குழந்தையின் அழுகை                                               images (3)
ஊரெல்லாம் கேட்டது
இப்போது அது அழுவதில்லை
ஆனால் பசி மட்டும் தீரவில்லை
அப்போ எப்படி?
பளார்… பளார்…
இனி அழுதால் இதைவிட மோசமாக…
அடியின் அகோரத்தில் அடங்கி ஒடுங்கி…

நாங்களும் அப்படித்தான்
எங்கள் அழுகுரல்
உலகுக்கே கேட்டது
நாங்கள் பயங்கரவாதியாம்
உலகமே திரண்டுவந்து
எங்களை அடக்கி ஒடுக்கி..
கொன்று குவித்து..
நாங்கள் இப்போது
அழுவதில்லை
அழக்கூட முடிவதில்லை
ஆனாலும் எங்கள் பிரச்சினை
அப்படியே, ஏன் அதைவிட மோசமாக
இப்போதும் அப்படியேதான்
உள்ளது என்பதை
உலகம் அறியாதா?
அறிந்தும் பொய்யாக
உறங்கிக் கிடக்கிறதா?
எங்கள் மெளன அழுகை
எதுவரை?
அது எப்போது
முடிவுறும்?
அது
அவனுக்கே வெளிச்சம்!                        images (4)

பொன் கந்தவேல்