இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் -கனடா

Update – Nov -07-2022

பலரினதும் விருப்பத்திற்கமைய, எமது குளிர்கால ஒன்றுகூடல் வரும் மார்கழி மாதம் 26ம் திகதி (December 26th, 2022) அன்று மாலை 6 மணியிலிருந்து 12 மணி வரை BABA Banquet Hall இல் நடாத்துவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்விழாவிற்கான தங்கள் வருகையை ஏற்கனவே உறுதிப்படுத்திய அனைவரிற்கும் நன்றிகள். மேலும் வருகைதர விரும்புவர்கள், உங்கள் வருகையை கீழ் உள்ள இலக்கங்களுடன் அல்லது எதாவது ஒரு செயற்குழு உறுப்பினருடன் தொடர்புகொண்டு Nav 30ம் திகதியிற்கு முன்னர் உறுதிப்படுத்தி கொள்ளவும்.

அத்துடன், இவ்விழா பற்றிய திட்டமிடல் பொதுக்கூட்டம் திரு.பொ .உதயணன் இல்லத்தில, 20-11-2020 ஞாயிறு
அன்று பிற்பகல் 2 மணியளவில் நடைபெற உள்ளது. அங்கத்தவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரும் வரவேற்கப்படுகின்றனர்.

இதற்கான கட்டணம் :
Family with kids under 21 years – $60
Seniors Family – $40
Single (above 21 years old ) – $30

உதயன் – 647-297-6552
ரூபன் – 416-566-6523
செல்வா – 647-407-8358

செயற்குழு உறுப்பினர் விபரம்:
தலைவர் : திரு.தம்பு நாகேஸ்வரமூர்த்தி
உப-தலைவர் : திரு.பொன்னையா உதயணன்
செயலாளர்: திருமதி. கங்காதேவி நல்லதம்பி
உப-செயலாளர் : திரு.சிவஞானரூபன் சிவஞானசுந்தரம்
பொருளாளர்: திரு.பார்த்திபன் கந்தவேல்
உப-பொருளாளர் : செல்வன். கபிலன் இரத்தினசபாபதி
பொதுக்குழு உறுப்பினர்கள்:
1.திருமதி. கீர்த்தனா அஜித்குமார்
2: திருமதி. அனுஷா சுதர்சன்
3.செல்வன்.துஷியன் நவகுமார்
4.செல்வன். ரிஷிபன் அருணகிரி
5.செல்வன். சிந்துயன் உதயணன்

நன்றி
செயற்குழு

திருமதி.பாலகிருஷ்ணன் செல்வபாக்கியம்

துயர் பகிர்வோம்

இடைக்காட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலகிருஷ்ணன் செல்வபாக்கியம் இன்று தனது இல்லத்தில் இறைபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்ற அமரர்கள் ஆறுமுகம் இராசம்மா ஆகியோரின் மூத்த மகளும், பாலகிருஷ்ணனின் பாசமிகு மனைவியும் அனுஷா (கனடா), குணாகரன் (அதிபர்- நவக்கிரி. அ.மி.த.க.பாடசாலை ) ஆகியோரின் அன்பு தாயாரும், சுதர்சன் (கனடா),நாகசொரூபி ஆகியோரின் மாமியாரும், பரமேஸ்வரி, பாஸ்கரதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும் , தர்சன், சயீனா(கனடா) ,றேணுகாந், கிருஷன்,கிருத்திகன்(இடைக்காடு.ம.வி)ஆகியோரின் பேர்த்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 07.10.2022 புதியபூமியிலுள்ள அவரது மகன் இல்லத்தில் 11.00 மணியளவில் இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக இடைக்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர் , நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது


தகவல்
பா.குணாகரன் (மகன்)

