துயர் பகிர்வோம்

2017_Kanmani

இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட கண்மணி செல்லத்துரை இன்று இடைக்காட்டில் இறைபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை (சுப்பையா) – சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான பொன்னையா-வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லத்துரையின்(VCO) அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான சிவலிங்கம்(பிரதம புகையிரத நிலைய அதிபர்), செல்லம்மா, கந்தையா(முத்து), சின்னத்துரை மற்றும் தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும் காலம் சென்றவர்களான இளையதம்பி(ஆசிரியர்) , குமரேசமாணிக்கம்(புகையிரத நிலைய அதிபர்), செல்லம்மா, இராசம்மா, சுப்பிரமணியம்(Engineer), மற்றும் தெய்வானை(Canada) , மகேஸ்வரி, மாணிக்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை இடைக்காட்டிலுள்ள அன்னாரின் இல்லத்தில் இடம் பெற்று பூதவுடல் சாமித்திடல் மயானத்தில் தகனம் செய்யப்படும்

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர். நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்;
திருமதி தங்கம்மா குமரேசமாணிக்கம் (சகோதரி)