Articles for June 2018

இ.ம.வி. ப.மா.ச- கனடா கிளை கோடைகால ஒன்று கூடல்

IMG_2090

இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் – கனடா கிளை
கோடைகால ஒன்று கூடல் – ஆடிமாதம் 22ம் திகதி
நெல்சன்  பூங்கா  நெல்சன் வீதி /பின்ச் அவனியு கிழக்கு சந்திப்பு
(Neilson park : Neilson Road & Finch avenue E)
 
நிகழ்ச்சி நிரல்
காலை 10 மணி தொடக்கம் 11 மணி  வரை  –  காலை உணவு
துருவல் முட்டையுடன்(Scrambled egg)  வரட்டிய   உருளைக்கிழங்கு(Home fries) மற்றும் பான் கேக் (Pan cake).
காலை 11 மணி தொடக்கம் 12 மணி வரை  –  கால் பந்தாட்டம்
இளம் வயதினர் மற்றும் வாலிப வயதினர் என  இரு குழுக்களாக நடைபெறும்.
காலை 12 மணி தொடக்கம் 2 மணி  வரை  மதிய உணவு
நெருப்பில் வேக வைத்த கோழி இறைச்சி(BBQ) ,  நம் ஊரிலே உண்டுகளித்த பலவிதமான  உணவுகள்  மற்றும் குளிர்பானங்கள் குடிநீர்.
மாலை 1 மணி தொடக்கம் 4 மணி வரை விளையாட்டுக்கள்
குழந்தைகளுக்கான பழம் பொறுக்கல்,  பிள்ளைகளுக்கான ஓ ட்டப்  போட்டிஅதனைத்  தொடர்ந்து  சகல வயதினர்க்குமான  பொழுது   போக்கு நிகழ்ச்சிகள் மற்றும்
அனைவரையும் கவர்ந்த கயிறு   இழுத்தல்.
மாலை 4 மணி தொடக்கம் 5 மணி வரை – சிற்றுண்டிகள்
தேனீர், சிற்றுண்டிகள், இடியப்ப கொத்து மற்றும் பலவித   உணவுகள்.
மாலை 5 மணிக்கு வினோத உடை போட்டி-  சின்னஞ் சிறார்களுக்கானநிகழ்ச்சி.
மாலை 6 மணிக்கு பரிசில்கள் வழங்கல்
மாலை 7 மணிக்குஎமது ஒன்றுகூடல் இரவு உணவுடன் நிறைவடையும்.
வெற்றி கேடயங்களுக்கான அனுசரணை : உதயணன் சத்திய தேவி  குடும்பத்தினர்.
குறிப்பு  : வினோத உடை நிகழ்ச்சியில் பங்குபற்றும் போட்டியாளர்கள் தங்கள் பெயர்விபரங்களை முன்கூட்டியே திருமதி சி .சிவலோஜினி இடம் பதிவு செய்யவும்.தொலைபேசி இலக்கம் (  416) 289 1673

தயவு செய்து அனைவரும்  காலையிலேயே சமூகமளிக்குமாறுவேண்டப்படுகின்றீர்கள். தவறுமிடத்து நீங்கள் அடுத்த 
நிகழ்ச்சிகளுக்கும் அடுத்த நேரஅட்டவணை உணவு வகைக்கும் செல்லமுடியும் என்பதையும்நினைவுறுத்துகின்றோம்.

நன்றி!

திரு ஸ்ரீஸ்கந்தராஜா நல்லையா

Mr Nallaiya Sriskantharajah

ஓய்வுபெற்ற மொழி பெயர்ப்பாளர் கொழும்பு நீர்பாசன திணைக்களம் மண்ணில் : 3 யூன் 1941 விண்ணில் :16 யூன் 2018

துயர் பகிர்வோம்

யாழ்.இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிட மாகவும் கொண்ட ஸ்ரீஸ்கந்தராஜா நல்லையா அவர்கள் 16-06-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லையா நல்லம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான வைரவநாதன்(சட்டத்தரணி) தனலஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிறேமாவதி(பிறேமா சங்கீத வித்துவான்) அவர்களின் அன்புக் கணவரும், ஷோபனா, அனோஜனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுஜிந்திரன்(சுஜி), ஷிபோதன்(ஷிபோ) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நேகா(Neha), நீரா(Neera), ஷியானா(Shiana), ஷியாறா(Ziyara), இஷாறா(Ishara) ஆகியோரின் அன்புப் பேரனும்,

லோகநாயகி(இலங்கை), தேவரஞ்சி(ரத்தி- கனடா), பாலஸ்ரீ(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சிவபாதசிங்கம், பாலகிருஷ்ணன்(கனடா), சிவகாமி(லண்டன்), புனிதவதி(லண்டன்), புஷ்பவதி(லண்டன்), குகநாதன்(கனடா), சற்குருநாதன்(கனடா), பாலமுருகநாதன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெயசந்திரன ்(ஜெயா- லண்டன்), குணசிங்கம்(குணம்- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும்,

சொரூபா(கனடா), புஷ்பராணி(கனடா), தமயந்தி(கனடா) ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

.அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது

தகவல்
குடும்பத்தினர்

பார்வைக்கு:
வியாழக்கிழமை 21/06/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
வெள்ளிக்கிழமை 22/06/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
சனிக்கிழமை 23/06/2018, 08:00 மு.ப — 10:00 மு.ப

கிரியை:
சனிக்கிழமை 23/06/2018, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:
Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham , ON L3R 5G1 Canada
தகனம்:சனிக்கிழமை 23/06/2018, 12:30 பி.ப — 01:00 பி.ப
முகவரி:
Highland Hills Crematorium, 12492 Woodbine Avenue, Gormley, ON L0H 5G0 Canada

தொடர்புகளுக்கு:
சுஜி +14162946197
ஷோபனா  +16479986197
அனோஜா +14167313059
ஷிபோ   +16478892305
பாலஸ்ரீ — பிரித்தானியா +442084326301
பாலா/ ரதி +19053033630
லோகநாயகி — இலங்கை +94774131086