எங்கள் கிராமம்

ஒரு கிராமத்தின் கதை…

 

இடைக்காடு என்னும் ஓர் கிராமம்

 
பல விவசாய உழைப்பாளிகள்;, கல்விமான்கள்;, மக்கள் விடுதலை சமஉடமைவாதிகளை பெற்றெடுத்து தன்னகத்தே கொண்ட பூமி. உப உணவூப்பயிற்செய்கைக்கு ஏற்ற செம்மண், நெற் செய்கைக்கு ஏற்ற பொன்நிறமண் வளத்தையூம் கொண்ட விவசாய பூமி. வற்றாத நன் நீரூற்றைக் தன்னகத்தே கொண்ட செழிப்பான பூமி. வடக்கு எல்லையில் இலங்கை, இந்தியாவை பிரிக்கும் பாக்குநீரிணைக்கடல், கிழக்கு எல்லையில் தொண்டமானாறு என்ற இரு பெரும் நீர் வளங்களை கொண்ட அழகான வளமான கிராமம்.

கிராமத்தின் அமைவிடம்

 
இலங்கைத் திருநாட்டில் வடமாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணகுடாநாட்டில் வலிகாமம் கிழக்குப் பகுதியில் அமைந்த அச்சுவேலி கிராமசபை நிர்வாக பிரிவில் உள்ள கிராமம் இடைக்காடு. யாழ்ப்பாண நகரில் இருந்து வடக்குப் பக்கமாகச் சுமார் பன்னிரண்டு கிலோமீற்றர்களுக்கு அப்பால் கோப்பாய் தொகுதியில் சுமார் இரண்டு சதுர கிலோமீற்றர்களை பரப்பளவாகக் கொண்டது எமதுகிராமம். எமது கிராமத்தை அச்சுவேலி, தொண்டமானாறு ஊடாகச் செல்லும் யாழ் – பருத்தித்துறை வீதி;;, யாழ்ப்பாணத்தின் வடக்கு கடலோர வீதியான பருத்தித்துறை – காங்கேசன்துறை வீதிஇபலாலி – இடைக்காடு வீதி என்பன ஊடறுத்து செல்லுகின்றன. கிராமத்தின் வடக்கு எல்லையாக பாக்குநீரிணைக்கடலும் கிழக்கு எல்லையாக தொண்டமானாறு எனும் உப்பு ஆறும், மேற்கு, தெற்கு பகுதிகளில் பலாலி, அச்சுவேலி என்ற ஊர்களும் அமைந்துள்ளன.

இன்னும் குறிப்பாக சொல்வதானால் எமது கிராம்தை சுற்றி வளலாய், தம்பாலை, கதிரிப்பாய் என்ற கிராம நிலப்பரப்புகளும் பாக்குநீரிணை, தொண்டைமானாறு என்ற நீர்ப்பரப்புக்களும் அமைந்துள்ளன.

இப்பிரதேசத்தில் 100 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் தற்பொழுது வசிக்கின்றனH. வசதியான வாழ்வை அமைத்திட பண்பட்ட செந்நிலமும் வற்றாத நிலத்தடி நன்நீரூற்றும் கால்நடை மேய்ச்சல் பரப்பும், மக்களுக்கு சந்தோஷமும், மன அமைதியூம் ஈட்டும் பெரும்வளங்களாக இயற்கை வாhp வழங்கிய கடற்கரையூம் வடகிழக்கே அமைந்துள்ள செல்வசந்நதி கோவிலும் உள்ளன. தென்மேற்கே அமைந்துள்ள பலாலி விமானநிலையம் சர்வ தேச தொடர்புகளுக்கான வசதிகளை வழங்கியூள்ளது.

