Articles for July 2015

கேட் “” காது “” கள்

download

ஒருகாதால் வாங்கி மறு காதால் விட வேண்டிய சங்கதிகள் பலவும் எம்மைச் சுற்றி உள்ளன, ” முதுகின் பின்னால் எழும் விமர்சனங்களில்” அதிகமானவை அத்தகையனவே! பெரும்பாலும் முகத்துதிக்கு மயங்குபவர் தமது முகத்திற்கு முன்னால் காட்டமான கருத்தெதையும் எதிர்கொள்ள நேரிடுகின்ற சந்தர்ப்பங்களில், அதனைச் செவிமடுப்பதனைத் தவிர்த்துக் கொள்வர். அப்போது அவர் காதுகள் கேட் “காது ” களாகி விடும், பொதுவில் இது இயல்பே !

ஆனால், இந்நிலையானது சில சமயங்களில் விபரீதங்கள் எதனையும் அறிந்துகொள்ள முடியாத இருளுக்குள் அவர்களை அமிழ்த்தி விடக்கூடும் . அவ்விதம் செவி வழியாக தெரியவருகின்ற ஒரு பாரதூரமான கருத்து அல்லது தகவலின் உண்மைத்தன்மையை, உடனுக்குடன் பரிசீலித்து அதற்குரிய பரிகாரம் தேடப்படாத விடத்து பின் விளைவுகள் மோசமாவதற்கு இடமிருக்கின்றது………………. எடுத்துக் காட்டாக………………

வெளியூரில்- வெளிநாட்டில் கல்வி பயிலும்- தொழில் புரியும் அல்லது தேடும் “இளைஞர்” ஒருவரின் நடத்தைப் பிறழ்வுகள் பற்றிய தகவல் அவரின் குடும்ப உறவுகளுக்கு காற்று வாக்கில் கிடைத்திருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இது வெறும் வதந்தியாக இருக்கலாம்; இன்னும் குழப்ப அனலில் கூதல் காய்பவரின் சில்மிக்ஷக் கூத்தாகவும் கூட இருக்கலாம் அதற்காக- இச் செய்தியானது விசுவாசப் பொறுப்புடனா அல்லது விசமக் காழ்ப்புடனா கசிந்துள்ளது, என்றெலாம் தமக்குள்ளே விவாதித்துக் கொண்டிருந்தால் – அது காலத்தையே விரமாக்கும். இந்தத் தயக்க இடைவெளியில், அங்கிருக்கும் நிலைவரங்கள் தீவிரமடைந்து போய்விடுவதற்கு நிறையச் சாத்தியமுள்ளது.

இந்தத் தவற் சூத்திரதாரி எவரோ அவர் தனிப்பட்ட ரீதியில் ஒழுங்கீனர் என்று பெயர் எடுத்திருக்கக்கூடும். இந்தக் கட்டத்தில் அது ஒரு பொருட்டே அல்ல! குறித்த தகவலின்நிஜ சொரூபம்தான் அக்கறைப்பட வேண்டிய- அவசரம் காட்டத்தகுந்த அவசியவிடயமாகும். குற்றம் சுமந்திருக்கும் தமது அந்த உறவின் எதிர்கால சுபீட்சத்தில்தான் சம்பந்தப்பட்ட குடுப்பத்தினரின் முழுக்கவனமும் குவிக்கப்பட வேண்டும். அவர்கள் சடுதியாக்க் களத்திலிறங்கி அடி முதல் நுனி ஈறாக ஆராய வேண்டும் இதுவே அர்ப்பணிப்புடனான முதன்மைப் பணியாகும்.