திரு சின்னத்தம்பி தருமராசா

துயர் பகிர்வோம்

திரு சின்னத்தம்பி தருமராசா
இடைக்காட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு சின்னத்தம்பி தருமராசா அவர்கள் 01.10.2022 அன்று இடைக்காட்டில் இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலம் சென்ற சின்னத்தம்பி வள்ளியம்மை அவர்களின் அன்பு மகனும் கணபதிப்பிள்ளை சின்னப்பிள்ளை அவர்களின் அன்பு மருமகனும் ஜீவபாஸ்கரி அவர்களின் பாசமிகு கணவரும் ஆவார்.
வஜிதா, சிவரூபன், சிவானந்தம்(அமரர்) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,பரமானந்தம், கவிதா அவர்களின் அன்பு மாமனாரும்,சஞ்சய், சிந்து, கயனன், பிரணவன், தாரகி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
சத்தியபாமா, சரஸ்வதி, இதயகுமார், சரோஜா, காந்திமதி ஆகியோரின் சகோதரரும் சிவராசா காலம் சென்ற கந்தசாமி, சிவாஸ்வரி சபாரத்தினம் கனகரத்தினம் காலம் சென்றவர்களான இராசதுரை அன்னலட்சுமி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது
தொடர்புகளுக்கு
மகள் 011 4972 74703588
மகன். 416 438 7350
Cell 437 213 7845

திரு. கருணாமூர்த்தி கிருஷ்ணவேலாயுதம் (கணேஷ்)

துயர் பகிர்வோம்

இடைக்காட்டைய் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு. கருணாமூர்த்தி கிருஷ்ணவேலாயுதம் (கணேஷ்) அவர்கள் 11.08.2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் கிருஷ்ணவேலாயுதம்- பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், சதாசிவம் – சின்னமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவநந்தினியின் அன்பு கணவரும், ஐதுசா, அபிஷா, கருண் ஆகியோரின் அன்பு தந்தையுமாவார்.
மேலும் இவர் சுதா, மகிந்திரராசா(அப்பு), கீதா, ஆகியோரின் பாசமிகு சகோதரரும், பாலசுப்பிரமணியம், சரிகா, அருள்வாசன், ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது

Funeral:
Location: Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue, Markham, On, L3R 5G1
Visitation: Saturday, 20th August 2022 from 5:00 pm to 9:00 pm
Service: Sunday, 21st August 2022 from 10:00 am to 1:00 pm

தொடர்புக்களுக்கு.
சிவநந்தினி.647-8341513
அப்பு. 041792887143
சுதா. 061420547348
கீதா. 041768180678
பாலா. 416-505-4608

இதுதான் வாழ்வியல் இதுதான் வாழ்க்கை.

 கிருஷ்ண வேலாயுதம் கருணாமூர்த்தி(கணேஸ் ) எனது நெஞ்சார்ந்த அஞ்சலிகள். 11/08/2022  ஒன்டாரியோ, கனடா.

 இதுதான் வாழ்வியல் இதுதான் வாழ்க்கை.

 சில நேரங்களில் எனது வாழ்வில் நடைபெறும் சம்பவங்கள் என்னால் விளங்கிக்கொள்ள முடியாதவளாய் இருக்கின்றது. எதிர்பாராத கணங்களில் எதிர்பாராத விதங்களில் நடைபெறும் சம்பவங்கள் என்னை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும்., அதிலும் துயரமான துன்பமான நிகழ்வுகள் என்றதும் மனம் ஏதோ சலசல படுகின்றது. ஏன் இதெல்லாம் நடக்கின்றது என்ற கேள்வி என் மனதில் அடிக்கடி வந்து செல்லும். அவற்றுக்கான விளக்கங்களை எனது மனம்  தேடிக்கொண்டிருக்கும்.   விதி, கஷ்டகாலம் என்றெல்லாம் மனம் தனக்குத் தானே ஆறுதல் கூறிக் கொள்ளும். இதைவிட தற்செயலாக நடக்கின்ற ஏதோ பல சம்பவங்கள் திட்டமிட்டு செய்தது போல் இருக்கும். தானாக நடக்கும் நிகழ்வுகள் கூட சில நேரம் எனது கட்டுப்பாடுகளை மீறி எனது எதிர்பார்ப்புகளை மீறி சிறகடித்து கவலைக்கு உள்ளாக்கும். அவற்றுக்கான தொடர்புகள் என்னவாக இருக்கும் என்று மனம் ஆராய்ச்சியில் ஈடுபடும். இதுபோல ஒரு குழப்பமான சூழ்நிலை தான் ஒரு கிழமைக்கு முன் என்னை நீ வந்து சந்தித்து பலவற்றைக் ஆழ்ந்து நிதானமாக கதைத்துக்  சென்ற நினைவுகளும், நீ சென்ற போது  உனது ஞாபகார்த்தமாக ஒன்றை தந்து விட்டுச் சென்றாய் அது இன்றும் என்றும் நம்முடன் இருக்கும் இது மட்டும் உறுதி எல்லாருடைய சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

என்றும் தோழமையுடன் ஜெயன் . 

