யாப்பு

இடைக்காடு மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கம் கனடா

யாப்பு (நகல் வரைபு)

பெயர்: இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம்(கனடா)

1

முகவுரை

இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள எமது தாயக பூமியான இடைக்காடும் அதன் அயற்கிராமங்களையும் சேர்ந்த மக்களில் கணிசமான தொகையினர் புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வாழ்ந்து வருகின்றனர். இடைக்காடு மகா வித்தியாலயத்தில் படித்த, படிப்பித்த மாணவ, ஆசிரியர்கள் நலன் விரும்பிகளால் உருவாக்கப்பட்டதே இடைக்காடு பழைய மாணவர் சங்கம்- கனடா என்னும் இவ் அமைப்பாகும்.

2

செயலகம்

அமைப்பின் செயலகம் பதவி வகிக்கும் செயற்குழு உறுப்பினர் அல்லது உறுப்பினர்; ஒருவரின் வீட்டில் இயங்கும்.

3

நோக்கங்கள்

கனேடிய சட்டதிட்டங்களுக்கு அமைந்தவாறு எமது கிராமத்தினதும் பாடசாலையினதும், அபிவிருத்திக்கான கைங்கரியங்களை மேற்கொள்ளல்.          சமூகமுன்னேற்ற மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்தல் மொழி, கலாச்சார, சமய, மற்றும் சமூக நெறிகளை கனடாவில் பேணி, ஊக்குவித்து வளர்த்தல்.

4

செயற்பாடுகள்

சங்கத்தின் குறிக்கோளை அடைவதற்காக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளில் கீழ் காண்பவைகளும் அடங்கும்
கனேடிய சட்டதிட்டங்களுக்கு அமைந்தவாறு எமது கிராமங்களின் அபிவிருத்திக்கான கைங்கரியங்களுக்கு அங்கத்தவர்களிடமிருந்தும் நலன் விரும்பிகளிடமிருந்தும் நிதி, பொருட்களைச் சேகரித்தல். கனடாவிலும், உலகத்தின் ஏனைய பாகங்களிலும் வாழ்கின்ற எம்மூர் மக்களை ஒன்றுசேர்க்கும் நோக்கத்துடன் செயற்பாடுகளை மேற்கொள்ளல், கோடைகால, மாரிகால ஒன்றுகூடல். களியாட்டங்கள், சுற்றுலாக்களை ஒழுங்கு செய்தல் இவர்களின்; திறமைகளை வெளிக்கொணரும் கலை நிகழச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் முதலானவற்றை நடத்துதல்.

5

அங்கத்துவம்

 1. இடைக்காடும் மற்றும் அயற்கிராமங்களை பிறப்பிடமாக அல்லது பூர்வாங்கமாகக் கொண்ட மக்கள், அவர்களது குடும்பத்தினர், வழித்தோன்றல்கள் இடைக்காடு மகா வித்தியாலயத்தில் படித்த, படிப்பித்த மாணவ, ஆசிரியர் நலன் விரும்பிகள் அனைவரும் சங்கத்தின் அங்கத்தவர்களாக இணைந்து கொள்வதற்கு தகுதி பெறுகின்றனர் அங்கத்தவர்களாக இணைபவர்கள் 18 அல்லது அதற்குக் கூடிய வயதினராக இருத்தல் வேண்டும் சிறுவர் அல்லது இணை அங்கத்துவம் 18 வயதிற்குக் குறைந்தவர்களுக்கும் வழங்கப்படலாம். அங்கத்தவராக இணைவதற்குத் தகுதிபெற்றோர் நிர்வாகம் தீர்மானிக்கும் அங்கத்துவப்பணத்தைச் செலுத்திய பின்னரே அங்கத்தவராக ஏற்றுக்கொள்ளப்படுவர்.
6

தலைமைச் செயற்குழு

 1. சங்கத்தின் சகல செயற்பாடுகள், செயற்பாடுகளுக்கான தீர்மானங்கள், செயற்பாடுகளுக்கான கேள்விகள் யாவற்றிற்கும் செயற்குழுவே பொறுப்பு ஆகும். செயற்குழு ஆறுவர் (6) செயற்குழு உறுப்பினர் ஐந்து (5) உறுப்பினர்கள் என மொத்தம் பதினொரு(11) உறுப்பினர்களைக் கொண்டதாக அமைந்திருக்கும்.
  செயற்குழு எனப்படுவோர் பின்வருமாறு:
  தலைவர்
  உப-தலைவர்
  செயலாளர்
  உபசெயலாளர்
  பொருளாளர்
  உதவிப் பொருளாளர்
  இவர்களுடன் உள்ளகக் கணக்காய்வாளர் ஒருவரும் நியமிக்கப்படலாம்.
7