இடைக்காடு எனும் பெயர்வரக்காரணம்

 
இடைக்காடு என்ற பெயர் எப்படி உருவாகியது என்பதற்கு வரலாற்று ரீதியான ஆதாரங்கள் உறுதியாக கிடைக்காவிட்டாலும் “இடைக்காடு” என நாம் விருப்புடன்; உள்ளத்திலிருந்து உச்சாpக்கும் இப்பெயH அமைந்ததற்கான காரணத்தை ஊH மக்களால் வாய்மொழியாக வழங்கி வரும் தகவல் மூலம் கூறலாம். வாய்மொழியாக வழங்கி வருவதால், அவற்றை வெறும் கதைகள் என்;று ஒதுக்கிவிட முடியாது. ஏனென்றால், இவை ஏற்றுக்கொள்ளக் கூடிய கதையாகவூம், கதைக்கான காரணங்கள் சிலவற்றை நாம் தோம்புகளிலும் காணக்கூடியதாக உள்ளது.

பல தலைமுறைகளுக்கு முன்பு வளலாய், தம்பாலை என்ற இரு கிராமங்கள் மட்டுமே அருகருகே கிழக்கு மேற்காக இருந்தன. இவ் இரு கிராமங்களின் எல்லைப்பகுதிகளில் (வளலாய் கிழக்கு, தம்பாலை மேற்கு) நாகதாளி போன்ற விஷமுட்கள் நிறைந்த “பற்றை” காடுகள் இருந்தன. மேலும் இந் நிலப்பரப்பு வைரமான கற்பாறைகளினால் ஆனவை. இப்பகுதி மக்களால் பண்படுத்தமுடியாத வளமற்ற, உபயோகமற்ற நிலப்பரப்பாக கருதி; பாவனைக்குதவாத பிரதேசமாக கைவிடப்பட்ட பற்றைக்காடாக இருந்து வந்தது.

  1. வன்னியிலுள்ள ஒட்டுசுட்டான் (இங்கு இடைக்காடு என்னும் ஓர் பகுதி உண்டு) பகுதியிலிருந்து அல்லது
  2. யாழ்ப்பாணகுடாநாட்டிலுள்ள உடுவில் பகுதியிலிருந்து

வாழ்வூ தேடி வந்தவர்களுக்கு வளலாய் தம்பாலை மக்கள் இக்காட்டுப்பகுதியில் வாழ்வதற்கு இடமளித்தனர். இங்கு குடியேறிய மக்கள் காட்டை அழித்து களனியாக்கி வளம் கொழிக்கும் விவசாய பூமியாகமாற்றி இடைக்காடு என்னும் கிராமத்தை நிர்மாணித்தனரஇ; உருவாக்கினர். மேற்கூறிய இரு பகுதிகளிலும் ஒட்டுசுட்டானிலிருந்து வந்ததற்குரிய ஆதாரங்களே அதிகம் உள்ளன.

எவை எப்படியிருப்பினும் மேற்கூறப்பட்ட காரணம் இடைக்காடு என்ற பெயருடன் பொருந்தி வருவதால், உண்மை என நம்பப்படுகிறது. ஆனாலும் இது இன்னும் ஆய்வூக்குரிய ஒன்றே?

Village2

தொண்டமானாறு நன்நீராக்கும் திட்டம்

 
சாவகச்சேரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான அமரர் சி.குமாரசாமி, கோப்பாய் பாராளுமன்ற உறுப்பினர் வன்னியசிங்கம் ஆகியோரின் காலத்தில் மகாவலி கங்கையை வடக்கே கொண்டுவரும் முயற்சியின் ஒரு பகுதியாக தொண்டைமானாறு நன்நீர் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டம் இலங்கையின் இரண்டாவது பிரதமH டட்லி சேனநாயக்கா அவHகளால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி தொண்டமானாறில் ஆரம்பித்து ஆனையிறவூ வரை நீண்ட சவர் நீர் தொண்டைமானாற்றை நன்நீர் ஆக்கும் நோக்குடன் இதற்கான ஆரம்ப வேலையான சவர் நீரை தொண்டைமானாற்றிலிருந்து பாக்குநீரிணைக்கு திருப்ப தேவையான, இயற்கை காற்று உந்துதலால் செயற்படும் மிகப்பெரிய காற்றாடி நீர் இறைக்கும் இயந்திரமும் இணைக்கப்பட்டு ஆரம்ப வேலைகள் இடைக்காட்டின் வட கிழக்கு மூலையில் நடைபெற்றன. இத்திட்டம் தொடரப்பட்டிருக்குமானால் இன்று யாழ்குடாநாட்டின் பெரும் நிலப்பரப்பு நெற் செய்கைக்கு உரிய நிலமாக மாறி இருக்கும்.

