வரலாறு

வளர்ச்சிப் பாதையில்

 

யாழ் இடைக்காடு மகா வித்தியாலயம்…

 

  • சனவரி 1926

    இடைக்காடு புவனேஸ்வரி தமிழ் வித்தியாலயம் உருவாக்கப்பட்டது. 8ம் வகுப்பு வரையான வகுப்புகள் நடைபெற்று வந்தன.

  • ஏப்பிரல் 1929

    பாடசாலைக்கான இரண்டாவது கட்டிடம் அமைக்கப்பட்டது.

  • மார்ச் 1935

    இரு மொழிப்பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டு பாடசாலையின் பெயர் இடைக்காடு சைவ ஆங்கில வித்தியாசாலை என மாற்றப்பட்டது.

  • மே 1935

    பாடசாலைக்கான மணி அமைக்கப்பட்டது.

  • டிசம்பர் 1940

    கனிஷ்ட பாடசாலை தராதரப்பத்திர பரீட்சையில் மாணவர் ஆங்கில மொழிமூலம் தோற்றினர்.

  • சனவரி 1942

    ஆங்கில சிரேஸ்ட பாடசாலைத் தராதரப்பத்திர வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது.

  • ஆகஸ்ட் 1950

    ஆங்கிலப் பாடசாலையாகத் தரம் உயர்த்தப்பட்டது.

  • செப்டம்பர் 1950

    பௌதிக, உயிரியல் அமைக்கப்பட்டது.

  • அக்டோபர் 1950

    பாடசாலையின் பெயர் யாழ் இடைக்காடு இந்துக்கல்லூரி என மாற்றம் பெற்றது.

  • மார்ச் 1951

    பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் உருவானது.

  • டிசம்பர் 1956

    மூன்றுவருடங்களாக கட்டப்பட்டு வந்த பாடசாலையின் மனையியற் கூடம் ப+ர்த்தி செய்யப்பட்டது.

  • டிசம்பர் 1958

    ஆரம்ப பிரிவிற்கான வகுப்பறைக் கட்டடம் அமைக்கப்பட்டது.

  • பெப்ரவரி 1959

    பாடசாலையின் பெற்றார் ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சின் சட்ட திட்டங்களுக்கு அமைய ஆரம்பிக்கப்பட்டது.

  • ஏப்பிரல் 1961

    யாழ் இடைக்காடு மகாவித்தியாலயம் என்ற பெயருடன் அரசாங்க பாடசாலையாக பொறுப்பேற்கப்பட்டது.

  • மார்ச் 1962

    க.பொ.த (சாதாரண தரம்) வகுப்பிற்கான விஞ்ஞான நெறி ஆரம்பிக்கப்பட்டது.

  • ஏப்பிரல் 1968

    பாடசாலையின் நூலகம் “சியவச நூலகம்” ஆரம்பிக்கப்பட்டது.

  • ஏப்பிரல் 1969

    வடமாநில கல்விப்பணிப்பாளரால் சியவச நூலகத்திற்கான கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. பாடசாலையின் விளையாட்டு மைதானம் உருவாக்கப்பட்டது.

  • டிசம்பர் 1970

    பாடசாலையின் பிரார்த்தனை மண்டபம் அமைக்கப்பட்டது.

  • 1971

    மரவேலைக் கட்டிடம் பெற்றார் ஆசிரியர் சங்கத்தினால் கட்டப்பட்டது.

  • 1972

    பாடசாலையின் தெற்கு வளவில் வகுப்பறைக்கான கடடிடம் பெற்றார் ஆசிரியர் சங்கத்தினால் கட்டப்பட்டு வடமாநில கல்விப்பணிப்பாளரால் திறந்து வைக்கப்பட்டது.

  • 1973

    பாடசாலையின் தரம் 1ஊ யாக உயர்தப்பட்டு க.பொ.த (உயர் தரம்) கலைப்பிரிவூ ஆரம்பிக்கப்பட்டது.

  • 1975

    14 பேர் டிசம்பரில் நடைபெற்ற க.பொ.த (சாதாரண தரம்) பரீட்டசையில் சித்தியெய்தி க.பொ.த (உயர்தர தரம்) வகுப்பிற்கான கலைப்பிரிவில் மேற்படிப்பை தொடர்ந்தனர். தேசிய பொதுக்கல்வி தராதர பரீட்சையில் சித்தியெய்து உயர் தர விஞ்ஞானப்பிரிவில் தம் மேற் படிப்பை தொடர்ந்தனர்.

