Articles for February 2016

“வெள்ளி விழா மலர்-2016”

இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம்– கனடா

“வெள்ளி விழா மலர்-2016”

        இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க கனடா கிளையின் 25வது வருட நிறைவை அடுத்து ” வெள்ளி விழா மலர்” ஒன்று வெளியிட இருப்பது பற்றி நாம் முன்பே அறிய தந்திருந்தோம். இம்மலரானது  இவ்வருட(2016) குளிர்கால ஒன்று கூடலின் போது வெளியிடப்பட உள்ளது.

இம் மலருக்கான ஆக்கங்கங்களை உலகெங்கும் வாழும் இடைக்காடு மகா வித்யாலய பழைய மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

உங்கள் ஆக்கங்கங்களை கீழ் வரும் தலைப்புகளுடன் தொடர்பு படுத்தி, தமிழ் அல்லது ஆங்கில மொழியில், type செய்து June 30ம் திகதிக்கு முன்னர் பின்வரும் e-mail addresses இற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தலைப்புகள்:

1) கனடா  பழைய மாணவர் சங்கமும் அதன் வளர்ச்சி, நிகழ்வுகள்

2) எமது ஊர் அல்லது பாடசாலையுடன் தொடர்புடைய அனுபவங்கள்

3)  கதை, கவிதை, கட்டுரைகள்

4) மருத்துவம், பொது அறிவு

தொடர்பு:

1) S.Sivaruby              kapilan@rogers.com               647-280-4281

2) G.Lojini                  loji66@gmail.com                   416-315-0654

3) U.Sathiya                sathiya4321@gmail.com         416-671-7146

4) A.Rajani                  rajanisaru@hotmail.com         416-618-4021

5) S.Theivamani          rubansundram@yahoo.ca      647-923-6523

முக்கிய குறிப்பு:

ஆக்கங்கங்கள் யாவும் எவரையும் புண் படுத்தாத முறையில், நடு நிலையாக, அரசியல் சார்பற்ற முறையில் இருத்தல் வேண்டும்.

ஆக்கங்கங்களில் எதாவது  மாற்றம் ஏற்படுத்த வேண்டுமெனின் எழுத்தாளரின் அனுமதி பெற்ற பின்பே மாற்றம் செய்யப்படும்.

செயற்குழுவிற்கே இம் மலரில் வெளியிடப்பட இருக்கும்  ஆக்கங்கங்கள் பற்றிய இறுதி முடிவை எடுக்கும் உரிமை உரியதாகும்.

நன்றி!

செயற்குழு

இடைக்காடு ம.வி பழைய சங்கம் – கனடா

Feb 20, 2016

கண்ணீர் அஞ்சலி

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.

_Principal_(1)

சாப்பாட்டு ராமன்கள்

சாப்பாட்டு ராமன்கள்

images

இதுவும் ஒரு சாப்பாட்டைப்பற்றிய சங்கதிதான்

அளவுக்கதிகமாக, அதாவது தமது இயலுமைக்கும் அப்பால் பல மடங்கு அதிகமாக உண்பவர்களை சாபாட்டு ராமன்கள் என அழைப்பது வழக்கமாகும். இதன் காரணம் எமக்கு சரியாகத்தெரியவில்லை. ஒருகாலத்தில் ஏறுக்குமாறாக சாப்பிடும் ராமன் என்றபெயரையுடைய ஒருவன் இருந்திருக்கலாம். அதனால் இப்பெயர் வந்தும் இருக்கலாம்.

மனிதன் உட்பட அனைத்து சீவராசிக|ளும் உணவை உண்கின்றன. அவை தமது வயிற்றுப்பசிக்காகவே உண்கின்றன. அவை பசிக்காகவன்றி ருசிக்காக உண்பதில்லை. மனிதன் மட்டுமே பசிக்காக மட்டுமன்றி ருசிக்காகவும் உண்கின்றான்.