இயற்கை சார்ந்த வாழ்க்கை கொண்டாட்டமானது….by :Siva Murugupillai

இயற்கை சார்ந்த வாழ்க்கை கொண்டாட்டமானது……

வீட்டிற்று ஒரு ஆடு, அதனுடன் கூடிய இரண்டு மூன்று குட்டிகள்….. கூடவே இரண்டு கறவை பசுக்கள் அதன் கன்றுகள்…… நான்கு, ஐந்து கோழிகள்……. செல்லப் பிராணிகளாக நாய், பூனைகள்…வளவிற்கு மூன்று தனியான வீடுகள்(நித்திரை கொள்வதற்கு மால் வீடு, சமையலுக்கு அடுப்படி, கழிப்பிடமாக கக்கூசு) அவை கொட்டிலாகவும் இருக்கலாம் கோபுரமாகவும் இருக்கலாம்… தற்போது இவை எல்லாம் ஒன்றாக இணைக்கப்பட்டுவிட்டன…? வளவை சுற்றி வேலி. தளிர்.. பூ… இலை… குழையாக, காய் கனியாக, அவை சொரியும் பழுத்த இலைகள். ஆடு, மாடு பாலும் தரும், புழுக்கையும் தரும், மாடுகளும் அவ்வாறே சாணகமும் சலமும் தரும்.இவை எல்லாம் சேகரிக்கப்பட்டு ஒரு ஆயிரம் கண்டு(ன்று) அல்லது கால் ஏக்கர் தோட்டதிற்கு ஒரு வருடத்திதற்கு தேவையான இயற்கை பசளையை உருவாக்க முடியும். குடும்பம் ஒன்றிற்கு 30 மாடுகள் வரை அதுவும் தோட்டத்தில் அதிகம் பயிர் செய்கை பண்ணாத மாரிகாலத்து ஆவணி மாதம் தொடக்கம் மார்கழி முடியும் வரை தறையில் தோட்டத்தில் எருக்கட்டுதல் என்ற முறையில் ஒரு இரண்டாயிரம் கண்டு வரை எருக்கட்ட முடியும்….யாழ்ப்பாண பயிற்செய்கை நிலத்தில்.இந்த எருக்கட்டல் நெற்செய்கை நிலத்தில் மழையற்ற காலத்தில் செய்யப்படும்.அதனால்தான் இந்த மாடுகள் மாரியில் மரக்கறிச் செய்யப்படும் இடங்களிலும்… கோடையில் நெற்செய்கை செய்யப்படும் இடங்களலும் மாறி மாறி பராமரிக்கப்படும் ஒரு கூட்டுறவு மேய்ச்சல் சுழற்சிகள் இருந்தன. இதனை விட விதைத்த சணலும் வேலியில் வெட்டும் குழைகள் மேலதிகமாக அதிகம் குழைகள் உள்ள வேறு இடங்களில்(குழைக்காடுகள் என்று அழைப்பர்) சிறப்பாக பூவரசமரக் குழையும்… வேப்பு இலையும் இன்னும் பலவுமாக என்று தோட்டத்து தறையில் தாழ்த்தல் என்று போனால் மொத்தம் 4 ஆயிரம் கண்டு வரை இயற்கை பசளை பெற்றுவிடலாம்.மிகுதியாக உள்ள அல்லது குறை நிரப்பாக வன்னியில் இருந்து வரும் ஒரு லொறி லோட்டு எருவை வாங்கி தறையிற்கு பரப்பி விட்டால் ஒரு வருட விளைச்சலுக்கான இயற்கை பசளைளை பெற முடியும். மொத்தம் ஐயாயிரம் கண்டு(தோராயமாக ஒரு ஏக்கர்) தோட்டம் வைத்திருந்தவன் பத்துப் பிள்ளை பெத்திருந்தாலும் அரசாளுவான் என்பார்கள் அந்தக் காலத்தில் விவசாய பூமியில். இதுவே வானம் பார்த்த பூமியான வன்னி, கிழக்கில் என்றால் ஒரு ஐந்து ஏக்கர் நஞ்சை… புஞ்சை நிலம் என்றால் போதுமானது.