தேசிய மட்டத்திற்கு தெரிவு
செல்வி தங்கவேல் தீபிகா
கணிதப் பிரிவு (2014 Batch)
யா/இடைக்காடு மகாவித்தியாலயம்
தந்தை: திரு. நடராசா தங்கவேல்
தாய்: திருமதி தங்கவேல் சிவேஸ்வரி
முகவரி: ஐயன்குட்டிய வளவு ,
இடைக்காடு,
அச்சுவேலி.
யா/இடைக்காடு மகாவித்தியாலயத்தை சேர்ந்த செல்வி தங்கவேல் தீபிகா, 2013 ஆம் ஆண்டுக்கான தமிழ் மொழித்தின இலக்கியத் திறனாய்வு போட்டியில் பங்குபற்றி பாடசாலை, கோட்டம், வலயம், மாவட்டம், மாகாணம் ஆகிய அனைத்து மட்டங்களிலும் முதலாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலக்கியத் திறனாய்வு என்பது கொடுக்கப்பட்ட செய்யுள் உரை நடைப்பகுதியில் காணப்படும் ஆக்கத்திறன் சார்ந்த விடயங்களை விமர்சித்து எழுதுதல் ஆகும். இவ் வினாப்பத்திரம் மூன்று மணித்தியாலயங்களைக் கொண்டது.
தமிழ்த்துறை சார்ந்த இப் போட்டியில் கணிதப்பிரிவில் கல்வி பயிலும் மாணவியாகிய த. தீபிகா அவர்கள் பங்கு கொண்டமை பாராட்டத்தக்கது. மேலும் எமது பாடசாலையில் இவ்வாறான போட்டியில் பங்கு கொண்டு தேசிய மட்டம் வரை செல்வது இதுவே முதல் தடவையாகும் என்பது ஒரு வரலாற்றுப் பதிவாகும். 2013 தமிழ்த்தினப் போட்டியில் எழுத்தாக்க நிகழ்வில் யாழ்ப்பாணக் கல்வி வலயத்தில் தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இரு மாணவர்களில் இவர் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை(2013.07.06) கொழும்பு றோயல் கொலிஜ் இல் நடைபெறவுள்ள தேசிய மட்டப் போட்டியிலும் இம் மாணவி வெற்றி வாகை சூடிவர வாழ்த்துகின்றோம்.