ஆதிகால மனிதன் மிருகங்களை வேட்டையாடி பச்சையாக இறைச்சிகளை உண்டபோது அவனும் பசிக்காகவே உண்டுகொண்டிருந்தான். எப்போது உணவை தீயில் வேகவைத்து உண்டபோது அதிலே ருசி ஏற்படுவதைக் கண்டானோ அன்றைக்கே உணவு பற்றிய அவனது சிந்தனையில் திருப்பம் ஏற்படத்தொடங்கிவிட்டது. அன்று ஆரம்பித்த அவனது உணவு வேட்கை இன்றளவும் தீர்ந்தபாடில்லை.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள்.

உயிர் வாழ்வதற்கு உணவு இன்றியமையாததே. ஆனால் அதன்மேல் அதீத வேட்கைகொண்டு நாவுக்கு தீனிபோடப்புறப்பட்டு அளவுக்கு அதிகமாக உணவு உண்போர்  பருத்த சரீரத்தை உடையவர்களாகி வியாதிக்கு உபட்டு  விரைவிலேயே இறந்துபோகின்றனர். அதேவேளை வறிய நாடுகளில் உணவுக்கு வழியின்றி பட்டினியாலும் சிலர் இறந்துபோகின்றனர். கவலைக்குரிய விடயம் என்னவென்றால்  பட்டினியால் இறப்போரைவிட  அளவுக்கதிகமாக உணவுண்டு இறப்பவர்களே அதிகம் என்பதே. இவை தெரிந்தும் நாவுக்கு  தீனிபோட மக்கள் செலவிடும் பணம் கொஞ்சநஞ்சமன்று.

மகாபாரதக்கதையில்  பகாசுரனுக்கு கொண்டுசென்ற ஒரு வண்டி சோற்றையும் கறிகளையும் பகாசுரனைக்கொன்றுவிட்டு வீமனே முழுவதையும் சாப்பிட்டு முடித்த்தாக நாம் படித்தெபோது ஆச்சரியப்பட்டோம்.

இப்போதும்கூட சிலர் சிறியதோற்றமாக இருந்தாலும்  பெரும் தொகை உணவை உண்பதை நாம் பார்த்து ஆச்சரியப்படுவதுண்டு.

சிலர் நன்றாக கள் குடிப்பார்கள். போட்டியில் பத்துப்போத்தல் கள்ளையும் சாவகாசமாக குடித்துவிடுவார்கள். எமது  வயிறு மூன்று போத்தல் கள் கொள்ளக்கூடியதாக இருக்கலாம். எப்படி  பத்துப்போத்தல் கள் உள்ளே போனது? அதனால்தான் கள்ளுக்கொள்ளா வயிறுமில்லை,  முள்ளுக்கொள்ளா வேலியுமில்லை என்றார்கள்.

உண்ட களை தொண்டருக்கும் உண்டு என்பார்கள்.

ஆம், பாதிவயிறு சாப்பிட்டால் சாப்பாடு உன்னைச் சுமக்கும், முழுவயிறு சாப்பிட்டால் சாப்பாட்டை நீ சுமக்கவேண்டும்.

மூன்று வேளை சாப்பிடுபவன் ரோகி. இரண்டுவேளை சாப்பிடுபவன் போகி. ஒருவே|ளை சாப்பிடுபவன் யோகி எனக் கண்ணதாசன் கூறினார்.

இது ஒரு விசித்திரமான போட்டி.

அப்போது  யாழ்ப்பாணம் மலாயன் கபே வடை பிரபலமானது. இரண்டு வடை சாப்பிட்டாலே அது ஒரு சாப்பட்டுக்குச் சமனானது.

மலாயன் கபே வடை இருபது சாப்பிடவேண்டும். ஆயிரம் ரூபாய் பந்தயம். இதுதான் போட்டி.

ஒருவர் வெளிப்பட்டார். நான் சாப்பிடுகிறான். ஆனல் எனக்கு இரண்டு மணித்தியாலய அவகாசம் வேண்டும் என்று கூறினார். அவகாசம் கொடுக்கப்பட்து. போட்டியிலும். வெற்றி பெற்றார்.

