Idaikkadu MV O/L Results – 2015

logo

யாழ் இடைக்காடு மகா வித்தியாலயம்
க.பொ.த ( சாதாரண ) தர பரீட்சை பெறுபேறு – 2015
(தமிழ் மொழிமூலம்)
செல்வன். குணபாலசிங்கம் நிதுர்சன் – 4A 3B 2C
தம்பாலை, அச்சுவேலி.
2.செல்வன்.சுகந்தராசா சுலோஜன் – 3A 3B 2C
வளலாய் கிழக்கு,அச்சுவேலி.
செல்வன். செல்வக்குமார் செந்துஜன் – 2A 5B 2C
முரசொலி, கதிரிப்பாய், அச்சுவேலி.
4.செல்வி. மகேந்திரராசா பூர்விகா -2A 3B 2C 2D
வளலாய் மேற்கு, அச்சுவேலி.
5.செல்வன். ஆனந்தராசா லியாசன் – 2A 3B 3C
தம்பாலை,அச்சுவேலி.
செல்வி. வேல்முருகன் நிவேதிகா – 2A 3B 3C
புதியபூமி, இடைக்காடு, அச்சுவேலி.

யாழ் இடைக்காடு மகா வித்தியாலயம்
க.பொ.த ( சாதாரண ) தர பரீட்சை பெறுபேறு – 2015
(ஆங்கில மொழிமூலம்)

செல்வி .ரகுலகரன் திக்ஷிகா – 9A
தேத்தாவடி,இடைக்காடு,அச்சுவேலி.
செல்வன் .ஸ்ரீவடிவேலு தயாபன் – 8A1B
சோதிவைரவர் கோவிலடி, இடைக்காடு, அச்சுவேலி.
செல்வன். முருகையா பிருந்தாபன் – 8A 1B
மாணிக்க இடைக்காடர் வீதி, இடைக்காடு, அச்சுவேலி.
செல்வன். ரகுநாதன் சரண்யன் – 5A 3B 1C
வட்டவளவு, இடைக்காடு,அச்சுவேலி.

புகைத்தலும் பகைத்தலும்

 

images (1)

எம் வாழ்வில் எவை எல்லாம் இன்பமானவையோ அவையெல்லாம் துன்பமானவை. இதற்கு அடிப்படைக்காரணம் எந்த ஒரு வினைக்கும்  எதிர் வினை உண்டு என்பதே. நிலத்தினைத் தோண்டினால் அந்தப் பள்ளததற்கு  சமனான ஒரு மேடு  வெட்டிய மண்மூலம்  உருவாகிவிடுகின்றது.  ஊரிலி சொல்வார்களே  இன்று நன்றாக சிரிக்கிறோம்  நன்றாக அழப்போகிறோமோ தெரியவில்லை என்று. இனிப்பான  சர்க்கரை வியாதிக்கு கசப்பான பாகற்காய்தானே  மருந்தாகிறது. அவ்வாறு எந்த உணவு எல்லாம் ருசியாக இருக்கிறதோ அனேகமாக அவை உடலுக்கு தீங்காகத்தான் அமைகிறது .இனிப்பை விடுங்கள். அசைவ உணவில்  இறால், நண்டு ,கணவாய் போன்றன  ருசியாக இருக்கின்ன. அவை கிரந்தி உணவானவை என்று கூறுகிறார்களே.

வாயைக்கட்டு வருத்தம் போய்விடும் என்பதும்   இதனால்தான். இந்த வாய் இருக்கிறதே  இது ஒரு விசித்திரமான  உறுப்பு . வாய் உள்ளேயும் அனுப்புகிறது,  வெளியேயும் அனுப்புகிறது .

உள்ளே போகும்  உணவு தீங்கு இல்லாதபோது உடலுக்கு ஆபத்தில்லை  வெளியே வரும் வார்த்தைகள் இனியவையாக இருந்துவிட்டால்  அவையுவும் உடலுக்கு ஆபத்தில்லை  இந்தப் பெரிய உடலுக்கு ஏன் வாய் சிறிதாக உள்ளது தெரியுமா?  சிறிதாக உண்ணுங்கள் என்பதற்காகவே.  இரண்டு செவியை  வைத்தபோதும் ஏன் ஒரு வாயை ஆண்டவன் வைத்தான் தெரியுமா,  குறைவாகப் பேசுங்கள் என்பதற்காகவே. தேவையிலாதைப் பேசி  பல்லுடைபட்டவர்களை  நாம் காணதானே செய்கின்றோம் .இதிலே வேடிக்கை என்னவென்றால் எய்தவன் இருக்க அம்பை நோந்தது போல்  பேசியது வாய், அடிவாங்கியது பல் என்பதுதான்..

தண்ணியும் தண்ணீரும்  என்று நான் எழுதிய ஒரு கட்டுரையில்  மதுவின் கெடுதியைப்பற்றிக் கூறியிருந்தேன். அது திரவ வடிவில் எம்மை சுடலைக்கு அனுப்புகின்றது  புகைத்தல் வாயு வடிவில் எம்மை வழி அனுப்பிவைக்கிறது.

புகைதல் பழக்கத்தை யார் பழக்கிவிட்டுப்  போனானோ தெரியவில்லை. புகைப்பவர் அனைவரயுமே தமக்குத்தாமே கொள்ளி வைக்க பழக்கி விட்டுப் போய்விட்டான்.

சிகரட்டுக்கு தீ பற்ற வைக்கும்போது அது அதற்கல்ல, தமக்குத்தான் என்பதனை அவர்கள்  எண்ணுவதில்லை .

புகைத்தல் பழக்கம் புற்று நோய், கசம் கண்பார்வை இழப்பு போன்ற நோய்களை கைதட்டி அழைகிறது நீங்கள் புகை பிடிக்க்காவிட்டாலும் புகைப்பவர்களுக்கு பக்கத்தில் இருத்தலும் அதன் பாதிப்பு உங்களுக்கு ஏற்படும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

சிகரட் பாக்கெட்டில் அதன்பாதிப்பு பற்றி கூறியிருத்தாலும் பாவிப்போர் அதைப் பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. கெடுகுடி சொற்கேளாது,    சாகிறவன் மருந்துகுடியான் என்று  சும்மாவா சொன்னார்கள்?

சமுதாயம் ஏங்கே போகிறது?

பிறரைப் பகைப்பவன் சமுதாயத்தில் தன்னத்தானே கெடுத்துக்கொள்கின்றான்..
புகைப்பவன் தன்னைத்தானே கெடுத்துக்கொள்கின்றான்
பகைப்பவன் சுடலைகுப் பக்கதே குடியிருக்கின்றான்.
புகைபவன் சுடலையிலேயே குடியிருக்கின்றான்.

வேறென்ன சொல்ல?

 

பொன் கதவேல்

31.3.2016