எங்களைப்பற்றி

இடைக்காடு மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கம் கனடா

 

நோக்கம்:

 
இடைக்காடு மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்தை தாய் அமைப்பாகக் கொண்டு அதன் சேய் அமைப்பாக “இடைக்காடு மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கம்(கனடா)” கனடாவில் இயங்கி வருகிறது. இடைக்காடு, வளலாய் கிராமங்களை இடைக்காடு மகாவித்தியாலயம், சனசமூக நிலையகள், இன்ன பிற பொது அமைப்புகளினூடாக மேம்படுத்தும் நோக்குடனும், புலம்பெயHந்து வாழும் எமது இளம் தலைமுறையினH மத்தியில் எமது அடையாளத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்குடனும், அவHகள் இடைக்காடு, வளலாய் “மண்ணின் மைந்தHகள்” என்பதைச் சுட்டிக் காட்டும் நோக்குடனும் இச்சங்கம் கனடாவில் இயங்கி வருகிறது. இவ்வகையில், கடந்த ஒரு தசாப்தமாக எம்கிராமத்தவர்களின்; ஐக்கியப்பட்ட செயற்பாட்டுடன் இயங்கி வரும் இச்சங்கமானது தனது இலக்குகளில் பலவற்றை எட்டியூள்ளது என்பதைக் கூறுவதிற் பெருமையடைகிறது.

எமது உறவூகளை தெரியப்படுத்தி, அவற்றை வலுப்படுத்தும் முகமாகவூம் எமது மொழி, கலை, பண்பாடுகளில் எமது சிறாHகளுக்கு ஆHவமேற்படுத்தும் முகமாகவூம் அவHகளின் திறன்களைக் கண்டு அரங்கேற்றும் முகமாகவூம், அவHகளை மேலும் ஊக்குவிக்கும் முகமாகவூம், ஆண்டுதோறும் “கோடை கால ஒன்று கூடல், குளிர் கால ஒன்று கூடல்” என்பனவற்றை விளையாட்டுப் போட்டி, கலைநிகழ்ச்சிகளை உள்ளடக்கியதாக நடாத்திவருகிறௌம்.

வருடம் தோறும் இருதடவை கோடைகாலத்தில் அனைத்துக் கனடா வாழ் இடைக்காடு, வளலாய் மக்களையூம் ஒன்றிணைத்துப் பூங்காவில் ஒன்றுகூடலை நடத்தி வருகிறௌம். இவ்வொன்று கூடலில் சிறுவH, பொpயோHகளுக்குப் பல வகையான விளையாட்டுப் போட்டிகளை நடத்தி, வெற்றிபெற்ரோரைப் பாராட்டும் முகமாகவூம் ஊக்குவிக்கும் முகமாகவூம் அவHகளுக்குப் பாpசில்களையூம் வழங்கிவருகிறௌம்.

வருடம் தோறும் குளிர்காலத்தில் அனைத்துக் கனடா வாழ் இடைக்காடு, வளலாய் மக்களையூம் ஒன்றிணைத்து மண்டபம் ஒன்றில் கலைநிகழ்ச்சிகளுடன் கூடிய ஒன்றுகூடலை நடாத்தி வருகிறௌம். இவ்வொன்று கூடலில் எமது மொழி, கலை, பண்பாடுகளில் எமது சிறாHகளுக்கு ஆHவமேற்படுத்தும் முகமாகவூம் அவHகளின் திறன்களைக் கண்டு அரங்கேற்றும் முகமாகவூம், அவHகளை மேலும் ஊக்குவிக்கும் முகமாகவூம் கலைநிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படுகின்றன. எம் பிள்ளைகளை பாராட்டும், ஊக்குவிக்கும் முகமாக அவHகளுக்குப் பாpசில்களையூம் வழங்கிவருகிறௌம்.

