Articles for November 2015

அவதிப் பொதுமை

அவதிப் பொதுமை

இங்கே அவதி எனும் பதம்; எதனையும் ஆராய முற்படாத அவசரம் என்பதாக அர்த்தப் படுகிறது. ;கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் போய்- தீர விசாரித்தறிவதே மெய்; என்ற முதுமொழி , வழக்கொழிந்து வருவது போலத் தெரிகின்றது, சாட்சியங்களின் அடிப்படையில் வழங்கப்படும் சட்டபூர்வமான தீர்ப்புக்கள் கூட சிலவேளைகளில் சர்ச்சைக்குள்ளாகின்றன,
பொதுவாழ்வில் ஒருவர் எவ்வளவுதான் நன்மைகளைச் சமூகத்திற்கு நயந்திருப்பினும் சந்தர்ப்பவசமாக நேரக்கூடிய ஒரு சிறு தவறு , ;வெண்திரையின் கரும் புள்ளியாகத் தெட்டத்தெளிவுறத் தெரியும், குறித்த நபருக்கு ஏதேனும் விபரீத விளைவு விளையுமாயின் ,இந்தக் கரும்புள்ளியே அதற்குக் காரணியாக்கப் படுகிறது,
சூழ்ந்திருந்த அவ்வினையே இது; என்பது சுருக்கமான தீர்ப்பாகி விடுகிறது, தமது இறுதிக் காலத்தில் ஓரளவு பொருளாதார பலத்துடனும் சமூக மதிப்புடனும் இயங்கிக் கொண்டிருக்கும் ஒருவருக்கு , அவரது ஒரே வாரிசினால் எதிர்பாராத பேரிழப்பு ஏற்படுகிறது என வைத்துக் கொள்ளலாம், வருவாயிலும் கூடுதலாகச் செலவினம் உயர்கையில் ; சாண் ஏற முழம் சறுக்குகிறதே!…எனச் சம்மந்தப்பட்டோர் அங்கலாய்ப்பர், இங்கோ மில்லி மீற்றர் ஏற கிலோ மீற்றர் சறுக்கிற அதலபாதாள வீழ்ச்சி, பெரும் புதிராக, இத் தேட்டங்கள் யாவும் போய்த் தொலைந்த இடம் இப்பிரபஞ்சத்தின் ஏதுமொரு கருந்துளையோ? எனும் படியாக ஆச்சரியமே எல்லோர் எண்ணங்களிலும் நிலவுகிறது, அவரது குடும்பம் தனிமைப்படுகிறது,
இப்போது குறித்த குடும்ம்பத்தலைவரின் ஏதோ கடந்த கால பாரிய தவறுதான் அவர்களின் நரக நுழைவுக்கு மூலகாரணி! என்ற பிரேத பரிசோதனை அறிக்கை பிரகடனமாகிறது, இவ்வகையான குத்ர்க்கக் கூற்றுக்களை நியாப்படுத்துவதற்கு; அவதிப் பொதுமை: ஏதுவாகிறது, உண்மையில், பாதணிகளுக்குப் பொருந்துமாறு பாதங்களைச் செதுக்கும்” அபத்த காரியமே இங்கு நிகழ்ந்திருக்கின்றது,
மெய்–பொய்களின் தாற்பரியங்களை வேறு படுத்திப் புரிந்து கொள்ள முன்வாராத சில குறுகிய மனதுடையோரின் இந்த அவதிப் பொதுமைத் தீர்ப்புக்கள் அசல் தீர்வுகள் அல்ல!, அவர்களின் சுய அளவு கருவிகளினால் ஏற்கனவே நிர்ணயிக்கக் பட்டிருக்கும் கணிப்பீடுகளே அவை,
இந் நிலையானது தனி நபர் அல்லது குடும்பமொன்றின் சுமுகமான சமூக உறவிற்கோ சகஜமான இயல்பு வாழ்விற்கோ துணை வராது, மாறாக மன விரிசல்களை மேலும் விசாலிப்பதற்கும், அவலக் குழிகளை இன்னும் ஆழப்படுத்துவதற்குமே வகை செய்யும்,
பொதுவில், இந்த ;அவதிப் பொதுமை: ஆனது, குதர்க்க வாதங்களின் குவியல், அபத்தங்களின் அரைவேக்காட்டு அவியல், அவ்வளவே!.

இடைக்காடு இளைய பண்டிதன்.

திரு.சிற்றம்பலம் பாலசிங்கம்

துயர் பகிர்வோம்.

2015_12240057_1085557924788757_4730705717813767772_n

திரு.சிற்றம்பலம் பாலசிங்கம்

இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வட்டக்கச்சியை வதிவிடமாகவும் கொண்ட சிற்றம்பலம்
பாலசிங்கம்(கோழிப்பண்ணை பாலசிங்கம்) அவர்கள் இன்று 16/11/2015 திங்கட்கிழமை இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம்-கண்ணகைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான பொன்னையா-வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற தம்புச்சாமி அவர்களின் அன்புச் சகோதரரும் இராசம்மாவின் அன்புக்கணவரும் காலஞ்சென்ற நாகம்மா மற்றும் செல்லத்துரை, காலஞ்சென்ற செல்லம்மா, தெய்வானை(Canada) காலஞ்சென்ற சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் காலஞ்சென்றவர்களான சிவசக்தி, புவனசக்தி மற்றும் பராசக்தி(Canada), வெற்றிவேல்(UK), பர்வதசக்தி(ஆசிரியை, கிளி/கிளிநொச்சி மகா வித்தியாலயம்), ஆனந்தசக்தி(ஆசிரியை, கிளி/இராமநாதபுரம் மகாவித்தியாலயம்) காலஞ்சென்ற திலகசக்தி ஆகியோரின் பாசமிகு தந்தையாரும் சிவகுமார்(Germany), கமலேஸ்வரன்(Canada), ஜெயவதனி(UK), விமலேஸ்வரன்(DPDHS, கிளிநொச்சி), மோகனகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும் மயூரன், டினேசன், டனுசன், கௌதமி, பிரேமி, பவிக்சன், பவிந்தன், நிமோதரன், வினோஜன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் வட்டக்கச்சியில் புதன் கிழமை 18/11/2015 அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று அதன் பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.

கிரியை நடைபெறும் இடம்
இல 727 சிவிக் சென்ரர்
வட்டக்கச்சி, கிளிநொச்சி

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு
வெற்றிவேல்(UK): 020 85745720
பராசக்தி: +1 514 7314805
வட்டக்கச்சி: + 94 21 2060352/ 0778138876

Diwali 2015

மனம் நிறைந்த இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்.

2015

இடைக்காடு பழையமாணவர் சங்கம்

images (1)