பிறந்த வாழ்ந்த மண்ணை விட்டு விலக மனமில்லாமல் மனைவி மக்களின் வற்புறுத் தலுக்கிணங்க ஊரைவிட்டுப் புறப்படும்போதும் அவர் மிகவும் வேதனைப்பட்டது தன் உயிருக்கு உயிராக நேசித்த காரைவிட்டுவிட்டுப் போகிறோமே என்று தான். அதனைத் தன் உயிர்நண்பனான ராசுவிடம் ஒப்படைத்துவிட்டு தான் திரும்பி வரும்வரை அதைப் பத்திரமகப் பாதுகாக்கும்படி கூறிவிட்டுத்தான் போனார்.

கந்தசாமி கனடா போய்விட்டார். அவர் கனடாவைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும் அங்கத்திய நாட்டு நடப்பு அவருக்கு சங்கடமாகத்தான் இருந்தது. அங்கு ஓடிதிரியும் புதிய புதிய கார்களைப்பார்தபோது தொழில் நுட்பம் எவ்வளவு வளர்ந்துவிட்டது என்பதை நேரில் கண்டார்.

ஊரில் எட்டுமணிக்கும் நித்திரையால் எழும்பாத மகன் நித்திரையே இல்லாமல் இரவு முழுவதும் வேலை செய்வதைக் கண்டபோது இந்த நாடு எப்படிஎல்லாம் மனிதர்களை மாற்றிவிட்டது என வியந்து நின்றார்.

அப்பா இங்கு வாழ்வதானால் அனைவரும் கார் ஓடத்தெரிந்தி ருக்கவேண்டும். எனவே நீங்களும் காரோடப்பழகி லைசென்ஸ் எடுங்கோ என மகன் கூறியபோது சரி அதையும்தான் பார்ப்போமே என தன் மகனின் காரை ஓட்டமுனைந்தார், கந்தசாமி. அங்கு கிளச் உள்ள வாகனம் ஓடிவிட்டு இங்கு கிளச் இல்லாத வகனம் ஓடுவது சங்கடமாக இருந்தது, ஒரு நல்ல நாளில் கந்தசாமி காரின் சாரதியின் ஆசனத்தில் அமர்ந்துகொண்டார். அவருக்குப் பக்கத்தில் மகன் அமர்ந்துகொண்டார். காரை இயக்கி பத்து யார்கூடப்

போயிருக்காது., ஐயோ அப்பா மற்றப்பக்கம், மற்றப்பக்கம் என மகன் கத்தியபோது தான் அந்த விபரீதத்தை கந்தசாமி உணர்ந்துகொண்டார். முப்பது வருடமாக இடப்பக்கத்தால் ஓடி அனுபவப்பட அவரால் இங்கு வலப்பகதால் ஓடுவதற்கு கையும் மனமும் இடம் கொடுக்கவில்லை. தொட்டிலில் பழக்கம் என்பார்களே, அவரால் மாற்றவேமுடியவில்லை. அன்றுடன் கார் ஓடும் எண்ணதைக் கைவிடுவிட்டார், கந்த்சாமி.

மாதம் மூன்று ஓடிவிட்டது. ஊரிலே ராசாவாகத் திரிந்த கந்தசாமிக்கு அன்னிய தேசம், அந்நிய மொழி, அந்நிய முகங்கள், அவர் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார். மீண்டும் ஊருக்கே போகப்போகிறேன் என தனது முடிவக்கூறியபோது மனைவி மக்கள் அதைத் தடுக்க விரும்பவில்லை,

ஆண்டு 2010.

கந்தசாமி மீண்டும் ஊருக்கு வந்துவிட்டார். சகோதரி பாக்கியத்துடன் தங்கிக்கொண்டார். பலரும் வந்து அவரைச் சந்தித்தனர். அவர் திரும்ப வந்ததில் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி.

கால ஓட்டம் பல மாறுதல்களைச் செய்துதான் வருகிறது. கார் வைத்திருந்த பலர் அதனை விற்றுவிட்டு முச்சக்கர வண்ண்டிக்கு மாறிவிட்டனர். கந்தசாமி மட்டும் தன் சோமசெற் வாகனதை விற்கவுமில்லை, கைவிடவுமில்லை. கந்தசாமியின் கார் மீண்டும் வீதியில் வலம் வந்தது. அவருக்கென்று சில வாடிக்கையாளர் இன்னமும் இருக்கவே செய்தனர். நாள் போகப்போக அவரின் உடலில் தளர்ச்சி ஏற்பட்டபோதும் மனதிலோலோ கொள்கையிலோ தளர்ச்சி ஏற்படவில்ல்லை. இன்னனும் பிரவசத்துக்கு அவரின் கார் அரைச்சலார் கட்டணத்தில்தான் ஓடிக்கொன்றிருக்கிறது.

அந்தக்கார் அவரின் கைகு வந்து இருபது வருடங்களாகி விட்டது. அவரைப்போலவே அவரது காருக்கும் வயதாகிவிட்டதை உணர்ந்தார். தனக்கும் இறுதிநாகள் நெருக்குவதை அவர் உள்ளுணர்வு கூறியது. எனவே தூர நோக்குடன் ஒரு மரண சாசனதை தயார் செய்துகொண்டார்.