உரமற்ற…. இரசாயன உரமற்ற இயற்கை விவசாயம் செய்து போதியளவு விளைச்சல் பெற்ற தோட்டச் செய்கை… கமச் செய்கை… இவை இருந்தால் அக்காச்சிமாருக்கும், தங்கச்சிமாருக்கும் ‘சீர்’ செய்து கொடுத்து கல்யாணமும் கட்டி வைக்கலாம்… செய்தும் வைத்தார்கள்.என்ன கேட்கவே ஆனந்தமாக இருக்குதா….? அதுவும் இலங்கை அரசாங்கம் இரசாயன உரங்களை தடை செய்த பின்பு இவ்வாறு செய்தும் தோட்டத்தை… கமத்தை… சாப்பாட்டிற்கு தேவையானவற்றை வாழ்க்கையை செழுமைப்படுத்தலாம் என்று எண்ணத் தோன்றுகின்றதா…? உண்மை… அவ்வளவும் உண்மை.இவை எல்லாம் நான் சிறுவனாக இருந்து போது… 50 வருடங்களுக்கு முன்பு கண்டவை. பசுமையாக இனிமையாக நஞ்சற்ற வாழ்வை கண்ட இளமை ததும்பும் வாழ்க்கை அது. காதல் வாழ்க்கை கிடுகு வேலியிற்கால் கண்களும் கண்களும் சந்தித்து கனி மொழி பேசி காதல் செய்த வாழ்க்கை அது. என்ன பின்னோக்கி ஓடச் சொல்லுகின்றீர்களா..? என்றால் பின்னோக்கி என்பதை விட முன்னோக்கி ஓடுங்கள் என்கின்றேன்…!1987 சோவியத்தின் உடைவிற்கு பின்பு அதுவரை காலமும் கியூபா சோவியத்தின் உதவியுடன் தனது உணவிற்கான மரக்கறி போன்றவற்றை இரசாயன உரங்களை பாவித்து செய்கை பண்ணியதில் இருந்து ‘… இனி கியூபா அவ்வளவுதான்…’ என்ற போது….பிடல் காஸ்ரோ தனது நாட்டை சுய உற்பத்தி மூலம் அதுவும் இயற்கை விவாசாய மூலம் பழைய முறமையிற்கு திரும்பி முன்னோக்கி நகர்ந்து இன்றுவரை தாங்குப் பிடித்து தன் நிறவை நோக்கி பயணிப்பதை வரலாற்றில் நாம் கண்டு கொண்டிருக்கும் உண்மையாக எம் கண் முன்னே விரிகின்றது. இதனையும் நாம் எமக்கு பாடமாக கொள்ளலாம்தானே.முதன் முதலில் செயற்கை இரசாயன உரத்தை எங்கள் தோட்டத்திற்கு போட்டது இப்போதும் எனக்கு ஞாபகத்தில் உள்ளது. அது வரை செயற்கைப் பசளை, இரசாயன உரம் என்று ஏதும் தோட்டத்திற்கு பாவிக்கில்லை. பசளையாக பாவித்தவை இந்த பதிவின் ஆரம்பத்தில் கூறியுள்ள முறமைகளே. இந்த இயற்கை பசளையை உருவாக்குவதற்குரிய ஆடு, மாடுகள், பண்ணை மாடுகள், பட்டி செம்மறி ஆடுகள், வேலியின் குழையும் குறை நிரப்பியிற்கு சணலும் வன்னியில் இருந்து வரும் எருவும் என்றாகிய ஒழுங்கு முறைகளை கொண்டிருந்த வாழ்கையை குழப்பியவர்களே இன்றைய இரசாயன பாவனையை அன்று அறிமுகப்படுத்தி ஊக்கிவித்தவர்களே. மக்களும் அதிக விளைச்சல் ‘எகிறும்’ என்று அதற்குள் வீழ்ந்தும் விட்டனர் காலப் போக்கில் இந்த நிலங்கள் மலடாகிவிடும் என்ற புரிதல் அவர்களுக்கு இருக்கவில்லை. உணரும் போது நிலங்கள் செத்தும் விட்டன…?