துயர்பகிர்வோம்2014_theiva

திருமதி.கைலைநாதன் செல்வமணி இறைபதமடைந்தார்.
இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் திருகோணமலையை வதிவிடமாகவும்
கொண்ட திருமதி கைலைநாதன் செல்வமணி திருகோணமலையில் இறைபதமடைந்தார்.
அன்னார் காலம் சென்றவர்களான கொத்தவளவு விசுவலிங்கம் பாக்கியமனோண்மணி அவர்களின் அன்பு மகளும் , தோப்பு, அச்சுவேலியை சேர்ந்த கைலைநாதனின் அன்பு மனைவியும், கங்கா, தயாபரன் ஆகியோரின் அன்புத்தாயாரும், சோமகாந்தன், லக்சி ஆகியோரின் அன்பு மாமியாருமாவார்.
மேலும் அன்னார் சிவபாலன், சுந்தரமூர்த்தி, சரவணபவன், ஆறுமுகநாதன் (கனடா), கணேசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார்,
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை வெள்ளிக்கிழமை கொத்தவளவு, இடைக்காட்டில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடை பெற்று பூதவுடல் சாமித்திடல் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.

தகவல் :
வி. ஆறுமுகநாதன் (சகோதரன்) : 514-341-0132
மொன்றியல்,கனடா.

Last Modified: October 23, 2014