Articles for March 2016

திரு தம்பியப்பா ஆறுமுகசாமி

துயர் பகிர்வோம்.

 

2016_img929

திரு தம்பியப்பா ஆறுமுகசாமி தோற்றம்: 01/08/1947 மறைவு: 27/03/2016

 

இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு தம்பியப்பா ஆறுமுகசாமி

(சின்னத்தம்பி) அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (27/03/2016) காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பியப்பா- நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும் இராஜேஸ்வரி(செல்வி) அவர்களின் அன்பு கணவரும் ஆவர்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்

மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது

தகவல்: திருமதி சுகுணா உதயச்சந்திரன் – 020 35389603

வெள்ளி விழாமலர் பற்றிய கூட்டம்

இடைக்காடு பழைய மாணவர் சங்க கனடா கிளையின் வெள்ளி விழாமலர் பற்றிய ஆலோசனை கூட்டம்

எமது இரண்டவது “வெள்ளி விழாமலர்” பற்றிய ஆலோசனை கூட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம், 10ம் திகதி 4.00,மணி அளவில் திரு.திருமதி .சண்முகராஜா இந்திராணி இல்லத்தில் நடைபெற உள்ளது என்பதை அறியத்தருகிறோம் .

இடம்:

61-Seasons Dr,

Toronto,M1X 1X5.

நேரம்:  4:00 PM

நாள்:  Sunday, April 10, 2016

சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் மற்றும்  நலன் விரும்பிகள் அனைவரும் அன்புடன் அழைக்கப் படுகின்றீர்கள்!

நன்றி!

20-03-2016

செயற்குழு

IMV-OSA  Canada

திரு.வல்லிபுரம் கந்தசாமி

2016_Kanthan_001

பிறப்பு : 07-06-1937 மறைவு : 20-03-2016 வல்லிபுரம் கந்தசாமி ஓய்வுபெற்ற யாழ் அரசினர் வைத்தியசாலை உத்தியோகத்தர்

துயர் பகிர்வோம்.

திரு. வல்லிபுரம் கந்தசாமி ஓய்வுபெற்ற யாழ் அரசினர் வைத்தியசாலை உத்தியோகத்தர்
இடைக்காட்டில் இறைபதமடைந்தார்.
நெல்லியான் செம்பியன்பற்றைப் பிறப்பிடமாகவும் இடைக்காட்டை வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் கந்தசாமி இன்று 20-03-2016 ஞாயிற்றுக்கிழமை இடைக்காட்டில் அன்னாரின் இல்லத்தில் இறைபதமடைந்தார்.
அன்னார் பொன்னம்மாவின் அன்புக் கணவரும், நந்தினி ,சிவகாந்தன் (கனடா) , பாலகாந்தன், (கனடா) பத்மலோஜினி, (பரிஸ்) சறோஜினி (சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையாரும், மனோகரன். வனிதா, சோபா, ஆனந்தராசா, நகுலேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும், பிரதீபா, லதுசன், ஆரதி, கிருசான், கவிசன், சாம்பவி. அனுசியன், ஆரணி, அபிநயா, பிரசன்னா, தீபிகா ஆகியோரின் அன்புப் பேரனும், விஸ்ணுவரதனின் அன்புப் பூட்டனுமாவார்,
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-03-2016 திங்கட்கிழமை அன்று இடைக்காட்டில் அன்னாரின் இல்லத்தில் இடம் பெற்று பூதவுடல் சாமித்திடல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.

தகவல் :
சிவகாந்தன் : கனடா (மகன்) 647-987-6764
27 REDBRICK ROAD, MARKHAM, L6V0T8
தொடர்புகளுக்கு:
நந்தினி : ( இடைக்காடு) 776264159
பாலகாந்தன் : (கனடா) 416-609-2193
பத்மலோஜினி : ( பரிஸ்) 33954638107
சறோஜினி : (சுவிஸ்) 41433170742

30ம் ஆண்டு நினைவு

யா/இடைக்காட்டின் மைந்தர்கள் பொன்னம்பலம் குகதாஸ் –பொன்னம்பலம் வைத்தீஸ்வரன் ஆகிய இருவரும் இவ்வுலகை நீத்த 30ம் ஆண்டு நினைவு

2016_kugathan

மண்ணில் மலர்ந்தது                                    விண்ணில் புகுந்தது
பொன்னம்பலம் குகதாஸ் 05.03.1959                   20.03.1986
பொன்னம்பலம் வைத்தீஸ்வரன் 03.06.1965

