அனைவருக்கும் நன்றிகள்

இடைக்காடு பழைய மாணவர் சங்கம் கனடா கடந்த ஜூலை (July 21, 2013) ஒழுங்கு செய்த வருடாந்த ஒன்று கூடலில் கலந்து கொண்டு மிகச் சிறப்பாக நடைபெற உதவிய அனைவருக்கும், மற்றும் இத் திகதியில் நடத்துவதற்கு Neilson Park இனை பதிவு செய்துதவிய திரு. வை. பொன்னீஸ்வரன் அவர்களுக்கு அனைவர் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும் நன்றிக் குரியவர்களாக, அனைத்து இளையோருக்கும், இணையத் தள, வானொலி ஊடகப் பிரிவினருக்கும் அனைத்து வகையான பொருட்களையும் ஏற்றி இறக்கி உதவி செய்த அனைவருக்கும், நிதியினை சேகரித்து தந்தோருக்கும் BBQ உணவுகளை தகுந்த நேரத்தில் நல்ல முறையில் அளித்த அனைவருக்கும் பொழுது போக்கு விளையாட்டுக்களை ஒழுங்கு செய்து நடாத்திய தன்னார்வ இளையோருக்கும், தேநீர் ,சாப்பாடுகளை அங்கே சமைத்து பரிமாறிய அனைவருக்கும் புகைப்படக்கருவி, புகைப் படங்களை எடுக்க உதவிய அனைவருக்கும் நிறைவாக Park கினை சுத்தம் செய்த அனைவர்க்கும் மனம் மகிழ்ந்து நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இவ் ஒன்று கூடலில் ஏதும் குறை நிறைகள் இருப்பின் உங்கள் ஆக்க பூர்வமான கருத்துக்களை நிர்வாக உறுப்பினர்களிடம் பரிமாறிக் கொள்ளவும்.

நன்றி.
நிர்வாகக்குழு.

Last Modified: July 25, 2013