கனடா பழையமாணவர் சங்கம் சிறப்புப் பொதுக்கூட்ட அறிவித்தல்.

கனடா இடைக்காடு பழையமாணவர் சங்க உறுப்பினர் அனைவர்க்கும்,

 

கனடா பழையமாணவர் சங்கம் சிறப்புப் பொதுக்கூட்ட அறிவித்தல்.

29.12.2013 அன்று  கனடா செல்வச்சன்னதி கோவில் மண்டபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்,  யாப்பு பொதுச்சபையின் அங்கீகாரம் பெறப்படவில்லையென பல அங்கத்தவர்கள் சுட்டிக்காட்டி அது பொதுச்சபையின் அங்கீகாரம் பெறப்படவேண்டும் என வலியுறுத்தியதனால் அதற்காக போதிய கால அவகாசத்துடன் ஓர் பொதுக்கூட்டத்தை கூட்டி அதற்கான அனுமதியைப்பெறுவதெனத் தீர்மானிக்கப்பட்டNew Logoது.

அதன்படி 26.1.2014 அன்று கூடிய நிர்வாகசபைக்கூட்டத்தில் முக்கியமாக யாப்பின் அனுமதியினைப்பெறும்பொருட்டு 23.3.2014 அன்று சிறப்புப்

பொதுக்கூட்டம் ஒன்றினைக்கூட்டுவதற்கு  தீர்மானிக்கப்பட்டது

எனவே அங்கத்தினர் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தமது ஆக்கபூர்வமான கருத்தினையும் ஆலோசனைகளையும் வழங்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

இடம்:  கனடா செல்வச்சன்னதிகோவில் மண்டபம்.

காலம்:  23.3.2014 ஞாயிறு

நேரம்:   காலை 10.00 மணி

 

நன்றி,

அன்புடன்,

ந. சிவகுமாரு

(செயலாளர்)

இடைக்காடு பழையமாணவர் சங்கம், கனடா –முதலாவது நிர்வாகசபைக்கூட்டக் குறிப்பு.

இடைக்காடு பழையமாணவர் சங்கம், கனடாமுதலாவது நிர்வாகசபைக்கூட்டக் குறிப்பு.

New Logo

மேற்படி கனடா பழையமாணவர்சங்கத்தின் முதலாவது  நிர்வாகசபைக்கூட்டம் 26.1.2014 அன்று காலை 10.30  மணியளவில் திரு செ.கணேஸ் அவர்களின் இல்லத்தில்  ஆரம்பமானது. கூட்டத்தில் பின்வருவோர் பங்குபற்றினர்.

பெயர்                    பதவி

பொ. கந்தவேல்          தலைவர்

ந சிவகுமாரு           செயலாளர்

த.முருகேசமூர்த்தி      உபதலைவர்

சு.ஜெயகுமார்           உபசெயலாளர்

இ.செல்வராஜ்           பொருளாளர்

க.அருணகிரி            உபபொருளாளர்

ச.கேசவமூர்த்தி         ஆலோசகர்

ந. சிவகுமார்            நி.சபை உறுப்பினர்

செ.கணேசன்            நி.சபை உறுப்பினர்

த.முருகன்              உறுப்பினர்

ப.ரூபன்                உறுப்பினர்

ச.சத்தியநாராயணன்     உறுப்பினர்

கி.சிவரஞ்சன்           உறுப்பினர்

சி.சிவஞானரூபன்        உறுப்பினர்

க.கந்தையா             உறுப்பினர்

தி.பகீரதன்              உறுப்பினர்

பின்வரும் விடயங்கள் ஆலோசனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

 இளைய சமுதாயத்தினரின் பங்களிப்பு

இளைய சமுதாயத்தை எமது மொழி, கலாச்சாரத்துக்குள் உள்வாங்கி பழையமாணவர் சங்க செயற்பாடுகளிலும் அவர்களை ஈடுபடவைத்தல் வேண்டுமென பலரும் தமது கருத்தினைத் தெரிவித்தனர். இன்றைய இளம் சந்ததியினர் இங்கத்திய சூழ்நிலை, பண்பாடு காரணமாக எம்மை விட்டு விலகிச்செல்கின்றனர் என்றும் நாம் வளர்ந்த சூழலுக்கும் அவர்கள் வளரும் சூழலுக்கும் பாரிய வேறுபாடு காணப்படுவதால் நாம் விரும்புவதுபோல்  அவர்களை எம்மைப்போல் எதிர்பார்க்க முடியாது என  சிலர் அபிப்பிராயப்பட்டனர். இது ஓரளவு உண்மையானபோதிலும் பிள்ளைகளின் தமிழ் மொழிப்பாவனையிலும் தாயகமண்மீதுள்ள பற்றினையும் நாம் அவர்களுக்கு ஊட்டி அவர்களைவழிநடாத்திச்செல்லவேண்டும்என்றும்தீர்மானிக்கப்பட்டது.