இன்று இரசாயன உரத்தை தடை செய்து இயற்கை… சேதன பசளைகளை பாவியுங்கள் என்று திடீரென தடை போட்டத்தினால் விவசாயிகளுக்கு… விவசாயத்திற்கு ஏற்பட்ட திடீர் அவலங்கள், விளைச்சல் குறைவுகள் புரியப்பட வேண்டும். இயற்கைப் பசளையை போதியளவு உருவாக்குவதற்குரிய கால அவகாசங்கள், புதிய நவீன முறமைகளை உருவாக்காமல் இதனைச் செயற்படுத்த முற்பட்ட போது இந்த இயற்கை விவசாயத்தின் மீதும் அதனை அறிமுகப்படுத்திய அரசு(அரசின் செயற்பாட்டை ஒரு புறம் தள்ளி வைத்து விட்டு விடயங்களைப் பற்றி பேசவே இந்த பதிவு முனைகின்றது) மீதும் வெறுப்பும் எதிர்ப்பும் ஏற்பட்டுப் போகும் இதில் எனது கவலை அருமையான இயற்கை விவசாயம் என்ற விடயம் அடிபட்டுப் போகும் என்பதே ஆகும். பதிவின் ஆரம்பத்தில் கூறிய ஒழுங்குகளை தற்போதைய நவீன முறைகைளை உள்வாங்கி மீள் உருவாக்காமல் திடீரென இரசாயன உரத்தை தடைசெய்தல் சரியான முறமை அல்ல. அவசரப்பட்ட செயற்பாடு என்ற விமர்சனத்தில் நியாயங்கள் இல்லாமல் இல்லை.இயற்கை விவசாயம் மிகவும் நல்ல கொள்கை முடிவு. அது நஞ்சற்ற உணவுப் பொருட்களைத் அதிகம் உற்பத்தி செய்யும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.ஆனால் எம்மால் இயற்கை பசளையுடன் விவசாயம் செய்த காலத்து நிலமைகளை எற்படுத்த வேண்டும். இதனை உடனடியாக செய்ய முடியுமா என்றால் சற்றுக் கடினமதான் ஆனால் செய்தாக வேண்டும். இதனை அரசும் செய்ய வேண்டும் இதனை விவசாயமும் செய்யும் மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் அதனை மீண்டும் நடை முறைப்படுத்த முயல வேண்டும். கூடவே ஊருக்கு இரண்டு மூன்று செம்மறி ஆட்டுப் பட்டிகளை விவசாய நிலத்திற்கு பசளைகக்காக அடைப்பதற்கு ஏற்ப முன்பு இருந்ததைப் போல் உருவாக்க வேண்டும். இவை முன்னு அதிகம் இருந்து தற்போது காணாமல் போய்விட்டன. இவற்றிற்கான மேய்ச்சல் நிலங்களும் இருந்தன.கூடவே இயற்கை விசாயத்தின் தந்தை நம்மாள்வார் போன்றவர்களால் இயற்கை பசளை உருவாக்கும் முறமைகள் பூச்சி தடுப்பு முறைகள் மேலே கூறிய முறமைகளுக்கு அப்பால் உருவாக்க வேண்டும்.