1

ஒரு நாட்டின் முதுகெலும்பு இளைஞர்கள். ஒரு நாட்டின் வளர்ச்சி கிராமங்களின் வளர்ச்சியில் பெரிதும் தங்கியூள்ளது. கிராமத்தின்; வளர்ச்சி கிராமமக்களின் அறிவியலுடன் கூடிய உழைப்பை வைத்தே அளவிடக்கூடியது. அறிவியலுக்கான ஆதாரமே ஆரம்ப கல்வியே. ஆரம்ப கல்வியை வழங்குவதுதான் கிராமத்து பாடசாலைகளே. இந்தவகையில் இடைக்காடு, வளலாய் கிராமங்களின் வளர்ச்சி என்பது இடைக்காடு மகா வித்தியாலயத்தின் வளர்ச்சியிலேயே தங்கியூள்ளது. இவற்றை தௌpவாக புரிந்து கொண்ட நாம் எம் கிராம, நாட்டின் வளர்ச்சிக்கான பெரும்பகுதி அபிவிருத்திகளை எமது கிராம பாடசாலையான இடைக்காடு மகா வித்தியாலயத்தினூடாக செயற்படுத்தி வருகின்றௌம். அடுத்த கட்டமாக சனசமூக நிலையங்களினூடு செயல்படுத்தி வருகின்றௌம்.

2

இடைக்காடு மகாவித்தியாலயத்தில் அபிவிருத்திகள் பலவற்றை செய்துள்ளோம். குறிப்பாக புதிய கட்டடம் அமைத்தல், பாடசாலைக்கான புதிய நிலம் வாங்குதல், விளையாட்டு மைதான புனர் நிர்மாணம், நூலக அபிவிருத்தி, பிரத்தியேக ஆசிரிய நியமனம் என்பன சிலவாகும்.

3

சனசமூகநிலைய புனருத்தாரணம், மருத்துவ சேவை, பொது மக்களுக்கான கணணி சேவை போன்றவற்றை செய்துள்ளோம்.
 

4

சர்வதேச தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு ஏற்ப ஒரு சமூகம் தனது வளர்ச்சிப்பாதையை செலுத்தவில்லையானால் இக்கணனி தொழில்நுட்பயூகத்தில் நாம் வெற்றி ஈட்ட முடியாது. இதன் அடிப்படையில் இடைக்காடுச் சிறாHகளின் கணனி கல்வியைக் கருத்திற்கொண்டு இதனை மேம்படுத்தும் வகையில் உலகம் முழுவதும் இடம்பெயர்ந்து வாழும் இடைக்காடு, வளலாய் மக்களின் முயற்சியால் இடைக்காட்டில்; கணினி வகுப்புகள் ஆரம்பித்து நடத்தப்பட்டுவருகின்றன.

5

இடைக்காடு மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கம்(கனடா) இணையத்தளத்தை உருவாக்கி உலகத்தில் வாழும் அனைத்து இடைக்காடு, வளலாய் உறவூகளையூம் ஒரு குடைக்கீழ் ஒருங்கிணைத்து வைத்திருப்பது பெரும் வெற்றியே. இடைக்காடு, வளலாய் உறவூகளை ஒருங்கிணைத்து வைத்திருப்பதுடன், இடைக்காடு, வளலாய் மண்ணின், மக்களின் கலை, பண்பாடு, வரலாறு ஆக்கியவற்றின் சிறப்புத்தன்மைகளைப் பாரெங்கும் பறைசாற்றி வருவதோடு, இடைக்காடு, வளலாய் கிராமங்கள் தொடHபான அன்றாட நிகழ்வூகளையூம் உடனுக்குடன் பதிவூ செய்து தரும் ஊடகமாகவூம், ஆவணப் பெட்டகமாகவூம் விளங்குகிறது. இன்றைய தொழில்நுட்ப உலகத்திற்கு ஈடுகொடுத்தும் எமது இளைய சமூகத்தினாpன் அறிவூப் பசிக்கு ஈடுகொடுத்தும் நவீன முறையிற் திகழ்கிறது.