தனது காரினை யாழ்ப்பாணத்த்திலுள்ள றங்கசாமி கராச்சுக்கு கொண்டுசென்று முழுச்சேவீஸ் செய்துதரும்மப்டி மெக்கனிக் ரங்கசாமியைக் கந்தசாமி கேட்டபோது, ஏன் அண்ண இதிலை மினக்கிடுறியள் ஒரு ஆட்டோவை எ டுத்து ஓடலாம் தானே என றங்கசாமி சொன்னபோது இல்லை, நான் செத்தாலும் இன்னும் இருபது வருசத்துக்கு அசையாமல் ஓ டவேண்டும், செலவைப்பற்றி கவலைஇல்லை எனக்கூறி அதைப் புதிய வாகனம் எனக் கூறுமளவுக்கு திருத்திகொண்டு வந்தபோது பலருக்கும் அது ஆச்சரியமாகத் தான் பட்டது.

இதைக்கண்டு சகோதரி பாக்கியமும் அதைத்தான் கேட்டாள்.

அப்போது அவர், பாக்கியம் , நான் இனிக்கனநாள் இருக்கமாடன் நான் இறந்ததும் செய்யவேண்டியவைகளை எனது உயிலில் எழுதி இந்தப்பெட்டியில் வைத்திருக்கின்றேன். நான் இற்ந்ததும் அதன்படி செய்யுங்கள் என அவர் கூறியபோது இல்லை அண்ணை நீங்கள் இன்னும் கனகாலம் இருப்பியள் என ப்பாகியம் கூறியபோது, இல்லைப் பாக்கியம் வந்த அலுவல் முடிந்தால் போகத்தானே வேண்ணும் எனக் கந்தசாமி கூறியபோது பாக்கியத்தின் உள்மனம் ஏதோ கூறியது.

ஒருமாதம் கூட ஆகவில்லை. காலை எட்டுமணியும் ஆகிவிட்டது, காலை ஐந்து மணிக்கே எழும்பிவிடும் கந்தசாமி

ஏன் இன்று இன்னும் எழும்பவில்லை என எண்ணிய பாக்கியம் அவரைதேடியபோது அவர் காரின் சாரதி ஆசனத்தில் ஸ்ரியறிங்கில் முகம் புதைத்தபடி இருப்பத்க்கண்ட பகியம் அண்ணை அண்ணை எனக்கூவிய போதும் பதில் இல்லை, கிட்டிடே போய் அவரைத் தொட்டபோது உடல் சில்லிட்டது.

அண்ணா அண்ணா என்ற பாக்கியத்தின் அழுகுரல் ஊரையே அழவைத்தது. கந்தசாமி ஒருவருக்கும் ஒருதொல்லயும் இல்லாமல் காரில் இருந்தபடியே போய்விட்டார். மனைவி பங்கயமும் மகன் சிவராசாவும் கனடாவிலிருது வந்து ஈமச்சடங்கை செய்து வைதனர்.

ஆண்டு 2020.

கந்தசாமியும் காலமாகி ஆண்டுகள் பத்து ஓடிவிட்டது. விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில கார்கள் மட்டுமே யாழ்ப்பாணப்பகுதியில் இன்னமும் இருக்கின்றன.

அவர் எழுதிய உயிலின்படி அவரது வங்கியில் இருந்த பணம் ஐந்து லட்சம் நிலையான வைப்பிலிட்டு அதன் வட்டிப்பணம் ஊர் வாசிக்சாலையின் பத்திரிகை மற்ற்றும் இன்னபிற தேவை க்கும், கார் வாசியசாலையின் பொறுப்பிலும், ஊரிலுள்ள இளைஞர்கள் ஓடிப்பழகுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

கந்தசாமியின் சோமசெற்கார் அதேபழைய கம்பீரதுடன் மந்திகையிலிருந்து வல்லைவெளியத்தாண்டி அச்சுவேலி நோக்கி வந்துகொண்டிருக்கிறது. கந்தசாமியின் மருமகன் ஞானம் காரை ஓட்டிக்கொண்டிருந்தான். கந்தசாமியின் கம்பீரமான உருவப்படம் சாரதி ஆசனத்துக்கு முன்னால் பொருத்தப்ட்டிருந்தது. பின் ஆசனத்தில் நாயகி தனது

கைக்குழந்தையுடன் , அவள் அருகில் அவள் தாய் ராசம் . தாயின் கண்ணிலிருந்து கண்ணீர் வர, அதைகண்ண்ட மகள் நாயகி அதப்ப்ற்றிகேட்க, , பிள்ளை, இருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன் நீ மந்திகை ஆஸ்பத்திரியில் பிறந்தபோது இப்படி ஒருநாள் இதே வல்லைவீதில் இதே காரில் என்மடியில் இருந்தாய். இதே காரை .கந்த்சாமி அண்ணர்தான் ஓட்டி வந்தார். அதேபோல் இன்று நீ உன் குழதையுடன். அதை நினைதேன் அழுகையை அடக்க முடியவில்லை.

உயிருடன் இருக்கும் பலர் அடுதவருக்கு உதவாத இந்தக் காலதில் இறந்தபின்பும்….

அவர் மனிதப்பிறவியல்ல. அவர் ஒரு தெய்வப்பிறவி.

கடவுள் படைத்த படைத்த மனிதன் ஆகட்டும், மனிதன் படைத்த இயந்திரமாகட்டும், ஊருக்கு உளைப்பவர்கள் என்றுமே இறப்பதில்லை …..

அன்பிலார் எல்லாம் தமக்குரியர், அன்புடையர்

என்பும் உரியர் பிறற்கு – குறள்

பொன் கந்தவேல்

01.01.2016