இணையதளப்பயன்பாடு

Idaikkaduweb.com  இணையதளத்தில்வெளியிடப்படும்தவகல்கள்இனிவரும்காலங்களில்தகவல்களைவெளியிடுவதற்குமுன்அதனைதலைவர், செயலாளர், ஆலோசகர்என்போரின்அனுமதியுடன்பிரசுரிக்கப்படல்வேண்டுமெனவும்ஆலோசனைகூறப்பட்டது.

இவ்வாண்டுக்கான கோடைகால ஒன்றுகூடல்

இவ்வாண்டுக்கான கோடை கால ஒன்றுகூடல் வழமைபோல்  03.8.2014 ஞாயிறு நெல்சன் பூங்காவில் நடைபெறுமெனத் தெரிவிக்கப்பட்டது.   

எனவே, இவ்வாண்டுக்கான ஒன்றுகூடலை மிகவும் சிறப்பானதாகவும்  முடிந்தவரை கூடிய மக்களையும் இளைஞர்களையும் சிறார்களையும் பங்குபற்றச் செய்வதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமெனவும் முடிவு செய்யப்பட்டது.

 யாப்பினை அங்கீகரிப்பதற்கான பொதுக்கூட்டம்              

ஏற்கனவே நடைமுறையிலுள்ள பாடசாலை பழையமாணவர் சங்க யாப்பு உரிய முறைப்படி பொதுச்சபையில் அங்கீகாரம் பெறுவதற்க்கான  பொதுச்சபைக் கூட்டம்   29.12.2013 அன்று கூடியபொதுச்சபையில் தீர்மானிக்கப்பட்டதற்கிணங்க 23.3.2014 ஞாயிறன்று பொதுச்சபையைக் கூட்டுவதெனவும் அதற்கான போதிய கால அவகாசத்துடன் தனியாக அறிவித்தல் விடப்படுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

 பிறவிடயங்கள்

கடந்தவருடம் நடாத்திய Gala Dinner Night – 2013 மற்றும் இத்தி மலர் வெளியீட்டு மூலம் 10,000.00 டொலர்களைச் சேகரித்துள்ளதாகவும்,மேலும் எமது வைப்பில் இருக்கும் தொகையில் இருந்து $5,000 தினையும்  எமது தாயக வங்கியில் வைப்பிலிடுவதன் மூலம் கூடிய வட்டியை வருமானமாகப் பெறலாமென கடந்த வருட நிர்வாகசபையினர் கடைசியாக நடந்த பொதுக்கூட்டத்தில் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக இடைக்காடு பழையபாணவைர் சங்கத்துடன் தொடர்பு கொண்டபோது, தற்போது முன்னைய ஆண்டுகளைவிட கூடுதலானோர் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்படுவதனால் அவர்களுக்கு வழங்கும் புலமைப்பரிசில் நிதிக்கு நிதி போதாமல் இருப்பதனால் அதற்கு “கனடா புலமைப் பரிசில் திட்டம்” ஒன்றினை உருவாக்குமாறும், மீதமுள்ளதை  தமக்கு கடன் அடிப்படையிலும் தந்தால் தாம் அதனை நிலையான வைப்பிலிட்டு அதன் வட்டிப்பணத்தை முக்கிய தேவைகளுக்கு பயன் படுத்தமுடியும் எனவும் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருந்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொள்வதென்றும் அதேவேளை இந் நிதி சம்மந்தமான கட்டுப்பாடு எம்மிடமே இருத்தல் வேண்டுமெனவும் முழுக்கணக்கு விபரமும்  காலத்துக்கு காலம் எமக்கு தெளிவாகத் தெரிவிக்கப்படல் வேண்டுமெனவும் பலரும் அபிப்பிராயப்பட்டதனால் அதுவே பொருத்தமான நடவடிக்கை எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இங்கு எம்மவரில் பலர் பழைய மாணவர் சங்க உறுப்பினராக இருக்கின்ற போதிலும் அநேகர் தமது வருடாந்தச் சந்தாப்பணத்தை செலுத்தாமல் உள்ளனர். எனவே  எதிர் காலத்தில் அதனைக் கூடுதலாகச் சேகரிப்பதன்மூலம் எமது நிதிவளத்தை செழிப்படையச் செய்யலாம் எனவும் அதற்கு அனைவரதும் ஒத்துழைப்பினை வேண்டிநிற்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

மதியம் 1.00 மணியளவில் கூட்டம் இனிதே நிறைவேறியது.

ந.சிவகுமாரு

செயலாளர்  – 04-02-2014