அப்பொது ஒருவர் கேட்டர் , சரி நீ கெட்டிக்காரன்தான். அப்போ ஏன் இரண்டு மணித்தியால அவகாசம் கேட்டய், என்று.

இல்லை, என்னால் இருபது வடை சாப்பிடமுடியுமாவென்று மலாயன் கபேக்குப்போய் சாப்பிட்டு பார்துவந்தேன் என்று.

அப்போ, அவர் இருபது அல்ல நாற்பது வடை சாப்பிட்டு முடித்துள்ளார்.

வீமன் காலத்தில் வாழவே\ண்டிய சாப்பாட்டு ராமன்கள் இப்போதும் இங்கேயும் இருக்கவே செய்கின்றனர்.

 

பொன் கந்தெவேல்

கனடா. 04.2.2016

திரு. வடிவேலு சிவசுப்பிரமணியம்

துயர் பகிர்வோம்.

 

114834nnn,;

திரு வடிவேலு சிவசுப்பிரமணியம் அன்னை மடியில் : 15 யூன் 1944 — ஆண்டவன் அடியில் : 10 பெப்ரவரி 2016

யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வடிவேலு சிவசுப்பிரமணியம் அவர்கள் 10-02-2016 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வடிவேலு, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற வீரசிங்கம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மூத்த மருமகனும்,

காலஞ்சென்ற சின்னத்தங்கச்சி அவர்களின் அருமைக் கணவரும்,

சுயாகரன், பாஸ்கரன், கவிதா, மனோகரன், விஜிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற பராசத்திராஜா, சிறிசத்தியானந்தன், வைத்தீஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவாஜினி, சிவராஜினி, காலஞ்சென்ற ஞானசேகரன், காண்டீபன், விஜிதா, சுபாங்கி, முருகதாஸ், வாகினி, யதுஷா, தரண் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யோகமங்களம், இராசமணி, தங்கமலர், சிவமனோகரி, விக்கினேஸ்வரன் ஆகியோரின் அருமை மைத்துனரும்,

பிரியன், கீதா, ராஜீதன் ஆகியோரின் அன்பு பெரிய தந்தையும்,

கிருஷான், கிருபிகா, செந்தூரா, பவீந், திவ்யா, அபிதன், வினுஷன், விதுன், விமன், கியாஷா, கோபிதன் ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-02-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.

தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
சுயாகரன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41417101944
பாஸ்கரன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41418508312
பாஸ்கரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777565903
கவிதா — ஜெர்மனி
தொலைபேசி: +497022260041
மனோகரன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33973103396
விஜிதா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41525346921
பிரியன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777767742

திரு. அரியராசா இராஜகோபால்

துயர் பகிர்வோம்.

திரு. அரியராசா இராஜகோபால்

Thipam

வளலாய் அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட அரியராசா இராஜகோபால் (ஆங்கிலபாட ரியூசன் ஆசிரியர்) இன்று 09-02-2016 வளலாயில் இறைபதமடைந்தார். அன்னார் காலம் சென்றவர்களான அரியராசா சிவக்கொழுந்து தம்பதிகளின் சிரேஸ்ட மகனும் ருக்குமணிதேவி (அன்னக்கொடி), சிவபாலன் (கனடா), குணபாலன் (கனடா) , கமலாதேவி (ராணி) (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும், மகேந்திரன், யோகேஸ் வரி. சாந்தினி, ரட்ணஜோதி ஆகியோரின் அன்பு மைத்துனரும், அர்ச்சுன், சரண்யா, ஆருண்யா, சுபாகர் ,நிவேதிகா, தீபகா ஆகியோரின் அன்பு  பெரியப்பாவும், சாரு, ஆரதி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 10-02-2016 புதன்கிழமை வளலாயில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இடம் பெற்று பூதவுடல் நீர்ப்பெட்டி இந்து மயான த்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும். 

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.

தகவல் :
அ. சிவபாலன் (சகோதரர்) மொன்றியால் கனடா: 514-744-2905

தொடர்புகளுக்கு:
அ.குணபாலன் -மொன்றியால் கனடா : 514-748-4991