Village3

நிலத்தடி வளம்

 
ஆயிரத்து தொளாயிரத்து அறுபதாம்; ஆண்டுகளில் எமது கிராமத்தின் வடபகுதிக் கடற்கரையில் நிலத்தடி எண்ணை இருப்பதற்கான வாய்ப்புக்கள் அறியப்பட்டு ஆராய்சிகள் மேற்கொள்ளப்பட்டன. போதிய தொழில் நுட்ப வசதிகள் அக்காலகட்டத்தில் இன்மையினால் இவ் ஆராய்ச்சி தொடரப்படாமல் கைவிடப்பட்டது கவலைக்குhpயதே. இந்தப்பகுதியில் நிலத்தடி எண்ணை போன்ற தொல்பொருட்கள் இருப்பதற்குhpய வாய்ப்புகள் உள்ளதெனக் கருதப்படுகிறது

விவசாயம்

 
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வாHமற் றெல்லாந்
தொழுதுண்டு பின்செல் பவH.”
(குறள்:1033)

Village4

என்ற வள்ளுவாpன் வாக்குக்கமைய இங்கு வாழும் பெரும் தொகையான மக்கள் உழவூத் தொழிலையே முதற்கண் தொழிலாகக் கொண்டு வருபவHகள்.இடைக்காடுக் கிராமத்தில், நீH வளம் மட்டுமல்ல நிலவளமும் அவ்வூ+H மக்களுக்கு இயற்கையாக அமைந்த ஒன்றாகும். .இடைக்காடுச் செம்மண் அவ்வூ+H மக்களுக்குச் செம்மையான வாழ்வைச் செவ்வனச் செய்வதற்கேற்ப அமைந்துள்ளது. இங்கு வாழும் மக்கள் தம் நிலத்தைப் “பொன் விளையூம் பூமி” எனப்பெருமையாக கூறுவH. வருடம் பூராகவூம் எத்தகைய பயிரைச் செய்தாலும் ;.இடைக்காடு மண்ணில் அப்பயிHகள் செழிப்புடன் விளைவதும், வளHவதும் அவ்வூ+H மண்ணின் சிறப்புத் தன்மையாகும். மிகச் சிறந்த முறையில் நுட்பமாக விவசாயம் செய்வது அவ்வூ+H மக்களின் ஆழ்ந்த அனுபவத்தையூம் ஆற்றலையூம் எடுத்துக் காட்டுகிறது. ஒவ்வொரு பயிரும் விளையூம் காலங்களையூம் அவற்றின் ஒவ்வொரு பருவங்களையூம் அவற்றின் தட்பநுட்பங்களையூம் நன்கறிந்து அவற்றிற்கேற்ப பயிHச்செய்யூம்; முறைகள் அவ்வூ+H மக்களின் அனுபவக் கல்வியே.

Village5

ஆரம்ப காலங்களில் விவசாயத்;தொழில் விருத்தியில் காpசனை கொண்ட மூதாதையH கூட்டுக் குடும்ப வாழ்கையின் ஒரு அங்கமான பட்டை கட்டித் துலா மிதித்து நீH பாய்ச்சிப் பயிHகளை வளHத்தெடுத்தனா;. சூத்திரக் கிணறுகளை நிறுவி எருது பூட்டி நீHபாய்ச்சியதும் உண்டு.