எம் குடும்ப பாரத்தைச் சுமக்க எனக்கு உதவியாய் எவருமில்லையே எனக் கலங்கினின்ற வேளை இதோ நாங்கள் இருக்கிறோம் என என் பின்னால் வந்துதித்த என் உடன் பிறப்புகளே என் இரத்தங்களே.. நீங்கள் உயிருடன் இருக்கும்போது எனக்கு இருந்தது பலமல்ல, அது அசுர பலம்.
என் துன்பங்கள் துன்பங்களாய்த் தெரியவில்லை, அவை தூசியாய்த் தெரிந்தன.
நெடுங்கேணியில் காடு வெட்டி களனியாக்கி வயல் விதைத்து விளைந்த நெல்லின் ஒட்டுக் காயுமுன்பே அந்த வயல் நிலமே உங்கள் சுடலையாகுமென்று யார்தான் அறிவர்?
சிங்கள ராணுவத்தின் துப்பாக்கிச் சன்னங்கள் உங்கள் நெஞ்சிலே பாய்ந்த போது நீங்கள் சாவதற்கு கவலைப்பட்டிருக்க மாட்டீர்கள். உங்கள் கடமையை இடையில் விட்டு விட்டுபோகிறோமே என்றுதான் அழுதிருப்பீர்கள்.
தம்பிகளே விதி கொடியதடா, விதி எம்மை வஞ்சித்து விட்டது. எம் நால்வரில் இருவரை ஒரே நாளில் வஞ்சித்து விட்டது.
முப்பது ஆண்டுகளாக அழுகின்றோம்.
உங்கள் ஆன்மா அமைதி பெறட்டும்.

பிரிவால் துயருறும், பாசமிகு அண்ணா கந்தவேல், தம்பி சின்ராசு மற்றும் உடன் பிறப்புகள்.
கனடா, யாழ்/ இடைக்காடு- 647 702 7346

EARTH HOUR IN CANADA

THIS EARTH HOUR,
SHINE A LIGHT ON CLIMATE ACTION
This is our time to #ChangeClimateChange. As millions around the world unite for our planet, you too can share what you believe in.
images

19 MARCH 2016
8:30 – 9:30 PM LOCAL TIME

அமரர் சின்னத்தம்பி சித்திரவடிவேல்

யா/இடைக்காடு மகாவித்தியாலயத்தில் ஆசிரியராகவும் அதிபராகவும் கடமையாற்றி 12.2.2016 அன்று இறைபதமடைந்த அமரர் சின்னத்தம்பி சித்திரவடிவேல் அவர்களின் 31ம் நாள் நினைவேந்தல்
நமக்கு நாமே, நம்மை நாமே வளர்தெடுப்போம் என்னும் கொள்கைக்கேற்ப ஆரம்பகாலம்தொட்டே எமது பாடசாலையின் கல்வி வளர்ச்சியும் கட்டிட வளர்ச்சியும் எம் கிராமத்து மக்களின் கைகளிலே தங்கியிருந்தது.
எனினும் 90 காலப்பகுதியில் போர்ச்சூழலால் ஏற்பட்ட இடப்பெயர்வு காரணமாக பாடசாலை முற்று முழுதாகச் சேதமடைந்து சேதமாகிய கட்டிடங்களை திருத்தியமைக்க முடியாது நின்றவேளையில் திரு. சித்திரவடிவேல் அவர்கள் எமது பாடசாலையின் அதிபராக 1994ல் பதவியேற்று வந்தபோது பாடசாலை மீண்டும் புத்துயிர் பெற்றது அவர் 2004ல் கோட்டக்கல்வி அதிகாரியாக பதவி உயர்வு பெற்றுச் செல்லும்வரை எமது பாடசாலையின் அதிபராகக் கடமையாற்றினார்.
மாணவர்களின் கல்விவளர்ச்சியில் அவர் காட்டிய அக்கறை போலவே எதிர்கால மாணவர்களின் நலன் கருதி சேதமடைந்த கட்டிடங்களை திருத்தியமைக்கவும் புதிய உட்கட்டுமாணங்களை உருவாக்கவும் அவர் மேற்கொண்ட முயற்சி மிகவும் பாராட்டப்பட வேண்டியதே. போர்க்கால சூழலால் மக்களின் பொருளாதாரம் மிகவும் நலிவடைந்திருந்ததனால் மக்களால் எதுவுமே செய்யமுடியாதிருந்த வேளையில் தனது திறமையாலும் செல்வாக்கினாலும் கல்வித் திணைக்களத்தின் உதவி மூலம் பாரிய உட்கட்டுமாணப் பணிகளை நிறைவேற்றினார். எமதூர் பிரமுகரான அமரர் நமசிவாயம் அவர்கள் அன்பளிப்புச் செய்த மூன்று மாடிக்கட்டடம், உருவானதும் அதற்காக அவரைக் கெளரவித்து பெருமைப்படுத்தியதுடன் கணனிக்கூடம் மற்றும் வேண்டிய பாடசாலைத் தளபாடங்கள் போன்றவையும் அவரின் செயற்பாடுகளே.
கருமமே கண்ணாக திகழ்ந்த அவரின் சாதனைகள் அவர் மறைந்து விட்ட இவ்வேளையிலும் எமது பாடசாலையில் அவரின் அடையாளத்தைக்காட்டி நிற்கின்றன.
அவரின் ஆன்மா வீடுபேறு அடைவதாக.
இடைக்காடு பழைய மாணவர் சங்கம் , கனடா
12.3.2016

