நாங்களும் அப்படித்தான்

குழந்தையின் அழுகை                                               images (3)
ஊரெல்லாம் கேட்டது
இப்போது அது அழுவதில்லை
ஆனால் பசி மட்டும் தீரவில்லை
அப்போ எப்படி?
பளார்… பளார்…
இனி அழுதால் இதைவிட மோசமாக…
அடியின் அகோரத்தில் அடங்கி ஒடுங்கி…

நாங்களும் அப்படித்தான்
எங்கள் அழுகுரல்
உலகுக்கே கேட்டது
நாங்கள் பயங்கரவாதியாம்
உலகமே திரண்டுவந்து
எங்களை அடக்கி ஒடுக்கி..
கொன்று குவித்து..
நாங்கள் இப்போது
அழுவதில்லை
அழக்கூட முடிவதில்லை
ஆனாலும் எங்கள் பிரச்சினை
அப்படியே, ஏன் அதைவிட மோசமாக
இப்போதும் அப்படியேதான்
உள்ளது என்பதை
உலகம் அறியாதா?
அறிந்தும் பொய்யாக
உறங்கிக் கிடக்கிறதா?
எங்கள் மெளன அழுகை
எதுவரை?
அது எப்போது
முடிவுறும்?
அது
அவனுக்கே வெளிச்சம்!                        images (4)

பொன் கந்தவேல்

வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள்

images (2)செயின் ஸ்மோக்கர் செல்லையா

செல்லையா செயின் ஸ்மோக்கர்

உப்பிடிப்போனால் கெதியாய் போய் விடுவாய் என

வைத்தியர் எச்சரித்தும்

செல்லையா

கேட்கவில்லை

வைத்தியரின் வாக்கு சத்திய வாக்காக

நாற்பதிலேயே நடையைக் கட்டிவிட்டார்

செல்லையா

சுடலையில் தீ வைக்க எவரிடமும்

தீப்பெட்டி இருக்கவில்லை

இறுதியில் செத்துவிட்ட செல்லையாவின் பாக்கெட்டில்

இருந்தது தீப்பெட்டி

அதுவே அவருக்கு

கொள்ளியும் வைத்தது

புகைப்பவன் தனக்குத்தானே

கொள்ளி வைக்கிறான் என்பதை

செத்துவிட்ட செல்லையாவே

சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

பொன் கந்தவேல்

29.4.2016

சிக்கனவாதி சின்னையா

சின்னையா எதிலும்

சிக்கனம் பார்ப்பவர்

தண்ணி அடிச்சாலும்

சீல் குடிக்கமாட்டார்

சிக்கனமான வெட்டிரும்புதான்

சின்னையாக்களால் வெட்டிரும்பு வியாபாரிகள்

கொண்டாவில் கொடிகட்டிப்பறந்தனர்

சின்னையாக்கள் பொடி நடைதான்

வெட்டிரும்பின் புண்ணியம்

விரைவிலேயே சின்னையா

சிவலோகப் பதவி

என்னே கொடுமை

வியாபாரிகளை வாழவைக்க

எங்கள் மண்ணில்

சின்னையாக்களின் வாரிசுகள்

இன்னமும்

தயாராகவே உள்ளனர்.

பொன் கந்தவேல்

29.4.2016