எடுத்த எடுப்பில் அந்த உறவினை நேரடி விசாரணைக்குட்படுத்தல் ஏற்புடையதன்று, அவர் உண்மையான அப்பாவி ஆயின் இவ்வித நெருக்குவாரம் அவர் மன நிலையில் எதிர்மறையான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். குற்றம் உண்மையாக இருக்கும் பட்சத்திலோ-தம்மவர் விழிப்படைந்து விட்டனர் என அறிந்ததும் , முன்னெச்சரிக்கையாக தமக்கெதிரான சாட்சியங்களையும் தடயங்களையும், கலைப்பதில் அவர் மும்முரமாவார், ஒரு பொய்யைமேவுவதற்கு ஒராயிரம் பொய்களை உற்பத்தியாக்கும் முனைப்பில் அவர் இறங்குவார். தம்மை நியாயப்படுத்திக் கொள்வதற்கு எப்படியெல்லாமோ கபட தந்திரங்களைக் கையாண்டு, தமது காலத்தையும் கைப்பொருளையும் எல்லைமீறிச் செலவிடும் நிலைக்கு அவர் பரிதாபகரமாகத் தள்ளப்படுவார்.

எனவே, கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்யும் வீனான வினைக்கு ஆளாகமல் இக் குடும்பமானது உரிய காலத்தில் மதி நுட்ப நிதானத்துடன் செயற்பட்டால் மாத்திரமே இவ் வகையான வீழ்ச்சியில் இருந்து மீண்டு வரலாம். இதனை விடுத்து, துரதிட்ட வசமாக- தமது வாரிசு மீதான கண்மூடித்தனமான பாசமானது, மெய்மையின் தரிசனத்திற்கு கண்களைத் திரையிட்டு நிதர்சனத்தின் குரலையும் கிரகிக்க முடியாபடி இவர் காதுகளைக் கேட்” காது ” களாகவே ஆக்குமாயின் -குறுகிய காலக் கழிவில்,இந்தக் குடும்பத்தின் நியாயபூர்வ நம்பிக்கைகள் பலவும், எண்ணியிருந்த எதிர்பார்ப்புக்கள், பிறவும் பாழாகும்!

இவர்தம் இயல்பு வாழ்வும், சமூக மதிப்பும் தலைகீழாகும்!!

இடைக்காடு இளைய பண்டிதன்.

திரு.தம்பு கந்தசாமி

துயர் பகிர்வோம்.

2015_image-b6eff2a72f326236532ab29acbbb94f2d1a1c1b4fecf58c3e1085ac44e1d7a22-V

திரு.தம்பு கந்தசாமி அவர்கள் 19.07.2015 அன்று இறைபதம்அடைந்தார். இவர் தங்கம்மாவின் அன்புக் கணவரும். சிவபாக்கியம்.சின்ராசு.தனேஸ்வரன்(ஈசன்).ஈஸ்வரி
ஆகியோரின் அன்புச் சகோதரனும்.கேசவராஜ்.சிகாதரன்.கஜந்தினி ஆகியோரின் பாசமிகு அப்பாவும். ராஜகுமாரி. பிறேமவதனி. தனேஸ்வரன் ஆகிஆயாரின் மாமனாரும். நிதுர்சன். தனுஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.இவரின் இறுதிக்கிரகைகள் 20.07.15 அன்று அவரது இல்லத்தில்(இடைக்காட்டில்) நடைபெறும்.
அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.

மேலதிகத் தொடர்புகளுக்கு:
ராசன்-0094778529870
பாபு-0094778010237
ஈசன்(சுவிஸ்)-0041344110509

பசித்தவ(ரி)ன் பழங்கணக்கு

images (1)

