திரு. வேலுப்பிள்ளை கதிர்காமநாதன்

துயர்பகிர்வோம்

இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கதிர்காமநாதன் 03-06-2013 திங்கட்கிழமை இரவு இடைக்காட்டில் அன்னாரது இல்லத்தில் இறைபதமடைந்தார். அன்னார் மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும் , மனோகரன் ,குமரன் (கனடா), ஈஸ்வரன் (பெல்ஜியம்), கதிர்மதி (கனடா) அவர்களின் அன்புத் தகப்பனாரும், தவகுமாரி, ஜகந்தினி, சயந்தினி, யதுதீசன் ஆகியோரின் மாமனாரும், மிதுசயன், ராகவி, கிருசன், யசானா, சயானி, அக்சயன், அயிசயன் ஆகியோரின் அன்புப் பேரனுமாவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 04-06-2013 செவ்வாய்க்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சாமித்திடல் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.

News from Idaikkadu Muniyappar Temple‏

சிவமயம்

இடைக்காடு அருள்மிகு காசி விசுவநாதர்(முனியப்பர்)ஆலயம்

கும்பாபிஷேக தின இரண்டாவது ஆண்டு பூர்த்தி விழா.
25.05.2013 சனிக்கிழமை.
மெய்யடியார்களே,
சகல செல்வங்களும் ஒருங்கே அமைந்ததும் சைவமும் தமிழும் நறுமணம் வீசும் எம் இடைக்காடு ஊரிலே கேவிள் பதி மருதடியில் கோவில் கொண்டெழுந்து அருள் பாலிக்கும் அருள் மிகு காசி விசுவநாதர் ஆலய கும்பாபிஷேக தின ஆண்டு நிறைவு விழா விஜய வருடம் வைகாசித் திங்கள் 12ம் நாள் (25.05.2013) பூரணையும் வைகாசி விசாக நட்சத்திரமும் சித்த யோகமும் கூடிய சுப நாளான சனிக்கிழமை அன்று நடை பெற திருவருள் கூடிஉள்ளது .

அன்றைய தினம் காலையில் மூலவருக்கும் மற்றும் சகல பரிவார மூர்த்திகளுக்கும் விஷேட அபிசேகங்கள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து விஷேட பூசைகளும் நடைபெறவுள்ளது.
மாலையில் பூசைகள் நடைபெற்று காசி விசுவநாத பெருமானுக்கும் விசாலாட்சி அம்மைக்கும் திருக்கலியாணம் நடை பெற்று வீதி உலாவும் நடை பெற உள்ளது.

பக்தர்கள் யாவரும் இவ் விழாவில் பங்கேற்று காசி விசுவநாத பெருமானின் அருளை பெற்று ஏகுமாறு அன்புடன் அழைக்கின்றோம் .இவ் விழாவிற்கு உபயம் செய்ய விரும்பும் அடியார்கள்  ஆலய நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

இங்கனம்
செயலாளர்  ,
வே.கணேசலிங்கம் (அப்பன்)
தொடர்புகட்கு -077-1619359
ஆலய பரிபாலனசபை ,
இடைக்காடு அருள்மிகு காசி விசுவநாதர் ஆலயம்.

IdaikkaduWeb.com WordPress

A new version of the website was released today written using WordPress. It’s still in beta, so there will be a lot of changes forthcoming. The website was launched early so that it can start handling new content for the year.

Milestones

  • Transferred idaikkaduweb.com, idaikkadu.net and idaikkadu.org to another hosting provider. Response time is improved, and costs have been cut in half. (I’m sharing the hosting account with another website that I host – win, win)
  • Assigned a dedicated IP address to idaikkaduweb.com
  • Installed a self-signed certificate for HTTPS use on idaikkaduweb.com. Only using HTTPS for the admin pages for now. I would like to use full HTTPS for the entire site since HTTP -> HTTPS transitions are subject to ssl stripping attacks. Unfortunately, self-signed certificates present security exceptions to users. I don’t think most of our user’s would know how to proceed past the warning.