வெங்காயம், மிளகாய், குரக்கன், கத்தாp, வெண்டி, மரவள்ளி, பயிற்றை, உருளைக்கிழங்கு, இராசவள்ளி, கறணை, வாழை, புகையிலை, கோவா, பீற்றுட், திராட்சை, லீக்ஸ், கரட், போன்ற பயிHகள் இம்மண்ணில் செழிப்பாக வளHவன. இத்தகைய பயிHகள் பெருமளவில் பயிhpடப்பட்டு, ஏற்றுமதி செய்யப்படுவன. இடைக்காடுக்கிராமத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் சுன்னாகப் பெரும் அங்காடியிலும், நெல்லியடி, அச்சுவேலி ஆகிய சிறு அங்காடிகளிலும் சந்தைப்படுத்தப்படும். ஆரம்பகாலங்களில் மிதியூந்துகளிலும் மற்றும் மாட்டுவண்டிகளிலும் தமது விளைபொருட்களை அங்காடிகளுக்கு எடுத்துச் சென்றனH. இயந்திர வாகனங்கள் வந்த பின்னர் இருசக்கர உழவியந்திரத்தில்(லான் மாஸ்ரர்) கொண்டு சென்றனH. மேலதிகமான விளைபொருட்கள் தினம்தோறும் லொறிகள் மூலம் இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Village6

விவசாயம் நன்றாக விhpவாக்கம் செய்யப்பட்ட காலங்களில் வெங்காயம், மிளகாய், உருளைக்கிழங்கு ஆகியன பெரும்தொகையாக லொறிகள்; மூலம் கொழும்புக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு தேசிய பொருளாதாரத்தில் எமது கிராமங்கள் பெரிதும் பங்கு செலுத்தின.

விவசாய மக்கள் கௌரவிக்கப்பட்ட திருநாள்

 
விவசாய உழைப்பாளிகளால் உருவாக்கப்பட்ட இக்கிராமத்தில் விவசாய உழைப்பாளிகள் மிகவூம் உன்னத நிலையில் கௌரவிக்கப்பட்ட வரலாற்று நிகழ்வையூம் இவ்விடத்தில் குறிப்பிடுவது சாலப்பொருந்தும். இடைக்காடு மகா வித்தியாலயத்தின் 50 வது ஆண்டு விழாவூம் இதனுடன் கூடிய களியாட்டவிழா, பொருட்காட்சி விழாவூம் ஆயிரத்து தொளாயிரத்து எழுபத்தியாறாம் ஆண்டு(1976) மூன்று தினங்கள் தொடர்ச்சியாக எமது பாடசாலை மைதானத்தில் பெருவிழாவாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு பிரதம விருந்தினர்களாக அழைத்து கௌரவிப்பதற்கு. எம்கிராமத்தையூம் பாடசாலையையூம் மேம்படுத்த பெரும்பங்கு வகித்து, தமது வியர்வையால் இப்பூமியை நிறுவிய விவசாய குடிமக்களை கௌரவிக்கும் நோக்கோடு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில் எமது கிராமத்தைச் சேர்ந்த மூன்று மதிப்புக்குரிய விவசாய உழைப்பாளி;கள் பிரதம விருந்தினராக பொன் விழாவில் கௌரவிக்கப்பட்ட நல்நிகழ்வை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.

Village7

மேலும் டட்லி சேனநாயக்கா பிரதமராக இருந்த காலகட்டத்தில் யாழ்குடாநாடுதழுவிய அளவில் அதிக மகசூலை விவசாயத்தின் மூலம் ஈட்டிய விவசாயிகள் “விவசாயமன்னன்” என கௌரவிக்கப்பட்டனர். இதில் இரு தடவைகள் எமது கிராமத்தை சேர்ந்த இரு விவசாயிகள் தேர்ந்து எடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர் என்பது வரலாற்று பதிவூகளே.