வாழ்ந்து கெட்டவர் வரிசைக்கு வந்து விட்டவர், பழைய கதைகள் பலவற்றைத தம்முள்ளே பரிமாறிக்கொள்வதில்
பெரிதும் சுகங்காண்பர். அநேகமாக அந்திம காலத்தை அண்மித்துக் கொண்டிருப்பவர் தாம் இவ்விதமாகவும் ஆறுதலைத் தேடிக்கொள்வர்.
தமது சமகால அநாதரவு நிலையை, ஏதிலிகளாகப் பிறரை எதிர்பார்த்திருக்க வேண்டிய ஏக்கத்தை மற்றும் சுய இரக்கத்தை எல்லாம் மறக்கவும் மறைக்கவும் இதனூடே முயல்வர், மன ஓர்மத்துடனான சுய மரியாதையை இன்னும் இழக்கதிருக்கும் திட சித்தரே இதிற் சித்தி எய்துவர். தமது வீழ்ச்சியின் கர்த்தர் தாம் அல்லர் என்கின்ற தீர்க்கமான குற்றவுணர்ச்சி ஏதுமற்ற தன்னம்பிக்கை சார்ந்தே அவர் தம் போக்கு அமைந்திருக்கும்,
இந் நிலைப்பாடின் நியாய வலுவை , குறித்த நபரின் கடந்த காலத்து நடப்புகளை நன்கூன்றிக் கவனித்தறிந்து தெளீந்தவர்களால்தான் மதிப்பிட இயலும். எவ்வாறாயினும் இவர்களிற் பெரும்பாலனோர்க்கு உளவளத்துணை என்பது அவசியம் அதற்கு மேலாக சமூக ஒத்துழைப்பும் அத்தியாவசியமானதாகும்.
“காய்த்த மரம் தான் கல்லெறி வாங்கும்,”
என்பதில்லை, காயப்பட்டோ, நோயுற்றோ, முதுமையினாலோ ஊனமடைந்திருக்க கூடிய எந்தப்பிராணியும் கல்லெறிபடுவதற்குச் சாத்தியமுண்டு. ஆம், சிறுத்தைப்புலியின் வலிமையானது சிறுத்து விட்டால் , சிறு எலி கூட அதன் மீதேறிச் சிறுநீர் கழிக்கும், தான். இக் கூற்றுகள் நடைமுறையில் இயல்பானவைகளாக இருக்கலாம். மனிதாபிமான மிக்க மனிதரைப் பொறுத்தவரை, உகந்த மாற்று மார்க்கங்களினால் இந் நிலைகளை மாற்றி அமைக்க முடியும். முன்னர் “ சுற்றஞ் சூழ சுகபோக வாழ்வியற்றியவர்கள் இப்போது அன்றாட சீவனோபாயத்திற்கே அல்லாட நேர்வது, அவர்களின் முன்னைய துர் நடத்தைகள், கெட்ட சகவாசங்கள், ஊதாரிச் செலவினங்கள், வீம்பான ஆடம்பரங்கள், .. போன்ற பலவீனங்களின் விபரீத விளைவே! என எழுந்தமானமாக- ஒட்டு மொத்தத்தில் இவர்களை ஒதுக்கி வைத்தல் ஆகாது, ஏளனத்துடன் அணுகி அவமானப்படுத்துவதும் தகாது, மரத்தால் விழுந்தவரை மாடேறி மிதித்தாற்” போலவும், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக”வும் அமையும்.
இப்படியான ஒருவரின் மரணம் நிகழ்ந்த பின் ஆர்ப்பாட்டமாகத் துக்கம் அனுட்டிப்பதிலோ, அஞ்சலி விழாக்கள் நடாத்துவதிலோ எந்த அர்த்தமுமில்லை, நடைப்பிணமாக வாழ்ந்த காலத்தில் அவரை அலட்சியப்படுத்திவிட்டு, பாடையில் உயிரற்ற பிணமாக “அது” பயணிக்கும்போது “கோடையின் நிழல் தருவாகத் திகழ்ந்தவரே இவர்” என்று கொண்டாடுகின்ற வரட்டுச் சம்பிரதாயங்களால் ஆகப் போவது தான் என்ன?
ஆதலால்….
இத்தகையோருக்கு உபகாரம் உவப்பதற்கு மனமோ இடமோ இல்லையெனில், உபத்திரவம் கொடுக்காது இவர்களை இவர்பாட்டில் இருக்க விடலாம். இன்னும் வற்றிப்போகாத ஈர நெஞ்சுடையோர் சிலரேனும் இவர்கட்குக் கைகொடுத்துதவக்கூடும்.
அதுவரை….
சொந்தத் தினவுகளைச் சொறிந்தவாறே இவர்கள் அதிற் கிறங்கட்டும்! ஆற அமர அமர்ந்து தமது பழைய காயங்களைத் தடவி ஆற்றியபடி அமைதியாய் உறங்கட்டும்!!.