அப்படிச் செய்தால் சீனாவிடம் இயற்கை பசளையை எதிர்பார்க்கவும் வேண்டாம்..? அதனுடன் சேரந்து வரும் தேவையற்ற பக்றீரியா எமது மண்ணுக்கு கேடு விளைவிக்கும் என்று கடலில் கப்பலைத் தடுத்து வைத்து திருப்பி அனுப்புவதும் அதன் தொடர்சியாக மக்கள் வங்கி சிவப்பு பட்டியலில் போடுவோம் என்ற மிரட்டலும் ஏற்பட வாய்புகள் ஏற்படாது. கூடவே இறுதியில் மக்கள் வங்கி இலங்கை அரசு பணிந்து 6 மில்லியன் டாலர் வரை வாங்காத பசளைக்கு தண்டம் கட்டவேண்டிய நிலமையும் ஏற்பட வாய்பும் ஏற்படாது.சிறுவயதில் படிப்பில் கவனம் செலுத்துவது குறையும் போது எனது தாய் தந்தையர் எம்மை ஏசுவர் ‘….இப்படியே போனால் பிறகு ஆடு மாடுதான் மேய்க்க வேண்டி வரும்…’ என்று. நான(ம்) ஆடு மாடு மேய்துவிட்டுத்தான் படித்து இன்றுள்ள நிலமைiயிற்கு வந்தேன்(தோம்). அன்று அவர்களின் கூற்றிற்கு முரண் நகையாக இருந்தாலும் இன்று அந்த ஆடு மாடு மேய்த்து பட்டி அடைத்து கொடுப்தே இயற்கை பசளையை தேடி அலையும் வன்னி, கிழக்கு பெரும் நிலப்பரப்பு 5 ஏக்கர் விவசாயிகள் தேடித்திரியும் அதிகம் கிராக்கியுள்ள தொழிலாக மாறியுள்ளது. பாருங்கள் கால மாற்றம் அம்மா அப்பா அன்று கூறிய ‘ஆடு மாடு மேய்க்கப் போகின்றாய்….’ என்று ‘மட்டமான” பொருளாதார மலினத் தொழிலாக பார்க்கப்பட்டது இன்று கிராக்கியான தொழில் முறையாக மாறியுள்ளதை.நிலத்திற்கு மேலே நீரைச் சேகரித்து வைத்தால் அதனை வயல் வரப்பு என்போம் நிலத்திற்கு கீழே நீரை சேகரித்தி வைத்தால் அதனை குளம் குட்டை என்போம் நீருக்குள் அமிழ்ந்திருந்தும் விதையில் இருந்து முளைத்த பயிராக பயன் தரும் ஒரே ஒரு பயிர் நெல்லுதான். ஏனையவை சில நாட்கள் நீர் தேங்கினால் அழுகி செத்துவிடும். இந்த பூமிக்கு மேலாக இருக்கும் நீர் பூமியின் வெப்பத்தாலும் சூரியனின் வெப்பத்தாலும் ஆவியாகி கரு மேகம் ஆகி மீண்டும் மழையாக நீரைத் தரும் சுழற்சிதான் மழை இதற்காக மனித குலத்தால் உருவாக்கப்பட்ட பயிரே நெல்லு என்பார்கள்.நீரையும், இயற்கை நமக்கு தரும் பசளையும் உருவாக்கி மனித குலம் வாழ்வதற்கான உணவுகளை உற்பத்தி செய்து இன்றைய காலத்து உணவுப் பொருட்களின் பற்றாக் குறையில் இருந்து மனித குலத்தை மீட்டு எடுப்போம். வாழ்க்கை கொண்டாட்டத்திற்குரியது. அது எல்லோருக்குமானது. (நன்றி: புகைப்பட உதவி எனது நட்பு ஜெயபாலன் நல்லதம்பி)

