 5

அன்னை மடியில் : 15 ஆனி 1939 ஆண்டவன் அடியில் : 13 வைகாசி 2015

அச்சுவேலி, இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட ஒய்வுபெற்ற அரசு மருத்துவர் ஞானசச்சிதானந்தசிவம் ஞானசுப்பிரமணியம் 13 வைகாசி 2015 ம் திகதி புதன்கிழமை இடைக்காடு, இலங்கையில் காலமானார். அவர் காலஞ்சென்றவர்களான ஞானசுப்பிரமணியம், சின்னம்மா தம்பதியரின் அன்பு மகனும், இராமசாமி, இராசமணி தம்பதியரின் பாசமிகு மருமகனும், ஞானசபேசன் (கனடா) இன் பிரியமான தம்பியும், சாரதாதேவியின் அன்பு கணவரும், வாகீசன், சிவதர்சினி, சர்மிளா ஆகியோரின் பாசமிகு தந்தையும், செல்வரதனி, செந்தில்ராஜ் ஆகியோரின் பிரியமான மாமனாரும், அனிஸ் இன் அன்புப் பேரனுமாவார். அன்னாரின் இறுதிச் சடங்குகள் இடைக்காட்டில் அவரில்லத்தில் புதன் கிழமை அன்று நடைபெற்று இடைக்காடு மாயனாத்தில் அவர் பூதஉடல் தகனம் செய்யப்பட்டது.

இவ்வறித்தலை உற்றாரும் உறவினர்களும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.

தகவல்

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வாகீசன் – மகன் – அவுஸ்திரேலியா     +6139700 6127

சாரதா – மனைவி – இலங்கை       +94112364194

தர்சினி – மகள் – இலங்கை        +94711111002

 

புத்தாண்டுப் பிரகடனம்

thஇனிய
இணையவாசகர்களுக்கு,
“இளைய பண்டிதர் ” என்னும்
இடைக்காடு மண்ணில் இருந்து
இணையத்தளத்தில்
இனிவரும் காலத்தில் எம்மோடு,

புத்தாண்டுப் பிரகடனம்

———————–*———————–

மெல்லிய வெய்யினிற் குளித்தே

துல்லியமாய் உலருகின்ற

“புல்லின் மீதான பனித்துளிகள்” அல்ல…..,

……சொல்லிலடங்கா என் சோகங்கள் !,,,,

இந்நிலையிலும்—————

“ போற்றுவோர் போற்றட்டும் ; புழுதி வாரித்

தூற்றுவோர் தூற்றட்டும் “ என ,

ஏற்ற எக்கருத்தினையும் எடுத்துச் சொல்வேன்

—–எதுவரினும்,

ஆற்றலுடன் எதிர் கொள்வேன் ; அஞ்சேன் !,….

…..இது , ஒன்றும் தலைக்கனம் அன்று;

“ தளராத தன்னம்பிக்கையின் இலக்கணமே” என்று;

தயை கூர்ந்து கொள்க !.

நன்றி.

இடைக்காடு இளைய பண்டிதன்

திருமதி நாகரத்தினம் தம்பிராசா

Atthai

தோற்றம் : 13 மார்கழி 1919 மறைவு : 30 சித்திரை 2015

துயர் பகிர்வோம்.

அச்சுவேலி வளலாய்யை பிறப்பிடமாகவும் கொக்குவிலை வதிவிடமாகவும் கொண்ட ஒய்வுபெற்ற ஆசிரியை திருமதி நாகரத்தினம் தம்பிராசா 30 சித்திரை 2015 வியாழக்கிழமை அன்று இலங்கையில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற அருளம்பலம் தம்பிராசா (விதானையார்) அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தெய்வானைபிள்ளை தம்பதிகளின் செல்ல மகளும் அருளம்பலம் லச்சுமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை வாத்தியார் வைத்தியர் விசயரத்தினம் வைத்தியர் தம்பித்துரை ஆகியோரின் பாசமுள்ள சகோதரியும் காலஞ்சென்ற திருமதி ரத்தினம்மா பொன்னுத்துரையின் மைத்துனியும் அருளானந்தம், தனலச்சுமி, சுகிர்தலச்சுமி (கனடா), காலஞ்சென்ற ஜெயலச்சுமி ஆகியோரின் பாசமிகு தாயாரும், இராசேஸ்வரி, சிவலிங்கம், சண்முகரத்தினம் ஆகியோரின் அன்பு மாமியும்
கௌதமி, சுபாஷிணி, மயூரகாந்த் (கனடா), வத்சலா (சிங்கப்பூர்) கமலகாந்தன், சசிகாந்த், வனஜா, கிருத்திகா (கனடா), கீதன் (கனடா), மாலவன் (கனடா) துஷ்யந்தி மயூரகாந்த (கனடா), திவாகரன் சிவம் (சிங்கப்பூர்), Dr. கவின் பஸ்தியாம் பிள்ளை (கனடா) ஆகியோரின் அருமைப் பேத்தியுமாவார் அன்னாரின் இறுதிசடங்குகள் தகனம் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.

சிதம்பரப்பிள்ளை சண்முகரத்தினம் (அப்பன்)

+14162660542

+14162664444

தம்பிராசா அருளானந்தம்

+94776533283

தனலச்சுமி சிவலிங்கம்

+94772227708

கமலகாந்தன் சிவலிங்கம்