இடைக்காடு இளைய பண்டிதன்.

சிக்கனம்

imagesசிந்திப்போம்…. சிந்திப்போம்

சிக்கனம்

பணம்…..இன்றைய உலகில் எம்மை வாழவைக்கும் உயிரில்லாத, ஒரு உயிருள்ள ஜீவன்.

கவலையில்லாமல், மகிழ்ச்சியாக, நிம்மதியாக வாழ்வதற்கு, அயலவர்கள், மனைவிமக்கள், உறவிர், ஊரவர் எம்மை மதிப்பதற்கு, சமூகத்தில் ஓர் அந்தஸ்து கிடைப்பதற்கு,  எல்லாமே எம்மிடமுள்ள பணதின் அளவைக்கொண்டுதான் தீர்மானிக்கப் படுகின்றது

இப்படியன பணத்தை பலரும் பலவாறு கூறியுள்ளார்கள்..

காசேதான் களவுளடா., கடவுழுக்கும் இது தெரியுமப்பா.

கைக்கு கைமாறும் பணமே உன்னைக்கைப்பத்த நினைக்குது மனமே.

இல்லானை இல்லாழும் வேண்டாள்.

கழுத்துவரைக்கும் பணம் இருந்தால் நீ அதற்கு எசமான்., கழுத்திகு மேலே பணம் இருந்தால் அது உனக்கு எசமான்.

அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால் அவனும் திருடனும் ஒன்றாகும்.

உன்னிடம் பணம் இல்லாவிடால் உன்னை மற்றவர்களுக்கு தெரியது, உன்னிடம் பணம்  இருந்தால் உனக்கு மற்றவர்களைத்தெரியாது..

இப்படி ஒரு விசித்திரமான பொருள்தான், பணம்.

உயிரில்லாத பணம் உயிருள்ள மனிதனைப் பாடாய்ப் படுத்துகின்றது.

பணம் என்ன பணம், இன்றுவரும் நாளை போகும்.,பணத்தை என்றும் சம்பாதிதுக் கொள்ளலாம். ஆனால் குணம் தான் முக்கியமானது என வாய் கிழியக்கத்தினாலும் நடைமுறையில் பணத்துக்கு இணையாக ஏதுமில்லை. பணத்தி தேடி யார்தான் ஓடுவதில்லை?

பணம் என்றால் பிணமும் வாய்திறக்கும் என்று சும்மாவா சொன்னார்கள்?

இப்படியான பணத்தை எங்கே தேடுவது? எப்படி சம்பாதிப்பது?

ஒகோவென்று சம்பதிப்போர் கடனில் தத்தளிக்கும்போது குறைவான வருமானம் பெறும் சிலர் ஓகோவென்று இருக்கிறார்களே, அது எப்படி?

காரணம் சிக்கனம் தான்.

வரவு எட்டணா, செலவு பத்தணா என்றால் எப்படி பணத்தினை மீதப்படுத்தமுடியும்?

குருவியின் தலையில் பனங்காயை வைத்தால் .. அதோ கதிதான்.

விரலுக்கேத்த வீக்கம் வேண்டும்.

எம் தராதரத்தை எண்ணுவதில்லை, வரட்டுக் கெளரவம் கொடிகட்டிப்பறக்கிறது.

என் நண்பன் ஒரு கார் வைத்திருந்தால் நான் இரண்டுகார் வயத்திருக்கவேண்டும்.

