Articles for July 2016

பிடிவாதம்

பிடிவாதம்

சங்கரப்பிள்ளை
வெங்காயம் விற்க
சந்தைக்குப் போனார்
வெங்காயம் இன்றைக்கு
நல்ல சூடாம்
சங்கரப்பிள்ளைக்கு
ஒரே புழுகம்
நேற்றைய நட்டத்தை
எடுக்க வேணும்
வியாபாரிகளிடையே
நல்ல போட்டி
சொன்னால் சொன்னதுதான்
ஐந்து சதமும்
குறையமாட்டேன்
நேரம் ஆக ஆக
சனமும் போய்
சந்தையும் கலைந்து
சங்கரப்பிள்ளை
தனியே நின்றார்
கடைசி வியாபாரிக்கே
கேட்ட விலைக்கே
அதுவும்
கடனாய்க் கொடுத்து
அழுதபடியே
சங்கரப்பிள்ளை
வீட்டே வந்தார்

 

download

17.5.2016

நிதி அன்பளிப்பு

logo-idai-trust5
அன்பான இடைக்காடு வாழ் மக்கள் மற்றும் புலம்பெயர் நலன்விரும்பிகள் அனைவருக்கும்

இடைக்காடு நம்பிக்கை நிதியத்தின் செயற்பாடுகளிற்காக எமது ஊர் புலம்பெயர் குடும்பங்களை சேர்ந்த பத்து நலன்விரும்பிகள் தலா 1000 Canadian dollar  (இலங்கை ரூபா.114,000/=) நிதியினை எமது நிதியத்திற்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.

மேற்படி ரூபா.1,140,000/= (ரூபா. பதினொரு இலட்சத்து நாற்பதினாயிரம்) நிதியினை எமது நிதியத்திற்கு அன்பளிப்பாக வழங்கிய புலம்பெயர் நலன்விரும்பிகள் அனைவருக்கும் எமது நிதியத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்பளிப்பு செய்தோர் விபரம்:

  • Toronto, Canada : 06
  • Montreal, Canada : 03
  • Australia : 01

இவ்வாறான நிதிப்பங்களிப்பினை எமது ஊர் மற்றும் புலம்பெயர் நலன்விரும்மிகளிடம் இருந்து கிடைக்கப்பெறும் பட்சத்தில் நிதியத்தின் செயற்பாடுகளை சிறப்பான முறையில் முன்னெடுத்து செல்ல முடியும்.

எமது நிதிய செயற்றிட்டங்கள் மற்றும் தற்போதய செயற்பாடுகள் பற்றிய விபரங்களை எதிர்வரும் வாரங்களில் அறியத்தரப்படும்.

அனைவரது ஒத்துழைப்பினையும் ஆதரவினையும் வேண்டிநிற்கின்றோம்.

ஒன்றுபடுவோம் ! உழைப்போம் ! உயர்வோம் !

இடைக்காடு நம்பிக்கை நிதியம்

திரு. நடராஜா குமரேசபசுபதி

2016_IMG_0052

திரு நடராஜா குமரேசபசுபதி மலர்வு 19/06/1934 உதிர்வு12/07/2016 (ஓய்வுபெற்ற கூட்டுறவு பயிற்சி கல்லூரி அதிபர், ஓய்வுபெற்ற பொது முகாமையாளர், பலநோக்கு கூட்டுறவுச்சங்கம், நீர்வேலி)

துயர் பகிர்வோம்.

அச்சுவேலி, இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வரணி, கட்டைப்பிராய், Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு நடராஜா குமரேசபசுபதி அவர்கள் 12/07/2016 செவ்வாய்க்கிழமை இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நடராஜா(முத்து வாத்தியார்)-கண்மணி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும் காலஞ்சென்றவர்களான காசிநாதர்(முத்தையா)-நாகம்மா (வரணி) ஆகியோரின் பாசமிகு மருமகனும் காலஞ்சென்ற யோகேஸ்வரி(இளைப்பாறிய ஆங்கில ஆசிரியை) அவர்களின் அன்புக்கணவரும் பவன்(Australia), கிரிதரன்(USA), ருசாந்தி(UK) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும் மதிவதனி, பவானி, சிவநேசன் ஆகியோரின் அன்பு மாமனாரும் சுவாதி, கபிலன், நிஷாந்த், நந்தனா, கீரன் ஆகியோரின் பாசமிகு பேரனும்
செல்வநாயகி, சிவபாக்கியம், காலஞ்சென்ற மாணிக்கவாசகர், சிவபாதசுந்தரம், காலஞ்சென்ற பொன்மலர் ஆகியோரின் அன்புச்சகோதரரும் ராஜேஸ்வரி, பரநிருபசிங்கம் தர்மகுலசிங்கம், சிவராசசிங்கம் பாஸ்கரலிங்கம் சசிதேவி காலஞ்சென்ற கமலவேணி,கந்தசாமி, வசந்தி, காலஞ்சென்ற தவராஜலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவர்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது

இறுதிக்கிரியை பற்றிய விபரங்கள்

Visitation:
FridayJuly 15, 2016 at 5.00 pm – 09.00 pm
Ogden Funeral Homes, 4164 Sheppard Avenue East, Scarborough, ON, M1S 1T3

Service:
Saturday July, 2016 at 08.00 am
Ogden Funeral Homes, 4164 Sheppard Avenue East, Scarborough, ON, M1S 1T3

Cemetery/Crematorium
St.Johns Norway Cemetery & Crematorium, 256 Kingston Road, ON, M4L 1S7

தகவல்
Bhavan: 0016473467807(Canada), 0061280122357(Australia)bhavan69@gmail.com
Giri:0012032761620(USA)kgiritharan@gmail.com
Shanthi: 00442089314467 (UK) roushanthi@yahoo.com
Nesan:00447931592276 (UK) swakaa@gmail.com

திருமதி சரஸ்வதி கிருஷ்ணர்

துயர் பகிர்வோம்.

2016_gh

இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் கொழும்பு, சொய்சாபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சரஸ்வதி கிருஷ்ணர் அவர்கள் இன்று 11/07/2016 திங்கள்கிழமை இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான கதிர்காமு, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும் திரு. கிருஷ்ணர் அவர்களின் அன்பு மனைவியும் மலர்விழி, புவனச்சந்திரன், ரவீந்திரன் செல்வவிழி ஆகியோரின் பாசமிகு தாயாரும் சுதாகரன், சுதர்சினி, அருந்ததி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆருஜன், அனுஜன், அன்பினி ஆகியோரின் அன்பு பேர்த்தியும்

காலஞ்சென்ற சிவஞானம், செல்வநாயகம், அன்னபாக்கியம், காலஞ்சென்ற இளையதம்பி, இராசம்மா, தங்கராசா ஆகியோரின் அன்புச்சகோதரியும் இராசமணி, தங்கம்மா, காலஞ்சென்ற இராசையா, தங்கம்மா, காலஞ்சென்ற ஜெயாஇந்திரா, சிவயோகநாயகி, ஆகியோரின் அன்பு மைத்தினியும் ஆவர்.

அன்னாரின் இறுதிகிரியைகள் வியாழக்கிழமை இடம்பெறும். மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது

தொடர்புகளுக்கு
திரு. கிருஷ்ணர் + 94 11 2605578 (Sri Lanka)
திரு. புவனச்சந்திரன் + 1 647 9078068 (Canada)
திரு. இரவீந்திரன் + 94 11 262 3543 (Sri Lanka)