மனைத்தொழில்கள்

 
உழவூத் தொழிலையே முதன்மையாக கொண்டிருப்பினும் வீட்டுமனைத்;தொழில்களும் குடும்பத்தலைவிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் ஈட்டப்படும் வருமானம் குடும்ப அடிப்படை தேவைகளை முற்றுமுழுதாக பூர்த்தி செய்ய போதுமானதாக அமைவது எங்கள் குடும்ப பெண்களின் உழைப்பின் உயர்வை எடுத்துக்காட்டுவதாகும். வீட்டுமனைத்;தொழில்களாக ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடை வளHப்பு, வீட்டுத்தோட்டம், தையல், பன்னவேலை என்பனவூம் மாதாpன் பிhpயமான அபிவிருத்திச் செயற்பாடுகளாக இடம்பெறுகின்றன. மாரிகாலப்பகுதியில் கால நிலையால் ஏற்படும் சூழலுக்கு ஏற்ப பன்னவேலை மூலம் பனை ஓலைகளினாலான கடகம், பெட்டி, பாய், கதிர் பாய் என்பன மனைத்தொழிலாக ஆண், பெண் இரு பாலாராலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அhpசி ஆலை, கோழிப்பண்ணை, என்பன தனியாHவசம் இருக்கின்றன.

பனை

 
Village8

இடைக்காட்டில் இயற்கையாக அமைந்த வளங்களில் பனையூம் ஒன்று. ஈழத்தின் அடையாளச் சின்னமான பனைமரம் .இடைக்காட்டில் பனந் தோப்புகளாகவூம், தோட்டங்களுக்கு அருகிலும் பெரும்பாலும்; அடHத்தியாகக் காணப்படுகின்றன. பனைமரம் எம்மக்களுக்குப் பல பயன்களை அளித்து வருகின்றன. நுங்கு, பனங்கிழங்கு, கருப்பநீர், கள்ளு போன்றவை சாப்பாட்டிற்கும், பனை ஓலை வீடு, கொட்டில், குடில் போன்றவை வேய்வதற்கும், வேலி, பயிர் மறைப்பு ஏற்படுத்துவதற்கும், மாட்டுத்தீவனத்திற்கும், கடகம், பெட்டி, பாய் போன்றவை பின்னுவதற்கும் எமது மக்களால் பொpதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

திருக்குறள் மகாநாடும் எமது கிராமமும்

 
தமிழுக்கு பெருமை சேர்க்கும் திருக்குறளை வளர்க்கும் நோக்குடன் ஆயிரத்து தொளாயிரத்து அறுபதாம்; ஆண்டுகளில் எமது கிராமத்தில் வருடம் தோறும் நடைபெற்றுவந்தது திருக்குறள் மகாநாடு. இதனை மகாநாடு என்று மட்டும் சொல்வதை விட மகாநாட்டுடன் கூடிய பெரு விழா என்பதே சாலப்பொருந்தும். வீதியை மூடிய பாரிய பந்தல் அமைத்து பல மேடைகள் அமைத்து இது பெருவிழாவாக கொண்டாடப்பட்டுவந்தது. தமிழ்நாட்டிலிருந்து பல அறிஞர்கள் அழைத்துவரப்பட்டு எமது கிராமத்து தமிழ் அறிஞர்களையூம், ஈழத்து தமிழ் அறிஞர்களையூம் இணைத்து விவசாய உழைப்பாளிகளால் நடாத்தப்பட்ட மகாநாடுகள் இவை. இம் மகாநாட்டைக்காண்பதற்கு பல ஆயிரம்மக்கள் எம் கிராமத்திறகு வருகை தந்தனர். இலங்கை ஒலி பரப்பு கூட்டுத்தாபன வரலாற்றில் முதன் முதலாய் இம்மகாநாடுதான் ஒலி பரப்பு கூட்டுத்தாபன கலைக்கூடத்துக்கு வெளியே ஒலிப்பதிவூ செய்து பின் ஒலி பரப்பப்பட்ட நிகழ்ச்சியூமாகும்.

பாரதி விழாவூம் எமது கிராமமும்

 
மகாகவி பாரதியாரின் முற்போக்குபடைப்புகளில் ஈடுபாடுடைய எம் கிராம மக்களால் பல ஆண்டுகளாக பாரதியார் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தன. இவ்விழாவில் எமது கிராமத்து அறிஞர்களுடன் ஈழத்து அறிஞர்கள் பலரும் இணைந்து இவ்விழா வெகு எழுச்சியாக கொண்டாடப்பட்டு வந்தன. இவ் விழா எமது கிராமத்து இளைஞர்களின் முற்போக்கு சிந்தனைகளின் வெளிப்பாட்டின் ஒரு அளவூகோலாக முற்போக்கு சிந்தனையாளர்களால் பார்க்கப்பட்டு வந்தன.