உப-செயற்குழுக்கள்

 1. விசேட செயற்பாடுகள், வைபவங்களை ஒழுங்கு செய்து நடத்துவதற்கான தேவை ஏற்படுமிடத்து செயற்குழுவினால் உபசெயற் குழு  தெரிவு செய்யப்படலாம்.
8

ஆலோசகர்

 1. செயற்குழு, உப-செயற்குழுக்கள், இன்னபிற சங்கத்தின் செயற்பாடுகளுக்கான ஆலோசனைகளை வழங்கி,இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம்(கனடா) இன் மேன்பட்ட செயற்பாடுகளை நெறிப்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கும் முகமாக ஒருவரோ இருவரோ ஆலோசகராகத் தெரிவு செய்யப்படலாம்.
9

வருடாந்த பொதுக் கூட்டம்

 1. சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடப்பு வருட நிர்வாகசபையின் பதவிக்கால முடிவில் அச் செயற்குழுவினால் குறிக்கப்படும் திகதியில் நடைபெறும் வருடாந்த அறிக்கையும் நிதி அறிக்கையும், வருடாந்த பொதுக் கூட்டத்தில் முறையே செயலாளராலும் பொருளாளராலும் சமர்ப்பிக்கப்பட்டு சாதாரண பெரும்பான்மை அங்கத்தவர்களால் ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டும்.
10

விசேட பொதுக் கூட்டம்

 1. இருபத்தி ஐந்து (25) அல்லது அதற்கும் அதிகமான அங்கத்தவர்கள் கைச்சாத்திட்டு அதற்கான காரணத்துடன் செயலாளரிடம் விண்ணப்பிக்கும் பட்சத்தில் விசேட பொதுக்கூட்டம் கூட்டப்படலாம். அப்படியான விண்ணப்பங்கள் எழுத்து மூலம் கிடைக்கப்பெற்று சாத்தியமான குறுகிய நாட்களுக்குள் அங்கத்தவர்களுக்கு அறிவித்தல் கொடுக்கப்பட்டல் வேண்டும்.
11

 செயற்குழுக் கூட்டம்

 1. செயற்குழுக் கூட்டத்திற்கு சமூகமளிக்கவேண்டிய ஆகக் குறைந்த செயற்குழு உறுப்பினர்களின் தொகை ஆறு (6), ஆலோசகர் சபையிலிருந்து ஆகக்குறைந்தது ஒருவர்(1). வருடமொன்றிற்கு ஆகக் குறைந்தது நான்கு (4) செயற்குழுக் கூட்டங்களாவது கூட்டப்படல் வேண்டும் சகல செயற்குழு உறுப்பினருக்கும், ஆலோசகருக்கும்; ஆகக் குறைந்தது ஏழு (7) நாட்களுக்கு முன்னர் முன்னறிவித்தல் கொடுக்கப்படல் வேண்டும். ஆறு (6) மத்திய செயற்குழு உறுப்பினர்கள் கேட்கும் பட்சத்தில் மேலதிக மத்திய செயற்குழுக் கூட்டங்கள் கூட்டப்படலாம்.
12

தேர்தல்

 1. செயற்குழு, ஆலோசகர்கள், கணக்குப்பரிசோதகர்கள் என்பன வருடாந்த பொதுக் கூட்டத்தில் தெரிவு செய்யப்படும். நடப்பு வருடத்தில் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய பதவி வகிப்போர்; அடுத்த வருடம் முறையே உப-தலைவர், உப-செயலாளர், உப-பொருளாளர் பதவியை வகித்தல் விரும்பத்தக்கது. உப-செயற்குழுக்கள் தேவைகளின் நிமித்தம் பொதுக்கூட்டத்தில் அல்லது பிறிதொரு காலகட்டங்களில் தேவை ஏற்படின் தெரிவு செய்யப்படலாம்.
13