Meeting Minutes

இடைக்காடு பழைய மாணவர் சங்கம்-கனடா 31.03.2013 இல் குறித்த நேரத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் கடந்த இரு தாசாப்தமாக இக் கிராமத்தவர்களின் ஒத்துழைப்புடன் இயங்கி வருகின்றது. அவ் வகையில் இச் சங்கமானது தனது இலக்குகளில் அடுத்த படி முறையில் எமது உறவுகளை தெரியப்படுத்தி அவற்றை வலுப் படுத்தி ஆர்வம் ஏற்ப்படுத்தும் முகமாக தனது20ஆவது வருட பூர்த்தி விழாவினை கலை நிகழ்வுகளுடன் கூடிய இராப் போசனத்துடன் கொண்டாடுவது என பல வகையான நீண்ட ஆலோசனைகளின் பின்னர் சமூகமளித்த அங்கத்தவர்களினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இவை பற்றிய விபரங்கள் பின்னர் அறியத் தரப்படும்.

Public Meeting

இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் –கனடா கிளை

20 ஆவது வருட பூர்த்தியினை முன்னிட்டு ஓர் மலர் வெளியீடும் அண்மைக் கால எமது கிராமஇபாடசாலையின்  நிலைமைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (31-03-2013) காலை 10-00 மணியளவில் திரு. Moorthy அவர்களின் இல்லத்தில் (27, loggerhead grove) நடைபெற உள்ளது. எனவே அங்கத்தவர்கள் நலன்விரும்பிகள் கலந்து கொண்டு தங்கள் ஆலோசனைகள் கருத்துக்களை வழங்கி நிகழ்வினை சிறப்புற நாடாத்த ஒத்துழைப்புத் தருமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

இடம் திரு. Moorthy அவர்களின் இல்லம் (27 Loggerhead Grove)
காலம் 31-03-2013 காலை 10:00 மணி

நன்றி

Meeting Minutes

அனைவருக்கும் எமது 2013 ம் வருடத்தின் வாழ்த்துக்கள் . 6.01.2013 இல் எமது இவ் வருடத்தின் நிர்வாகசபையின் கலந்துரையாடல் நடைபெற்றது .இதில் தம்பு முருகேசமூர்த்தி, சுப்ரமணியம் ஜெயகுமார்,நாகமுத்து செல்வபவன் ,கந்தசாமி அருணகிரி, மகாலிங்கசிவம் நந்தகுமார்,தம்பி ஐயா திரிபுரபவன்,ஈஸ்வரமூர்த்தி அனுஷன் ,பொன்னம்பலம் கந்தவேள்,சிதம்பரப்பிள்ளை நல்லதம்பி ஆகியோர் கலந்து கொண்டு தமது அனுபவங்களையும் ஆலோசனை களையும் தெளிவுடன் எடுத்துக் கூறினார்கள் . சென்ற வருடத்தின் அனைத்து நிர்வாக சபையினருக்கும் மற்றும் ஊக்கமும் ஒத்துழைப்பும் வழங்கிய அனைவருக்கும் புதிய நிர்வாக சபையினர் நன்றிகளை தெரிவித்துக்கொண்டு. இவ் வருடத்திற்கான பின்வரும் செயல் திட்டங்கள் பற்றி ஆலோசனை செயப்பட்டது.கடந்த கால செயல் முறையும் நடைமுறை தடங்கல்களும் அவைகளை தவிர்த்தலும் சிறந்த முறையில் செயல்படுவதும். அனைத்து அங்கத் தவர்களையும் இன்முகத்துடன் வரவேற்று அவர்களின் ஆலோசனையுடன் அங்கத்துவபணத்தினை பெற்று கொள்ளுதல்.(குடும்பம் – $15,தனிநபர் – $10, தயவு கூர்ந்து எமது முன்னேற்றத்திற்கு துணை நிற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.)