  • 1975

    பாடசாலை திறந்த வெளியரங்கு கட்டப்பட்டது.

  • ஏப்ரல் 1976

    பாடசாலையின் தரம் 1யூடீ யாக உயர்தப்பட்டு க.பொ.த (உயர்தர தரம்) விஞ்ஞானப்பிரிவூ 33 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது.

  • ஏப்ரல் 1976

    க.பொ.த (உயர்தர தரம்) கலைப்பிரிவில் 9 மாணவர்கள் சித்தியெய்தி பல்கலைக்கழக பிரவேச தகுதியைப் பெற்றனர.;

  • டிசம்பர் 1976

    அரசு, பெற்றார் ஆசிரியர் சங்கத்தினால் மூன்று வருடங்களாக நிர்மாணிக்கப்பட்டு வந்த இரசாயனவியல், விஞ்ஞான ஆய்வூ கூடம் நிறைவூ பெற்றது.

  • 1976

    பாடசாலையின் பொன் விழாவூம், பழைய மாணவர் சங்கத்தின் வெள்ளி விழாவூம் மூன்று தினங்களாக பொருட் காட்சி, களியாட்ட விழாவூடன் கொண்டாப்பட்டது. இவ் விழாக்களின் நினைவாக மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது.

  • 1979

    பாடசாலைக்கான 3 மாடிக் கட்டிடம் பூர்த்தி செய்யப்பட்டது.

  • 1980

    உலகதாசன் ஸ்தாபனத்தின் உதவியூடன் யாழ் மாவட்டத்தில் முதன் முதலில் எமது பாடசாலையில் உயிரியல் வாயூ சாதனம் அமைக்கப்பட்டது. இது இன்று வரை செயற்பாட்டிலுள்ளது.

  • ஏப்ரல் 1981

    பாடசாலைச்சின்னம், பாடசாலைக்கீதம் என்பன உருவாக்கப்பட்டன.

  • மார்ச் 1983

    பாடசாலை மாணவர் தொகை 1000 ஐ தாண்டியது.

  • 1986

    பாடசாலையின் வைரவிழா கொண்டாடம் ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. நாட்டில் நிலவிய சீரற்ற நிலமைகளினால் விழா கொண்டாடமுடியாமல் போனது.

  • டிசம்பர் 1991

    நாட்டில் நிலவிய சீரற்ற நிலமைகளினால் பாடசாலை தனது சொந்த இடத்தை விட்டு இடம் பெயர்ந்து யாழ் நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரியில் ஒரு பகுதியில் தனியாக இயங்கியது.

  • மார்ச் 2001

    ஆரம்பபிரிவின் ஒரு பகுதி வகுப்பறைகள் தரம் 1 இற்குரிய வகுப்பறைகளாக மாற்றியமைக்கப்பட்டன, இவர்களுக்கான விளையாட்டு முற்றம் அமைக்கப்பட்டது.

  • ஆகஸ்ட் 2001

    புவூணு நிறுவனத்தினால் வழங்கப்பட்ட நிதியூதவியூடன் பாடசாலைக்கான தளபாடங்கள் செய்யப்பட்டன.

  • நவம்பர் 2001

    பாடசாலையின் நூலகத்தின் ஒரு பகுதியில் கணணி பிரிவூ ஆரம்பிக்கப்பட்டது. அரசாங்கத்தினால் 2 கணணிகள் வழங்கப்பட்டன.

  • டிசம்பர் 2001

    பாடசாலைக்கென ஏளைழைn ஆளைளழைn உருவாக்கப்பட்டது.

  • ஏப்ரல் 2002

    கல்வி அமைச்சினால் 2 கணணிகள், விஞ்ஞான பாடத்திற்கான நூல்கள் என்பன வழங்கப்பட்டன.

  • மே 2002

    பாடசாலை முகப்பில் பவளவிழா ஞாபகார்த்தமாக பெயர் அலங்கார வளைவூ அமைக்கப்பட்டது.

  • யூலை 2002

    பாடசாலையூடன் இணைந்த தனியார் காணி வெளிநாடுகளில் வாழும் பழைய மாணவர் சங்கத்தினரால் கொள்வனவூ செய்யப்பட்டு பாடசாலைக்கு வழங்கப்பட்டது.

தொடரும்…