Articles for June 2016
10 ஆண்டுகளை நிறைவு செய்கின்றது IDAIKKADUWEB.COM
இணையத்தின் உருவாக்கம் பற்றிய சிறிய விளக்கத்துடன் எமது இடைக்காடு இணையத்தளத்தின் ஆரம்பம், அதன் வளர்ச்சி என்பன பற்றிய தெளிவான பார்வையினை முன் வைக்க விளைகின்றது இடைக்காடு இணையத்தள செயற்குழு.
60 களின் ஆரம்பத்தில் மற்றும் 50 களின் பிற்பகுதிகளிலும் இன்றைய இணையத்தளம் ஆரம்பமானது என்று ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இன்றைய அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு உலகின் முதன்மை வேராக இருப்பது தகவல் தொடர்புகள் தான். மேல் சென்று கூறுவதானால் துல்லியமான தகவல் தொடர்புகள் என்பதில் ஐயமில்லை.
ஆரம்ப காலத்தில் ஒலி எழுப்புதல்,அபிநயம்,எழுத்துப் பரிமாணம்,தந்தி,தொலைபேசி,தொலைநகல் தற்போது இணையம் வரை வந்து நிற்கின்றது. இதன் வரவு உயர்மட்ட அறிவியலின் தொடர்புகளை மிகவும் இலகு நிலைக்கு கொண்டு வந்து உலகின் ஒரு குக்கிராமத்தில் இருக்கும் தகவல்களைக் கூட துல்லியமாக உலகத்தின் மறு முனையில் இருக்கும் மக்களுக்கு மறு நொடியில் பரிமாறும் மாபெரும் வளர்ச்சியினைக் கண்டுள்ளது.
இனி, இத் தகவல் பரிமாற்றமான இணையமானது சமூக பண்பாடு பற்றி பார்ப்போமானால் முன்னேற்றகரமான அறிவியல் தகவல்களையும் மறு புறத்தே மிகவும் கீழ்த்தரமான சமூக சீர் கேட்டு தகவல்களையும் எவ்விதமான கட்டுப்பாடுகளும் இன்றி கிடைக்கப் பெறுகின்றன. இதில் மிகவும் பாதிப்படையும் சமூகமாக அறிவியல் முதிர்ச்சியற்ற,கலாச்சார தெளிவில்லாத,தற்திறனாய்வற்ற,சுயசிந்தனை இல்லாதவர்கள் தான் பெரிதும் பாதிப்படைகின்றனர்.
இவற்றை எல்லாம் நன்கு அறிந்துணர்ந்த எமது இடைக்காடு வாழ் அறியோர்கள் எம்மையும் இவ் அறிவியல் யுகத்தில் இணைத்துக்கொள்ளும் முகமாக 2004 ம் வருடத்தில் (பார்க்க இத்திமலர் 2013 பக்கம் 13,14) எம்மை எல்லோரையும் இணைக்கும் முகமாக இவ் இணையத்தினை கனடாவில் உருவாக்கினார்கள். இதன் ஆரம்ப காலங்கள் பல சிரமங்கள் நிறைந்ததாகவும் சரியான ஒழுங்கிணைவுகள் இல்லை என்பதினை உணர்ந்த இடைக்காடு பழைய மாணவர் சங்கம் (கனடா) இவற்றை நிவர்த்தி செய்யும் பொருட்டு 2006 இல் தற்போது எமக்கு பல்வகையான தகவல்களை தருகின்ற IDAIKKADUWEB.COM என்ற புதிய வடிவில் உருவாக்கினர்.
2006,2007 ம் வருடங்களில் எமது இணையமானது பல வகையான நிர்வாக,தகவல் பரிமாற்றம் மிகவும் நலிவடைந்துள்ளதனை கருத்தில் கொண்ட இடைக்காடு பழைய மாணவர் சங்கம் கனடா 2008 இல் இணையத்தள குழுவினை உருவாக்கி அறிவியல் தளத்தில் நன்கு பரிட்சயமான “இளையோரிடம்” இடைக்காடு பழைய மாணவர் சங்கத்தின் ( கனடா) மேற்பார்வையில், நாள் ஒரு வண்ணம் பொழுதொரு மேனியுமாக மெருகூட்டப்பட்டு வளர்ச்சிப் பாதையில் செல்கின்றது.
இவ் வருடம் IDAIKKADUWEB.COM என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு 10 ஆண்டுகளை நிறைவு செய்கின்றது.(16-06-2006) இப் பாரிய முன்னேற்றகரமான செயற்பாடுகள் தொடர்வதற்கு உங்கள் அனைவரின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு இன்றியமையாதது.