செயற்குழு உறுப்பினர்களின் கடமைகளும் பொறுப்புகளும்

 1. தலைவர் : சங்கத்தின் சகல கூட்டங்களுக்கும் தலைவர் தலைமை தாங்குவார். வாக்குகள் சமமாக இருக்கும் சந்தர்ப்பங்களில் மாத்திரமே தலைவருக்கு வாக்களிக்கும் உரிமை உண்டு.
  உப-தலைவர் : தலைவர் கூட்டத்திற்குச் சமூகமளிக்க முடியாத சந்தர்ப்பங்களில் உபதலைவர் தலைவரின் சகல கடமைகளையும் நிறைவேற்றுவார்.
  செயலாளர் : நிகழ்ச்சிக் குறிப்புகளையும், அங்கத்தவர் பதிவேடுகளைப் பேணுவதோடு சங்கத்தின் அனைத்து செயற்பாடுகளுக்கும் பொறுப்பாக விளங்குவார்.
  உபசெயலாளர் : செயலாளருக்கு உறுதுணையாகச் செயற்படுவதுடன் செயலாளர் சமூகமளிக்கமுடியாத சந்தர்ப்பங்களில் அவரது கடமைகள் யாவற்றையூம் நிறைவேற்றுவது இணைச்செயலாளருடைய கடமையாகும்.
  பொருளாளர் : சங்கத்தின் சகல நிதிகளுக்கும் பொறுப்பாக இருப்பதுடன், நிதிப் பதிவேடுகளைப் பேணுவதும் வருடாந்த நிதி அறிக்கை சமர்ப்பிப்பதும் பொருளாளரின் கடமையாகும்.
  உதவிப் பொருளாளர் : பொருளாளரின் சகல கடமைகளிலும் உதவி புரிவதுடன், பொருளாளர் சமூகமளிக்க முடியாத சந்தர்ப்பங்களில் அவருடைய கடமைகளை நிறைவேற்றுதல்.
  செயற்குழு உறுப்பினர்கள் : சங்கத்தின் நோக்கங்களுக்கு அமைய செயற்படுவதுடன், நடப்பு வருடத்திற்கான செயற்பாடுகளை கடந்த வருடங்களின் செயற்பாடுகளை கருத்திற் கொண்டு திட்டமிடல்.
14

பதவி விலகலும் பதவி வெற்றிடத்தை நிரப்புதலும்

 1. செயற்குழு, உப-செயற்குழுக்கள், ஆலோசகர் சபை ஆகியவற்றின் உறுப்பினர்கள் எழுத்து
  மூலமான அறிவித்தலின் பின்பே பதவி விலக முடியும். இவ் எழுத்து மூலமான பதவி விலகும் அறிவிப்பை செயற்குழு அங்கீகரித்த பின்பே உறுப்பினரின் பதவி விலகல் முற்றுப்பெறும்.
  பதவி விலகிய உறுப்பினர் வெற்றிடத்தை நியமனம் மூலம் நிரப்பும் கடமையை சாத்தியமான குறுகிய கால இடைவெளியில் செயற்குழு நிறைவேற்றுதல் வேண்டும்
15

நிதியை பேணும், கையாளும் வரைமுறைகள்

 1. செயற்குழு தீர்மானத்திற்கேற்ப வங்கிக் கணக்குகளைப் பேணவேண்டியது பொருளாளரின் கடமையாகும் செலவூகளைக்கையாளும் முறை கீழுள்ளவாறு வரையறை செய்யப்படுகின்றது.
  பொருளாளர் ஐநூறு(500) டொலர்கள் வரை
  செயற்குழு மூவாயிரம்(3000) டொலர்கள் வரை
  பொதுச்சபை அதற்கு மேற்பட்ட தொகைகளுக்கு.
16

ஊதியம்

 1. சகல செயற்குழு உறுப்பினர்கள், உப-செயற்குழுக்களின் உறுப்பினர்கள், ஆலோசகர் சபை உறுப்பினர்கள் யாவரும் தொண்டர் அடிப்படையிலேயே கடமையாற்றுவர். அவர்கள் ஒருவரும் எந்தவகையான ஊதியத்தையும் பெறமாட்டார்கள்

(இவ்யாப்பு 1 முதல் 16 வரையான உப விதிகளைக்கொண்டுள்ளது)