“வெள்ளி விழா மலர்-2016”

இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம்– கனடா

“வெள்ளி விழா மலர்-2016”

        இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க கனடா கிளையின் 25வது வருட நிறைவை அடுத்து ” வெள்ளி விழா மலர்” ஒன்று வெளியிட இருப்பது பற்றி நாம் முன்பே அறிய தந்திருந்தோம். இம்மலரானது  இவ்வருட(2016) குளிர்கால ஒன்று கூடலின் போது வெளியிடப்பட உள்ளது.

இம் மலருக்கான ஆக்கங்கங்களை உலகெங்கும் வாழும் இடைக்காடு மகா வித்யாலய பழைய மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

உங்கள் ஆக்கங்கங்களை கீழ் வரும் தலைப்புகளுடன் தொடர்பு படுத்தி, தமிழ் அல்லது ஆங்கில மொழியில், type செய்து June 30ம் திகதிக்கு முன்னர் பின்வரும் e-mail addresses இற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தலைப்புகள்:

1) கனடா  பழைய மாணவர் சங்கமும் அதன் வளர்ச்சி, நிகழ்வுகள்

2) எமது ஊர் அல்லது பாடசாலையுடன் தொடர்புடைய அனுபவங்கள்

3)  கதை, கவிதை, கட்டுரைகள்

4) மருத்துவம், பொது அறிவு

தொடர்பு:

1) S.Sivaruby              kapilan@rogers.com               647-280-4281

2) G.Lojini                  loji66@gmail.com                   416-315-0654

3) U.Sathiya                sathiya4321@gmail.com         416-671-7146

4) A.Rajani                  rajanisaru@hotmail.com         416-618-4021

5) S.Theivamani          rubansundram@yahoo.ca      647-923-6523

முக்கிய குறிப்பு:

ஆக்கங்கங்கள் யாவும் எவரையும் புண் படுத்தாத முறையில், நடு நிலையாக, அரசியல் சார்பற்ற முறையில் இருத்தல் வேண்டும்.

ஆக்கங்கங்களில் எதாவது  மாற்றம் ஏற்படுத்த வேண்டுமெனின் எழுத்தாளரின் அனுமதி பெற்ற பின்பே மாற்றம் செய்யப்படும்.

செயற்குழுவிற்கே இம் மலரில் வெளியிடப்பட இருக்கும்  ஆக்கங்கங்கள் பற்றிய இறுதி முடிவை எடுக்கும் உரிமை உரியதாகும்.

நன்றி!

செயற்குழு

இடைக்காடு ம.வி பழைய சங்கம் – கனடா

Feb 20, 2016

சாப்பாட்டு ராமன்கள்

சாப்பாட்டு ராமன்கள்

images

இதுவும் ஒரு சாப்பாட்டைப்பற்றிய சங்கதிதான்

அளவுக்கதிகமாக, அதாவது தமது இயலுமைக்கும் அப்பால் பல மடங்கு அதிகமாக உண்பவர்களை சாபாட்டு ராமன்கள் என அழைப்பது வழக்கமாகும். இதன் காரணம் எமக்கு சரியாகத்தெரியவில்லை. ஒருகாலத்தில் ஏறுக்குமாறாக சாப்பிடும் ராமன் என்றபெயரையுடைய ஒருவன் இருந்திருக்கலாம். அதனால் இப்பெயர் வந்தும் இருக்கலாம்.

மனிதன் உட்பட அனைத்து சீவராசிக|ளும் உணவை உண்கின்றன. அவை தமது வயிற்றுப்பசிக்காகவே உண்கின்றன. அவை பசிக்காகவன்றி ருசிக்காக உண்பதில்லை. மனிதன் மட்டுமே பசிக்காக மட்டுமன்றி ருசிக்காகவும் உண்கின்றான்.

ஆதிகால மனிதன் மிருகங்களை வேட்டையாடி பச்சையாக இறைச்சிகளை உண்டபோது அவனும் பசிக்காகவே உண்டுகொண்டிருந்தான். எப்போது உணவை தீயில் வேகவைத்து உண்டபோது அதிலே ருசி ஏற்படுவதைக் கண்டானோ அன்றைக்கே உணவு பற்றிய அவனது சிந்தனையில் திருப்பம் ஏற்படத்தொடங்கிவிட்டது. அன்று ஆரம்பித்த அவனது உணவு வேட்கை இன்றளவும் தீர்ந்தபாடில்லை.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள்.

