பிடிவாதம்

பிடிவாதம்

சங்கரப்பிள்ளை
வெங்காயம் விற்க
சந்தைக்குப் போனார்
வெங்காயம் இன்றைக்கு
நல்ல சூடாம்
சங்கரப்பிள்ளைக்கு
ஒரே புழுகம்
நேற்றைய நட்டத்தை
எடுக்க வேணும்
வியாபாரிகளிடையே
நல்ல போட்டி
சொன்னால் சொன்னதுதான்
ஐந்து சதமும்
குறையமாட்டேன்
நேரம் ஆக ஆக
சனமும் போய்
சந்தையும் கலைந்து
சங்கரப்பிள்ளை
தனியே நின்றார்
கடைசி வியாபாரிக்கே
கேட்ட விலைக்கே
அதுவும்
கடனாய்க் கொடுத்து
அழுதபடியே
சங்கரப்பிள்ளை
வீட்டே வந்தார்

 

download

17.5.2016

நிதி அன்பளிப்பு

logo-idai-trust5
அன்பான இடைக்காடு வாழ் மக்கள் மற்றும் புலம்பெயர் நலன்விரும்பிகள் அனைவருக்கும்

இடைக்காடு நம்பிக்கை நிதியத்தின் செயற்பாடுகளிற்காக எமது ஊர் புலம்பெயர் குடும்பங்களை சேர்ந்த பத்து நலன்விரும்பிகள் தலா 1000 Canadian dollar  (இலங்கை ரூபா.114,000/=) நிதியினை எமது நிதியத்திற்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.

மேற்படி ரூபா.1,140,000/= (ரூபா. பதினொரு இலட்சத்து நாற்பதினாயிரம்) நிதியினை எமது நிதியத்திற்கு அன்பளிப்பாக வழங்கிய புலம்பெயர் நலன்விரும்பிகள் அனைவருக்கும் எமது நிதியத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்பளிப்பு செய்தோர் விபரம்:

  • Toronto, Canada : 06
  • Montreal, Canada : 03
  • Australia : 01

இவ்வாறான நிதிப்பங்களிப்பினை எமது ஊர் மற்றும் புலம்பெயர் நலன்விரும்மிகளிடம் இருந்து கிடைக்கப்பெறும் பட்சத்தில் நிதியத்தின் செயற்பாடுகளை சிறப்பான முறையில் முன்னெடுத்து செல்ல முடியும்.

எமது நிதிய செயற்றிட்டங்கள் மற்றும் தற்போதய செயற்பாடுகள் பற்றிய விபரங்களை எதிர்வரும் வாரங்களில் அறியத்தரப்படும்.

அனைவரது ஒத்துழைப்பினையும் ஆதரவினையும் வேண்டிநிற்கின்றோம்.

ஒன்றுபடுவோம் ! உழைப்போம் ! உயர்வோம் !

இடைக்காடு நம்பிக்கை நிதியம்