கோவில்கள்

 
இத்தகைய பெரும் இயற்கை வளங்களையூம் சிறப்புகளையூம் கொண்ட .இடைக்காடு கிராமத்தில், பெரும் சக்திமிக்கத் தெய்வங்களும் விரும்பிக் குடிகொண்டு மக்களுக்கு அருள்பாலித்து வருகின்றன. அவையாவன செல்வச்சந்நிதி வீதியில் அமைந்துள்ள அம்மன் கோவில்;, காட்டு பிள்ளையார்; கோவில், மேற்குப்பக்கமாகக் பெரிய தம்பிரான் கோவில், சோதி வைரவர் கோவில், முன்னியப்பர்; கோவில்;, காளி கோவில் வடக்குப்பக்கமாக மாணிக்க பிள்ளையார்; கோவில் கிராமத்தின் நடுப்பகுதியில் தெற்கே கொட்டடி வைரவர் கோவில், வடக்கே இலந்தை கலட்டி வைரவH கோவில்; என்பனவாகும்.

Village9

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி கோவில் திருவிழாக்காலத்தில் கால் நடையாக, நேர்த்திகடனாக காவடி போன்றவற்றுடன் கதிரிப்பாய், பத்தைமேனி, அச்சுவேலி, தோப்பு, நவக்கிரி, ஆவரங்கால், புத்தூர் போன்ற அயற்கிராமமக்கள் எமது ஊரினூடாக செல்லும்போது அம்மன் கோவிலில் தரித்து நின்று தாகசாந்தி அருந்தி களைப்பாறி அம்மனின் ஆசீர்வாதத்துடன் தமது தலயாத்திரையை தொடருவர். மேலும் ஒவ்வொரு வருடமும் பதினைந்து நாட்கள் அம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழா கண்கொள்ளா காட்சிகளாகும்.

வருடத்தில் ஒருநாள்மட்டும் நடைபெறும் திருவிழாக்களை யாரும் எளிதில் மறந்துதான்விட முடியூமா? சிகரம், சப்பறம், அலங்கார விளக்குகள், ஒலிபெருக்கி என மேளக்கச்சேரிகள், இசைக்கச்சேரிகள், சின்ன மேளக்கச்சேரிகள் என வகைவகையான தின்பண்டங்கள் என, விசேட பூசைகள் என பலநாள் கொண்டாட்டங்கள் ஒரு நாளிலேயே அரங்கேறிவிடும். ஊர்மக்கள் அனைவரும் ஒன்று கூடி களிக்கும் இத்திருநாள் கொட்டடி வைரவர் கோவில், பெரியதம்பிரான் கோவில், சோதி வைரவர் கோவில், மாணிக்க பிள்ளையார்; கோவில், காட்டு பிள்ளையார்; கோவில்;, முன்னியப்பர்; கோவில்;, காளி கோவில், இலந்தை கலட்டி வைரவH கோவில்; போன்ற கோவில்களில் இனிதே அரங்கேறும். வருடம் தோறும் இடைக்காடு மகா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவூம் இதனுடன் கூடிய கலைவிழாவூம் எமதுகிராமமக்களின் கலை பண்பாட்டு ஆர்வங்களை எடுத்துக்காட்டுவன.

Village10

ஊரின் வடக்கே அமைந்த மாணிக்க பிள்ளையார்; கோவிலில் ஆனிஉத்தரத்திலன்று காலையில் ஆரம்பித்து நடைபெறும் பூசைகளும் அன்னதானமும் இதனைத்தொடர்ந்து நடைபெறும் கிராமத்தை ஊடறுத்து வீதிகளில் நடைபெறும் கரகாட்டமும் இறுதியாக ஊரின் தெற்கே அமைந்த கொட்டடி வைரவர் கோவிலில் கரகாட்டம் நிறைவூ பெறும் விழாக்கள் மிகவூம் சிறப்பு பெற்றவை.