2008 இல் பொறுப்பேற்ற இளையோர் அணி பல வகையான மாற்றங்களை தந்தனர். அழகுற வடிவமைக்கப்பட்ட முகத்திரை, இலகு முறை பதிவேற்றம்,பாடசாலை மற்றும் நம் கிராமம் பற்றிய தெளிவான தகவல்கள்,துல்லியமான நிழற்படங்கள்,துயர்பகிர்வு செய்திகள்,தரம் அறிந்த புதிய தகவல்கள் என பல வகையான சிறப்புகளுடன் அதி வேகமாக முன்னேறிவரும் இணையத்தளப்பரப்பில் உன்னதமான சேவையினை IDAIKKADUWEB.COM நம் எல்லோருக்கும் அளித்து வருகின்றது.
நன்றி.
திரு.வல்லிபுரம் வடிவேலு
துயர் பகிர்வோம்.
அச்சுவேலி இடைக்காட்டை பிறப்பிடமாகவும் முல்லைத்தீவு கொக்கிளாயில் வாழ்ந்தவரும் CANADA MONTREAL , TORONTO வை வதிவிடமாகவும் கொண்ட திரு.வல்லிபுரம் வடிவேலு 05.06-2016 அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார் காலம் சென்றவர்களான வல்லிபுரம்-வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும் பொன்னையா-பொன்னு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அனுஷரத்தினம்மா அவர்களின் அன்பு கணவரும்,
தயாசோதி ,(MONTREAL ), தயாளினி (MONTREAL ), தயாவதனி (TORONTO ), தயாரூபன் (TORONTO ), தயாரூபி(MONTREAL ) ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்.
நவநீதமலர், இராஜசேகரன் , அருமைநாயகம் , சுரேகா,தவரூபன் , ஆகியோரின் மாமனாரும்
காலம் சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை , சிவபாக்கியம் ,கனகசபை மற்றும் இராசம்மா , பொன்னம்மா ஆகியோரின் அன்பு சகோதரரும்
காலம் சென்றவர்களான மகாதேவா,அருளம்மா மற்றும் செல்வரத்தினம்,அன்னலட்சுமி , மகேந்திரம் ஆகியோரின் மைத்துனரும்
கஜீபன் , வினுஷன் , யாதுகா , துதிகன் , கவினா, மீனகா , துளசிகன், கஜன், நவீனா, கரினா , சச்சின் , பரணிதன் ,வைஷ்ணவி, சங்கவி ஆகியோரின் அன்பு பேரனுமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம் .
அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது
நிகழ்வுகள் :
பார்வைக்கு:
சனிக்கிழமை 11-06-2016
05:00 பி.ப – 9:00 பி.ப
CHAPEL RIDGE FUNERAL HOME & CREMATION CENTRE
8911 WOODBINE AVE, MARKHAM
ON, L3R 5G1, CANADA
ஞாயிற்றுகிழமை 12-06-2016
8:00 மு.ப – 9:15 மு.ப
கிரியை :
9:15 மு.ப – 11:15 மு.ப
தகனம்:
ஞாயிற்றுகிழமை 12-06-2016
12:00 பி,ப – 12:15 பி.ப
ST.JOHN’S NORWAY CREMATORIUM
256 KINGSTON ROAD, TORONTO, ON
தொடர்புகளிற்கு :
தயாசோதி 514-889-3121
சேகர் – 514-578-7036
அருமை-647-466-9335
ரூபன்-416-833-0914
ரூபன்-438-881-1088
தகவல் – கும்பத்தினர்
இடைக்காடு பழைய மாணவர் சங்க கனடா கிளையின் பொதுக்கூட்டம்
இடைக்காடு பழைய மாணவர் சங்க கனடா கிளையின் பொதுக்கூட்டம்
எமது கோடைகால ஒன்றுகூடல் மற்றும் “வெள்ளி விழாமலர்” வெளியீடு பற்றிய செயற்திட்ட பொதுக்கூட்டம் எதிர்வரும் 12ம் திகதி (Sunday ) 3.00,மணி அளவில் திரு.திருமதி .உதயணன் சத்தியதேவி இல்லத்தில் நடைபெற உள்ளது.
அனைத்து பழைய மாணவர்கள், அங்கத்துவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரும் இதியில் கலந்துகொண்டு தங்கள் ஆலோசனைகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்
இடம்:
126 Keeler Blvd
Toronto,M1E 4K9.
நேரம்: 3:00 PM
நாள்: Sunday, June 12th, 2016
சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் அன்புடன் அழைக்கப் படுகின்றீர்கள்!
நன்றி!
05-06-2016
செயற்குழு
IMV-OSA Canada