என்தம்பி வீடுவாங்கிவிட்டால் நான் அதைவிடப்பெரிதான வீடு வாக்கவேண்டும்.

பகட்டுக்காக பிறந்தநாள் கொண்டாட்டம், பூப்புனிதநீராடட்டு விழா, தகுதிக்கு மிஞ்சிய ஆடம்பரத் திருமணம், வீட்டில் ஏற்கனவே எல்லாம் இருந்தும், கழிவு விலையில் கிடைக்கிறது என்பதற்காக கடன் பட்டுஆடம்பரப்பொருட்களை வாங்கி வீட்டில் குப்பைகளை நிரப்பி விடுகின்றோம்.

எமது நாட்டில் கடனற்ற நிம்மதியான வாழ்வு வாழ்ந்த நாம் கனடா வந்துகடன்காரர் ஆகிவிட்டோம். காரணம் பணத்தாசை, வரவுக்குமிஞ்சிய செலவு.

கடனை அடைக்கவேண்டுமென்பதற்காக இரவு பகல் பாராது ஒரு வேலைகு இரு வேலை. மனைவிகூட வீட்டில் இருக்கமுடியவில்லை. பிள்ளைகளுடன்  பொழுதைக்கழிக்க முடியவில்லை. கடன் பட்டு வாங்கிய வீட்டில் படுத்துறங்க நேரமில்லை.

நித்திரையைத் தொலைத்துவிட்டோம். நிம்மதியை இழந்துவிட்டோம்.

சரி, குறைவாகச் செலவழிப்போம், சிக்கனமாக இருப்போம் என்பதற்காக மலிவானதை வாங்கி மறுநாளே குப்பைக்கூடையை நிரப்பிவிடுகின்றோம் .பிள்ளயார் பிடிக்கப்போய் குரங்கான கதையாக..

சிக்கனம் முக்கியம், புத்திசாலித்தனம் அதிவிடமுக்கியம்.

தன் நிலை அறிந்த மனிதன் ஊரவரைப்பற்றிக் கவலைப்படுவதிலை. அவன் நிம்மதியாக உறங்குகிறான், அவன் கதவை கடன்காரன் தட்டுவதில்லை.

தன்நிலை அறியாதவன், ஊதாரித்தனமானவன், உறக்கத்தை தொலைத்து நிற்கிறான். கடன்காரன் அவன் உடன்பிறப்பாகி விடுகின்றான்.

இப்போதெல்லம் எவரும் கடிதம் எழுதுவதில்லை., அதற்கான தேவை இல்லாது போய்விட்டது.

அப்போதெல்லம் கைபேசிகள் இல்லை. எல்லாவற்றுக்கும் கடிதம்தான்.

தபால் உறை மலிவானது, தபால் அட்டை அதைவிட மலிவானது.

அவர் ஒரு சிக்கனவாதி, கடிதம் போடுவதற்கு தபாலகம் போனார்., விசாரித்தார். தபாலுறை 15 சதம், தபாலட்டை 10 சதம். ஒரு தபாலட்டையை வாங்கி கடிதம் எழுதினார். இடம் போதவில்லை .இன்னொரு அட்டையைவாங்கி எழுதி முடித்தார்.

ஐந்து சதம் மிச்சம்பிடிக்கப்போய் ஐந்து சதம் மேலதிக நட்டம் ஏற்பட்டுவிட்டது.

வேடிக்கை என்ன தெரியுமா?

உரியவருக்கு ஒரு தபாலட்டை மட்டுமே கிடைத்தது, மற்றது கிடைக்கவில்லை.

கடிதம் கிடைத்தவருக்கு ஒன்றுமே புரியவில்லை.

பணத்தையும் இழந்து…பலனையும் இழந்து….

சிக்கனம் தேவை,  புத்திசாலித்தனமான சிக்கனம் தேவை.

 

பொன் கந்த்வேல்-  கனடா  04.7.2015

Canada Day

canada-day-20110701 images