பாடசாலைகள்

 
School

இவ்வூ+Hமக்கள் விவசாயத்தின்மீது கொண்டுள்ள உழைப்புபோல் தம்மக்களின் கல்வி முன்னேற்றத்திலும் மிகுந்த ஈடுபாடுகொண்டவHகள். இடைக்காடு மக்களின் கல்வி முன்னேற்றத்துக்கு ஆதாரமாக விளங்கிய பாடசாலைகள் வளலாய் அமெரிக்க மிஷன் ஆரம்பபாடசாலை, இடைக்காடு மகா வித்தியாலயம் என்பன ஆகும். இடைக்காடு மகா வித்தியாலயம் ஆயிரத்து தொளாயிரத்து இருபத்தியாறாம் ஆண்டு நிறுவப்பட்டு ஆயிரத்து தொளாயிரத்து எழுபத்தியாறாம் ஆண்டு வரை பாலH கல்வி தொடக்கம் பத்தாம் வகுப்பு கல்விவரை வழங்கிவந்தது. இதற்கு பின்னர் பன்னிரண்டாம் வகுப்புவரையூள்ள உயர்தரபாடசாலையாக உயர்த்தப்பட்டது. உயர்தரபாடசாலையாகதரம் உயர்தப்பட்ட முதல் தொகுதி மாணவர்களில் பலர் பல்கலைக்கழகம் தெரிவூ செய்யப்பட்டனர் என்பது இங்கு பெருமைப்பட வேண்டிய விடயம். உயர்தரபாடசாலையாக உயர்த்தப்படுவதற்கு முற்பட்ட காலங்களில் மேற்படிப்பிற்காக புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி, உடுப்பிட்டி அமெரிக்கமிஷன் கல்லூரி, நெல்லியடி மத்திய கல்லூரி, யாழ்பாணம் இந்துக்கல்லூரி போன்றவற்றை இக்கிராம மாணவர்கள் பயன்படுத்தி வந்தனர்

மாணவர்களும், உயிரியல் வாயூ சாதனமும்

 
உலகதர்சன் ஸ்தாபனத்தின் ஆதரவூடன் எமது பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்களால் அமைக்கப்பட்ட உயிரியல் வாயூ சாதனம் இன்றுவரை செயற்பாட்டில் உள்ளது. யாழ்மாவட்டத்தில் நிறுவப்பட்ட முதல் சாதனம் இதுவாகும். இத்திட்டம் முதற்கட்டமாக எமது கிராமத்திலும், பின்பு ஏனைய கிராமங்களுக்கும் விஷ்தரிகப்பட இருந்தன. நாட்டில் நிலவூம் சீரற்ற நிலைமையினால் இத்திட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்த முடியவில்லை என்பது துர்அதிஷ்ட்டமே.

எமது பாடசாலையின் ஆசிரியர்கள்

 
எமது பாடசாலையில் கல்விகற்பித்த எமது கிராமத்து, வெளியூ+ர் ஆசிரியர்களில் பெரும் பகுதியினர் பாடசாலை நேரத்திலும், பாடசாலை நேரம் தவிர்ந்த நேரங்களிலும் மாணவர்களின் முன்றேற்றத்தில் பிரத்தியேக அக்கறையூடன் செயற்பட்டு நல்லமாணவர்களை உருவாக்கி எமது கிராமத்தின், சமூகத்தின் முன்னேற்றத்திற்கு பெரும் பங்கு ஆற்றினர். இதனாலேயே இன்றும் எம் கிராமத்து நெஞ்சங்களில் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

