கீதம்

இராகம்:- சண்முகபிரியா தாளம்:- ஆதி (திஸ்ர நடை)

பல்லவி

வாழ்க வளர்க வெல்க
என்று வாழ்த்துவோம்
ஈழநாட்டில் ஈடில்லாத
சீர் சிறக்கும் ஆலயம் (வாழ்க)

அநுபல்லவி

ஏர் நிறை இடைக்காட்டினில்
எழில் கொள் தாரு போலவே
நேர் நிறை மா வித்தியாலயம்
என்ற நாமம் ஏந்தியே (வாழ்க)

சரணம்

வாழ்வில் வேண்டும் தர்மநீதி
வாய்மை தூய்மை மேன்மையாம்
தாழ்வில்லாத கலைகள் யாவூம்
தந்தெம் தாயைப் போலவே (வாழ்க)