தேசிய மட்டத்தில்
முதலாம் இடம்

0OHL2O

செல்வி தங்கவேல் தீபிகா
கணிதப் பிரிவு (2014 Batch)
யா/இடைக்காடு மகாவித்தியாலயம்

தந்தை :   திரு. நடராசா  தங்கவேல்
தாய்   :   திருமதி தங்கவேல் சிவேஸ்வரி
முகவரி :   ஐயன்குட்டிய வளவு ,
இடைக்காடு,
அச்சுவேலி.

யா/இடைக்காடு மகாவித்தியாலயத்தை சேர்ந்த செல்வி தங்கவேல் தீபிகா, 2013 ஆம் ஆண்டுக்கான தமிழ் மொழித்தின இலக்கியத் திறனாய்வு தேசிய மட்ட போட்டியில் (06.07.2012 இல் நடைபெற்றது.) முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.  மேலும் எமது பாடசாலையில் இவ்வாறான போட்டியில் பங்கு கொண்டு தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளமை இதுவே முதல் தடவையாகும். இது ஒரு வரலாற்றுப் பதிவாகும்.

எனவே அவரை கௌரவித்து பாராட்டும் விழா நேற்று (2013.07.15) நடைபெற்றது. இத்தியடிச் சந்தியிலிருந்து  பாண்ட் வாத்திய அணியுடன் அழைத்து வரப்பட்டு பாடசாலை மண்டபத்தில்; அவரின் பெற்றோர் உறவினர் மற்றும் சிறப்பு விருந்தினர் வலயமட்ட பிரதிநிதிகள்  ஊர்மக்கள் முன்நிலையில்        மிகச்சிறப்பாக அவர் கௌரவிக்கப்பட்டுள்ளார்.  செல்வி த.தீபிகா அவர்களின் திறமையினை பாராட்டுவதோடு எதிர்காலத்திலும் பல வெற்றிகளை பெற்றிட வாழ்த்துகின்றோம்.

பழைய மாணவர் சங்கம்,
யா/இடைக்காடு மகாவித்தியாலயம்.