வாசிகசாலைகள்இசங்கங்கள்

 
Village11Village12

இவ்வூ+ரில் நூல்நிலையங்கள், வாசிகசாலைகள், சனசமூக நிலையங்கள், மாதH சங்கம்;, கல்வி நிலையம், விளையாட்டுகழகங்கள் இயங்கி வருகின்றன. சனசமூக நிலையங்களினூடாகவே பெரும்பாலான சமூக சேவைகள் ஒழுங்கு படுத்தப்பட்டு இளைஞர்களால் செயற்படுத்தப் பட்டு வருகின்றன. விளையாட்டுக் கழகங்களால் கரப்பந்தாட்டப் போட்டிகள் நடாத்தப்பட்டு வருகின்றன. மிக ஆரம்பகால கட்டங்களில் மாட்டுவண்டி சவாரி எமதுகிராமத்தின் எல்லை யில் வருடம்தோறும் நடைபெற்று வந்தன. இவை எல்லாவற்றிகும் மேலாக ஒவ்வொரு வருடமும் தமிழ் வருடப்பிறப்பன்று இடைக்காடு மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் விளையாட்டுப் போட்டி, கலைநிகழ்ச்சிகளுடன் கூடிய வருடப்பிறப்பு விழா மக்களின் விளையாட்டுஇகலைகலாச்சார ஆர்வங்களை எடுத்துக்காட்டுபவன.

வாசிகசாலைகள்இசங்கங்கள், எமது இளைஞர்கள்

 
நற்பண்புள்ள இளைஞர்களை உருவாக்கிய பெருமை எங்கள் சனசமூக நிலயங்களையே பெரிதும் சாரும். இளைஞர்களின் ஓய்வூ நேரங்களில் ஏற்படும் மனச்சிதறல்களை ஒழுங்கு படுத்தும் முகமாகவூம், பொது அறிவை மேம்படுத்தும் நோக்குடனும் சனசமூக நிலயத்தினுள் வாசிக சாலைகள் அமைத்து இதற்கான வாய்கால்களை வெட்டிவிட்டனர். மேலும் உள்கள, வெளிக்கள விளையாட்டுக்களை ஏற்படுத்தி பொழுது போக்குடன் கூடிய ஆரோக்கிய பேணலையூம் ஏற்படுத்தினர். இத்துடன் கரப்பந்தாட்டம் போட்டிகளை ஒழுங்கு செய்து நடைமுறைப்படுத்தி ஏனைய கிராமமக்களுடன் நட்புறவூபபபாலங்கள் அமைய வழி வகுத்தனர்.

இத்தகைய சகல நல்ல அம்சங்கள் கொண்ட கிராமத்தை மேலும் கட்டியெழுப்ப தேசப்பற்றும், ஊHப்பற்றும் கொண்ட உலகெங்கும் போர், பொருளாதார சூழலால் இடம்பெயர்ந்து வாழும்மக்கள் எமது கிராம முன்னேற்றத்திற்கென அமைக்கப்பட்ட அமைப்புக்களினூடாக பல செயற்றிட்டங்களை முன்னெடுத்துச் செயற்படுத்தி வருகின்றனH. இச்செயற்பாடுகளுக்குப்; புலம்பெயHந்து கனடா மண்ணில் வாழும் இடைக்காடு, வளலாய் மக்கள் “இடைக்காடு மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கம்(கனடா)” என ஒரு சங்கத்தை உருவாக்கி இதன்மூலம் சேவைசெய்து வருகின்றனH. மானிடத்துக்கான சிக்கல்கள் எவ்வடிவிற் தோன்றிடினும் உழைப்பால் காடுகளை வளமான செழிப்பான கிராமமாக உருவாக்கி யாழ்பாணத்து மண்ணில் தன்பெயரை பொறித்துக்கொண்ட எங்கள் இனிய கிராமங்கள் இடைக்காடு, வளலாய். இக்கருத்துக்கு மேலும் உரம்சேHக்கும் வகையில் இன்று உலகில் எத்திசையில் வாழ்ந்தாலும் இடைக்காட்டார், வளலாயார் ஒற்றுமையோடு தம் ஊருக்காகக் கைகோHத்து நிற்கும் காட்சிகள் பெருமைப்படத்தக்கதே.

இது முதிரும்…

நன்றி:
 
இக்கட்டுரைக்கு தகவல்களைத்தந்த இடைக்காடு, வளலாய் வாழ் மக்களுக்கு என்றும் நன்றியூடையேன்

 
முருகுப்பிள்ளை சிவா ஈஸ்வரமுர்த்தி