திரு ந.பு. கந்தசாமி

துயர்பகிர்வோம்Mr.kanth திரு.ந.பு. கந்தசாமி

இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு ந.பு. கந்தசாமி அவர்கள் இன்று(24/08/2013) இடைக்காட்டில் காலமானார். அன்னார் தெய்வநாயகியின் அன்புக்கணவரும் திரு கதிரித்தம்பி (இளைப்பாறிய அதிபர்) அவர்களின் அன்புச் சகோதரரும் தவபுண்ணியமூர்த்தி, தவமணி, முத்துராசா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது

இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

தகவல்
முத்துராசா (மகன்) London 07565528677

சிவசுந்தரம் அருணாசலம்

sivasuதுயர்பகிர்வோம்

மண் மகிழ: 16 09 1934
கண் நெகிழ: 18 08 2013

திரியாய், திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கனடா ஸ்காபரோவை வதிவிடமாகவும் கொண்ட சிவசுந்தரம் அருணாசலம் அவர்கள் 18. 08. 2013 ஞாயிற்றுக் கிழமை அன்று அதிகாலை கனடாவில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற அருணாசலம் கனகம்மா தம்பதிகளின் அருமைப் புதல்வரும், காலஞ் சென்ற பொன்னம்பலம் ஆசைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும், சரஸ்வதி அவர்களின் ஆசைக் கணவரும் காலஞ்சென்றவர்களான நாகம்மா, செல்வநயினார், கதிரவேற்பிள்ளை, சிவசுப்ரமணியம், புவனேஸ்வரி அரசரத்தினம், சிவசண்முகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும் செல்வரத்தினம் (வவுனியா), பஞ்சாட்சரம் (பிரான்ஸ்) ஆகியோரின் அருமை அண்ணாவும் கனடாவில் வசிக்கும் சிவாஜினி (சிவா), தயாளினி (ரதி), திலீபன், மந்தாகினி (ரமா) ஆகியோரின் அருமைத் தந்தையும், ராஜதுரை (ராஜா) , விஜயகுமார் (குமார்), ஜெயந்தினி, நந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமாவும் வைசால், சாருஜன், ஜெனுசன், கபிஷன், சாம்பவி, சரன், மான்ஷி, ரிஷியா ஆகியோரின் அரிய பேரனும் ஆவார். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது

திருமதி பாக்கியம் சுப்ரமணியம்

துயர்பகிர்வோம்

 
இடைக்காடு ,செட்டியளவுவினை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி பாக்கியம் சுப்ரமணியம் அவர்கள் 03/08/2013 அன்று இடைக்காட்டில் காலமானார். அன்னார் காலம்சென்ற திரு சுப்ரமணியம் அன்பு மனைவியும், வசீகரன்(கனடா ), யசோதரன்(லண்டன் ), தயாபரன்( இடைக்காடு), ஜெயசிறீ(இடைக்காடு), லோகநாதன் யசோதரா(கனடா ), கந்தையா சுபத்திரா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயுமாவார். வசந்தமலர்(கனடா), சரவணபவான், லோகநாதன், கந்தையா, யாலினி, கஜனி அவர்களின் அன்பு மாமியுமாவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். இறுதிச் சடங்குகள் விபரம் பின்பு அறியத் தரப்படும்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகட்கு

 
யசோதரன்: 00 44 792 148 1594 (லண்டன்)