எங்கள் பாடசாலை

School1

யாழ் இடைக்காடு மகா வித்தியாலயம்

 
இவ்வூ+Hமக்கள் விவசாயத்தின்மீது கொண்டுள்ள உழைப்புபோல் தம்மக்களின் கல்வி முன்னேற்றத்திலும் மிகுந்த ஈடுபாடுகொண்டவHகள். இடைக்காடு மக்களின் கல்வி முன்னேற்றத்துக்கு ஆதாரமாக விளங்கிய பாடசாலை இடைக்காடு மகா வித்தியாலயம் ஆகும்.ஆயிரத்து தொளாயிரத்து இருபத்தியாறாம் ஆண்டு நிறுவப்பட்ட பாடசாலை ஆயிரத்து தொளாயிரத்து எழுபத்தியாறாம் ஆண்டு வரை பாலH கல்வி தொடக்கம் பத்தாம் வகுப்பு கல்விவரை வழங்கிவந்தது.இதற்கு பின்னர் பன்னிரண்டாம் வகுப்புவரையூள்ள உயர்தரபாடசாலையாக உயர்த்தப்பட்டது.

உயர்தரபாடசாலையாகதரம் உயர்தப்பட்ட முதல் தொகுதி மாணவர்களில் பலர் பல்கலைக்கழகம் தெரிவூ செய்யப்பட்டனர் என்பது இங்கு பெருமைப்பட வேண்டிய விடயம். உயர்தரபாடசாலையாக உயர்த்தப்படுவதற்கு முற்பட்ட காலங்களில் மேற்படிப்பிற்காக புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி, உடுப்பிட்டி அமெரிக்கமிஷன் கல்லூரி, நெல்லியடி மத்திய கல்லூரி, யாழ்பாணம் இந்துக்கல்லூரி போன்றவற்றை இக்கிராம மாணவர்கள் பயன்படுத்தி வந்தனர.