செயற்குழுகூட்ட அறிக்கை- 22- 03 2015.

இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம்- கனடா

New Logo

செயற்குழுகூட்ட அறிக்கை- 22- 03 2015.

மேற்படி செயற்குகூட்டமானது 22-03-2015 ஞாயிற்றுக்கிழமை திரு வே. இளங்கோ அவர்கள் தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்றது. கணிசமான அங்கத்தினருடன் கெளரவ ஆலோசகர் திரு .சி. நல்லதம்பி அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.

நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டதற்கமைய முதலாவதாக ஆங்கில ஆசிரியர்களுக்கான நிதிவழங்கும் அதிபரின் கடிதம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் மேலதிக விபரங்களை அறிந்துகொள்ளுமுகமாக ஆசிரியர் திரு செ. செல்வவேல் அவர்களுடன் தொலை பேசி வழியாக அங்கத்தினர் அனைவரும் கேட்கும் வகையில் தொடர்பு கொண்டு பேசப்பட்டது. செல்வவேல் அவர்களின் விளக்கம் பின்வருமாறு : ஆண்டு ஆறு தொடக்கம் பத்துவரை ஆறுபாடங்கள் ஆங்கிலமொழிமூலமும் தமிழ்மொழிமூலமும் கற்பிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் க.பொ. த. பரீடசையில் மாணவர்கள் முக்கிய பாடமான விஞ்ஞானம் கணிதம் ஆகிய இருபாடங்கள் மட்டுமே ஆங்கிலமொழியில் பரீட்சை எழுதுகின்றனர். மற்றைய பாடங்கள் ஆங்கிலமொழிமூலம் எழுதுவது கடினம் என்பதுடன் அது பரீட்சைப் பெறுபேறுகளை பாதிக்கும் என்பதனையும் ,அவை அவசியமானதல்ல என்றும் சுட்டிக் காட்டினார். சபை உறுப்பினர்களும் தங்கள் சந்தேகங்களை அவரிடம் கேட்டுக்கொண்டனர், அவர்களுக்கான கொடுப்பனவுகளை அங்குள்ள பழையமாணவர் சங்க நிதியில் இருந்து வழங்கப் பட்டுவருகின்றது என்றும் அதில் எவ்வித கஸ்டமும் இல்லையென அவர் குறிப்பிட்டார்.

அதன் பின்னர் அங்குள்ள இடைக்காடு பழையமாணவர் சங்க பொருளாளர் அவருடன் தொடர்பு கொள்ளப்பட்டு முத்தாம்பிகை புலமைப்பரிசில் வழங்கல் தொடர்பாக கேட்கப்பட்டது, அவர் முத்தாம்பிகை புலமைப் பரிசில் நிதியத்தில் இருந்து அவரின் பெயரில் மூன்று பேருக்கும் மற்றையவர்களுக்கு பழையமாணவர் சங்க கனடா பெயரிலும் வழங்கப்பட்டு வருகின்றது எனவும் கடிதத்தில் எழுதப்பட்டதில் தவறு ஏற்பட்டுள்ளதென்றும் அதனை சரியாக எழுதி அனுப்புவதாகவும் குறிப்பிட்டார். அவரின் விளக்கத்தை சபை ஏற்றுக் கொண்டது.

தொடர்ந்து சபை உறுப்பினர் திரு வை. பொன்னீஸ்வரன் அவர்கள் அங்குள்ள பழையமாணவர்சங்க நிதி கையிருப்பு பற்றி கேட்டார், அதற்கு அவர் பல்வேறு நபர்கள் பெயர்களில் அவர்களின் குடும்பத்தினரால் வைப்பிலிடப்பட்ட பணத்துடன் சங்க நிதியுமாக மொத்தமாக நாற்பது லட்சத்திற்குமதிகமான தொகை உண்டு எனவும் அதில் இருந்து கிடைக்கப்பெறும் வட்டிமூலம் புலமைப் பரிசில்களுக்கும், ஆங்கில ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகளும். பரிசளிப்புநிகழ்வுகளுக்கான செலவுகளும் ஈடுசெய்யப்பட்டு வருகின்றது என தெளிவாக குறிப்பிட்டார். அவரது விளக்கம் அங்கத்தினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது

ஆக தற்பொழுது அங்கு எந்தவித நிதிதேவைகளும் ஏற்படவில்லை என சபை தீர்மானித்தது.

அடுத்து அதிபரின் கடித்தில் இணைப்பாளர் என திரு சு .நவகுமாரின் பெயர் குறிப்பிட்டிருப்பது தவறு எனவும் இணைப்பாளராக திரு க. சின்னத்தம்பி அவர்களே கனடா பழைய மாணவர் சங்கம் நியமித்துள்ளது எனவும், இதனை அதிபர் அவர்களுக்கு தெளிவு படுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது..

இறுதியாக இளங்கோ அவர்கள் வந்திருந்த அங்கத்தினர்கள் அனைவருக்கும் மதியபோசனம் வழங்கி சிறப்பித்தார். இத்துடன் கூட்டம் இனிதே நிறவு பெற்றது

நன்றி

செயலாளர்

நா. மகேசன்.

31-03-2015.

விசேட ஆங்கில வகுப்புக்கான நிதி கோரல்

இடைக்காடு பழைய மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம்.
Scan-11 Scan-12
விசேட ஆங்கில வகுப்புக்கான நிதி கோரல் பற்றிய கடிதமும் மற்றும் எமது நிலையான வைப்புப் பற்றிய கடிதமும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இவைகள் பற்றிய உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை தயவுடன் நிர்வாகத்திற்கு தெரியப்படுத்துமாறு வேண்டிக்கொள்கின்றோம் .
நன்றி.
இடைக்காடு பழைய மாணவர் சங்க செயற்குழு – கனடா