Articles for March 2019
Idaikkadu Medix camp
திருமதி. நல்லம்மா இரத்தினசபாபதி
துயர் பகிர்வோம்
இடைக்காட்டை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி.நல்லம்மா இரத்தினசபாபதி அவர்கள் இன்று இடைக்கட்டில் காலமானார்.
இவர், காலம் சென்றவர்களான திரு.திருமதி. அம்பலவாணர் தம்பதிகளின் இளைய மகளும் ,
காலம் சென்ற திரு.இரத்தினசபாபதி அவர்களின் அன்பு மனைவியும்,
காலம் சென்றவர்களான திரு.இரத்னசபாபதி, திருமதி.இலட்சுமிப்ப்பிள்ளை, திருமதி.மகேஸ்வரி, திருமதி.கனகம்மா, திருமதி.சரஸ்வதி ஆகியோரின் அன்பு சகோதரியும்
திரு.தில்லைநாதன், திருமதி.கிருஷ்ணவேணி, திரு.செல்வராஜ் , திரு. சரவணபவன் ஆகியோரின் அன்பு தாயாரும்,
திருமதி.ராஜேஸ்வரி, திரு.கணேசமூர்த்தி, , திருமதி.சிவரூபி, திருமதி.சிவலட்சுமி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
திரு.திருமதி.சங்கீதா சிவரூபன், கிருஷாந்தன், தினேஷ்குமார், திரு.திருமதி.கீர்த்தனா அஜித்குமார், சிவதர்சன், லட்சிகா, ஜதுஷன், கபிலன், அனிதா ஆகியோரின் அன்பு பாட்டியும்
ஜனேஸ், ஜனித் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவர்.
அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது
இறுதி கிரிகைகள் 21.03.2019 காலை 10 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று இடைக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்!