தைத்திருநாள்

அனைவருக்கும் இனிய தமிழ் தைத்திருநாள் வாழ்த்துக்கள்

Our beautiful village farming

Just like there was an inspirational progress in the land farming fields in our village, there are many times where the paddy fields called agricultural industry has reached the highest peak as possible.The landscape surrounding Amman temple is a field with quality soil farming for paddy! Here paddy fields are mentioned as Manavari, without water flowing, sowing and harvesting depends on rain! According to our village, everyone owns the lands for paddy fields! So they look perfectly and plant quality gaddy and get the maximum yield if they get rain! It is a common thing to do similar paddy in our village’s western surrounding area of Valalayikirai! Since rain water is stagnant here in Valalai Krai pond, the paddy field is filled with water from the pond in short periods of time! In the north part of our village, Palavi, Vayar Pradesh, is also there in a manavari way, if there is a shortage of water, there is a Kavizh pond, and some of the wells are difficult to do the paddy field!In 1970, the farmers who have been trying hard in the fields near the Amman Temple near the Amman temple, produced paddy seeds using well water before the rain came, planting paddy fodder in a queue during rainy season. Communal welfare officials advised Jaffna district’s lowest spreading the record of people who got the best yield at the highest level and got the highest level, were made to show off with prizes. Among them the Mr. Mr. Chelladurai (Rathinam) Veluppillai (Nagappar grandfather) is remarkable.In the 1970s, radio was a very popular hobby, as it was scientific, everyone thought to like it, but due to the badness of economic facilities, our town people are listening to the radio which was operated on both social stations. Twenty-twenty-five houses in one house was on radio air! Sri Lankan Vanele is a popular status in foreign countries that expelled Sri Lanka for its quality broadcasting, while the people of our town gathering eagerly to listen to the news three times. At the end of the news, the news among themselves Standing together and discussing said politics and daily events is also an incredible phenomenon!Morning rays in the vanally ,Overflowing Poombunal, Mukhatar Vedi, Memorable, Song for Song, Mangaiyar Manjari, Unquenced Thirst, What you heard, Screen, Veritas News, BBC News, Honeybowl, many more very quality shows were telecasting .As the quality of production of local farmers was fixed by import avoiding policy during Mrs. Shrimao Bandara Naikka’s reign, the quality of life of farmers slowly reaches higher level of cottage houses, cottage houses. Listen to radio shows by keeping the radio at home during normal household chores and gardening to be a desired device for classy mud houses and stones Boredom trained to perfect their work, during this time our village youth went to Vanni landscape for gardening. Though Vanni has visited many parts of the landscapes from Jaffna district, Vadama, a folk drama called ‘Velikidadi Vishwamadu’ as a part of the region which is famous in the cultivation of Vanni landscapes, Vadama It is true that the loyalty of agricultural youths who have become popular throughout the moment, had a time happened to foreign youths, cannot deny or hide! The smallest high quality Panasonic radio refuge ever in their hands! Back then radio types like Sony, Younique, Panasonic, Nasanal Panasonic were in practice,At the same period, the monthly magazine called Kamathozhil explanation was full of agricultural pictures, news, advices. In a magazine of the Achajigai, our town young farmer Mr. Thangarasa was called the Northern Provincial Agriculture King An identity, an introduction, a proud head to our village by publishing her picture as the cover photo of Ammatha magazine by selecting from Vamadu. Can we forget the incidents that caused the uprightness etc!Came to enquire about the paddy field and went in a different direction, with the aim of posting some things!I hope the importance of radio was understood in such a time! A very important historical presentation of appreciation and radio to Mr. Chellathurai (Rathinam) for harvesting such a large amount in a small paddy surface near Amman temple in Jaffna district. There is no alternative opinion in being a takeable event!In our town, in the puzzle grown in the paddy fields, cutting the puzzles with friends and relatives and maturely, it is a good day. The joy of eating it as pongal, rice or nectar during the Eid days. The pride of eating is five stars. It is a fair truth that it does not happen even in the party of Tambara hostel!These pictures are for them to appreciate the tireless efforts of our village agricultural people who have cultivated green basel which is healthy in the present situation where there is no unsettled urea or shortage of urge Dedicating to you !

Big Thank அழகிய இடைக்காடு Facebook

திரு வேலுப்பிள்ளை சுவாமிநாதன் இறைபதம் அடைந்தார்

  • இதய அஞ்சலிகள் கைலைமணி திரு வேல். சுவாமிநாதன் முன்னைநாள் பரிபாலன சபைத் தலைவர், இடைக்காடு புவனேஸ்வரி அம்மன் ஆலயம்.இடைக்காட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு வேலுப்பிள்ளை சுவாமிநாதன் அவர்கள் இன்று ( 10.01.2022) காலை அம்பாளின் பாதங்களை அடைந்தார். அவர் அமரர் அருளம்மாவின் பாசமிகு கணவரும் சுவேந்திரா இலியாஸ் , அருள் ஈசன் , அருள் வாசன் ஆகியோரின் அன்புத்தந்தையுமாவார்.அவர் 1985 ஆண்டு முதல் இடைக்காடு புவனேஸ்வரி அம்மன் ஆலய பரிபாலன சபைத்தலைவர் தலைவராக மூன்று தசாப்தங்கள் பணியாற்றி ஆலயத்தின் வளர்ச்சிக்காக பணியாற்றியவர். பல ஆலயங்களின் வளர்ச்சிக்காக நிதியுதவி அளித்ததுடன் முதியோர் இல்லங்கள் பாடசாலைகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்காகவும் நிதி உதவி அளித்தவர்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று பி.ப 4.00 மணியளவில் அவரது வீட்டில் நடைபெற்று இடைக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
  • இடைக்காடு புவனேஸ்வரி அம்மன் ஆலய பரிபாலன சபை