உயிர் வாழ்வதற்கு உணவு இன்றியமையாததே. ஆனால் அதன்மேல் அதீத வேட்கைகொண்டு நாவுக்கு தீனிபோடப்புறப்பட்டு அளவுக்கு அதிகமாக உணவு உண்போர்  பருத்த சரீரத்தை உடையவர்களாகி வியாதிக்கு உபட்டு  விரைவிலேயே இறந்துபோகின்றனர். அதேவேளை வறிய நாடுகளில் உணவுக்கு வழியின்றி பட்டினியாலும் சிலர் இறந்துபோகின்றனர். கவலைக்குரிய விடயம் என்னவென்றால்  பட்டினியால் இறப்போரைவிட  அளவுக்கதிகமாக உணவுண்டு இறப்பவர்களே அதிகம் என்பதே. இவை தெரிந்தும் நாவுக்கு  தீனிபோட மக்கள் செலவிடும் பணம் கொஞ்சநஞ்சமன்று.

மகாபாரதக்கதையில்  பகாசுரனுக்கு கொண்டுசென்ற ஒரு வண்டி சோற்றையும் கறிகளையும் பகாசுரனைக்கொன்றுவிட்டு வீமனே முழுவதையும் சாப்பிட்டு முடித்த்தாக நாம் படித்தெபோது ஆச்சரியப்பட்டோம்.

இப்போதும்கூட சிலர் சிறியதோற்றமாக இருந்தாலும்  பெரும் தொகை உணவை உண்பதை நாம் பார்த்து ஆச்சரியப்படுவதுண்டு.

சிலர் நன்றாக கள் குடிப்பார்கள். போட்டியில் பத்துப்போத்தல் கள்ளையும் சாவகாசமாக குடித்துவிடுவார்கள். எமது  வயிறு மூன்று போத்தல் கள் கொள்ளக்கூடியதாக இருக்கலாம். எப்படி  பத்துப்போத்தல் கள் உள்ளே போனது? அதனால்தான் கள்ளுக்கொள்ளா வயிறுமில்லை,  முள்ளுக்கொள்ளா வேலியுமில்லை என்றார்கள்.

உண்ட களை தொண்டருக்கும் உண்டு என்பார்கள்.

ஆம், பாதிவயிறு சாப்பிட்டால் சாப்பாடு உன்னைச் சுமக்கும், முழுவயிறு சாப்பிட்டால் சாப்பாட்டை நீ சுமக்கவேண்டும்.

மூன்று வேளை சாப்பிடுபவன் ரோகி. இரண்டுவேளை சாப்பிடுபவன் போகி. ஒருவே|ளை சாப்பிடுபவன் யோகி எனக் கண்ணதாசன் கூறினார்.

இது ஒரு விசித்திரமான போட்டி.

அப்போது  யாழ்ப்பாணம் மலாயன் கபே வடை பிரபலமானது. இரண்டு வடை சாப்பிட்டாலே அது ஒரு சாப்பட்டுக்குச் சமனானது.

மலாயன் கபே வடை இருபது சாப்பிடவேண்டும். ஆயிரம் ரூபாய் பந்தயம். இதுதான் போட்டி.

ஒருவர் வெளிப்பட்டார். நான் சாப்பிடுகிறான். ஆனல் எனக்கு இரண்டு மணித்தியாலய அவகாசம் வேண்டும் என்று கூறினார். அவகாசம் கொடுக்கப்பட்து. போட்டியிலும். வெற்றி பெற்றார்.

அப்பொது ஒருவர் கேட்டர் , சரி நீ கெட்டிக்காரன்தான். அப்போ ஏன் இரண்டு மணித்தியால அவகாசம் கேட்டய், என்று.

இல்லை, என்னால் இருபது வடை சாப்பிடமுடியுமாவென்று மலாயன் கபேக்குப்போய் சாப்பிட்டு பார்துவந்தேன் என்று.

அப்போ, அவர் இருபது அல்ல நாற்பது வடை சாப்பிட்டு முடித்துள்ளார்.

வீமன் காலத்தில் வாழவே\ண்டிய சாப்பாட்டு ராமன்கள் இப்போதும் இங்கேயும் இருக்கவே செய்கின்றனர்.

 

பொன் கந்தெவேல்

கனடா. 04.2.2016