தண்ணியும் தண்ணீரும்

தண்ணியும் தண்ணீரும்

water

இது தண்ணீரைப்பற்றிய ஒரு சமாச்சாரம்.
உலகம் ஐம்பூதங்களால் ஆனது., உடல் ஐம்பொறிகளால் ஆனது. உடல் உயிருடன் இருப்பதற்கு ஆதாரமே ஐம்பூதங்கள்தான்.
தங்கியிருப்பதற்கும், உணவு உற்பத்தி செய்வதற்கு நிலம் இன்றியமையாதது. நீர் இல்லாமல் முடியுமா? சொல்லவே தேவையில்லை. தீ.. உணவு சமைக்க, அதை விடுங்கள். வெப்பம் இல்லவிட்டால் விறைத்தே செத்துப்போய்விடுவோம். காற்று இல்லாமல் ஒரு நிமிடம் உயிர் வாழமுடியுமா? ஆகாயம்.. இங்கேதானே எமக்குத்தேவையான காற்று அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றது, சூரிய ஒளியைக்கடத்திவருகின்றது. மழையைத்தருகின்றது. இப்படி.. இப்படி எம் உயிர் வாழ்தலுக்கான உணவினை ஊட்டத்தினை இவைதான் எமக்கு வழங்குகின்றன.
உணவு திண்ம திரவ வாயு வடிவங்களில் கிடைக்கின்றன. திண்ம உணவை நாம்தான் உற்பத்தி செய்யவேண்டும். திரவமும் வாயுவும் இலவசமாகக் கிடைக்கின்றன. உண்மையில் திண்ம உணவைவிட மற்றைய இரண்டுமே இன்றியமையாதன. அது இலவசமாக எமக்குக் கிடைப்பதால் அதன் பெறுமதி எமக்குத் தெரிவதில்லை..
உணவின்றி ஒருமாதம் உயிர் வாழலாம். நீரின்றி ஒருவாரம் உயிர் வாழலாம், காற்றின்றி ஒரு நிமிடம் உயிர் வாழ முடியுமா? இதில் விசித்திரமானது திரவம் தான். நீராக எம்மை உணவூட்டுகின்றது. பனிக்கட்டியாக வட தென் துருவங்களில் நீரின் அளவினைச் சுருக்கி நிற்கின்றது. வாயுவாக மழைமுகிலாக மேகத்தில் மண்டிக்கிடக்கின்றது.
இந்த பூமிப்பந்து 70% நீரால் ஆனது. அவ்வாறே எம் உடலும் 70% நீரல் ஆனது. அதன் பயன்பாடும் அளப்பரியது. உடலுக்கு உணவாக, உடலின் வெப்பத்தை சீராக்க திரவக்கழிவுகளை வெளியேற்ற இன்னோரன்ன. அதனால் ஒவ்வொரு நொடியும் எமது உடல் நீர்ப்பற்றை இழந்துவருகின்றது, அதற்காக ஒவ்வோர் நாளும் நாம் 3 லீற்றர் நீரினை உட்கொள்ளவேண்டியுள்ளது.
மனிதனின் செய்கைகள் விசித்திரமானவை.
மனிதன் உயிர் வாழ்வதற்கு தண்ணீரை இறைவன் படைத்தான். தன்னைத்தான் அழிப்பதற்கு தண்ணியை மனிதன் படைத்தான்.
தண்ணீர் குடித்தால் உயிர் வாழலாம்
தண்ணி அடித்தல் உயிர் போய்விடும்.
சரி, மதுசாரத்தை ஏன் தண்ணி என்று கூறுகிறார்கள்? அதுவும் தண்ணி வடிவத்தில் இருப்பதால் போலும். மது உடலுக்கு கெடுதியானது எனத்தெரிந்திருந்தும் அதன்மேல் மோகம்கொண்டு மனிதன் அலைவதை என்னவென்று சொல்ல?
மதுவின் பாவனை இன்று நேற்றல்ல அந்தக்காலம் தொட்டே இருந்தபடியால்தானே கள்ளுண்பார் நஞ்சுண்பவர் என வள்ளுவர் கூறிச்சென்றார். மது அருந்துவது இன்று ஒரு நாகரீகமாகவே மாறிவிட்டது. எமது தாயகத்தில் மதுவில் எவ்வித தரக்கட்டுப்பாடோ மதுசாரத்தின் அளவோ குறிப்பிடப்படுவதில்லை. அங்கு பாவனையிலுள்ள கள்ளு கசிப்பு முதலானவை நஞ்சின் மறுவடிவமாகவே செயற்படுகின்றன.
மதுவுக்கு அடிமையானோரை இரு வகையாகப்பிரிக்கலாம். சிலர் எப்போதாவது குடிக்கிறார்கள். சிலர் எப்போதுமே குடிக்கிறார்கள். எப்போதாவது குடிப்பவர்கள் தங்களுக்கு தாங்களே கொள்ளி வைத்துக்கொள்ளுகிறார்கள். எப்போதுமே குடிப்பவர்கள் தங்கள் குடும்பத்துக்கே………
இதில் நீங்கள் எந்த வகையில் அடங்குகிறீகள்? ஒருவகையிலுமே இல்லையா?
சபாஸ், உங்கள் முதுகை நீங்களே ஒருமுறை தட்டிக்கொள்ளுங்கள்.

drink

பொன் கந்தவேல் – கனடா
10.03.2016