போட்டா போட்டி

போட்டா போட்டி

அன்றொரு காலம்

சனம் என்றால் சனம்

ஒவ்வொரு வீட்டிலும்

எட்டுப் பத்து

பாடசாலையில் இடம் பிடிக்க

போட்டா போட்டி

பின்னர்

சண்டையும் வந்தது

சனமும் அழிந்தது

பாடசாலையும்

கதிரை மேசையும்

தேடுவாரின்றி

வெறிச்சோடிக் கிடக்கிறது

அப்போது

படிக்க இடமில்லை

இப்போது

படிக்க ஆளில்லை

இங்கே வா, இங்கே வா என்று

இப்போது

பாடசாலைக்கிடையேதான்

போட்டா போட்டி

பொன் கந்தவேல்

01.5.2016

சோமசெற் கந்தசாமி

பிறந்த வாழ்ந்த மண்ணை விட்டு விலக மனமில்லாமல் மனைவி மக்களின் வற்புறுத் தலுக்கிணங்க ஊரைவிட்டுப் புறப்படும்போதும் அவர் மிகவும் வேதனைப்பட்டது தன் உயிருக்கு உயிராக நேசித்த காரைவிட்டுவிட்டுப் போகிறோமே என்று தான். அதனைத் தன் உயிர்நண்பனான ராசுவிடம் ஒப்படைத்துவிட்டு தான் திரும்பி வரும்வரை அதைப் பத்திரமகப் பாதுகாக்கும்படி கூறிவிட்டுத்தான் போனார்.

கந்தசாமி கனடா போய்விட்டார். அவர் கனடாவைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும் அங்கத்திய நாட்டு நடப்பு அவருக்கு சங்கடமாகத்தான் இருந்தது. அங்கு ஓடிதிரியும் புதிய புதிய கார்களைப்பார்தபோது தொழில் நுட்பம் எவ்வளவு வளர்ந்துவிட்டது என்பதை நேரில் கண்டார்.

ஊரில் எட்டுமணிக்கும் நித்திரையால் எழும்பாத மகன் நித்திரையே இல்லாமல் இரவு முழுவதும் வேலை செய்வதைக் கண்டபோது இந்த நாடு எப்படிஎல்லாம் மனிதர்களை மாற்றிவிட்டது என வியந்து நின்றார்.

அப்பா இங்கு வாழ்வதானால் அனைவரும் கார் ஓடத்தெரிந்தி ருக்கவேண்டும். எனவே நீங்களும் காரோடப்பழகி லைசென்ஸ் எடுங்கோ என மகன் கூறியபோது சரி அதையும்தான் பார்ப்போமே என தன் மகனின் காரை ஓட்டமுனைந்தார், கந்தசாமி. அங்கு கிளச் உள்ள வாகனம் ஓடிவிட்டு இங்கு கிளச் இல்லாத வகனம் ஓடுவது சங்கடமாக இருந்தது, ஒரு நல்ல நாளில் கந்தசாமி காரின் சாரதியின் ஆசனத்தில் அமர்ந்துகொண்டார். அவருக்குப் பக்கத்தில் மகன் அமர்ந்துகொண்டார். காரை இயக்கி பத்து யார்கூடப்

போயிருக்காது., ஐயோ அப்பா மற்றப்பக்கம், மற்றப்பக்கம் என மகன் கத்தியபோது தான் அந்த விபரீதத்தை கந்தசாமி உணர்ந்துகொண்டார். முப்பது வருடமாக இடப்பக்கத்தால் ஓடி அனுபவப்பட அவரால் இங்கு வலப்பகதால் ஓடுவதற்கு கையும் மனமும் இடம் கொடுக்கவில்லை. தொட்டிலில் பழக்கம் என்பார்களே, அவரால் மாற்றவேமுடியவில்லை. அன்றுடன் கார் ஓடும் எண்ணதைக் கைவிடுவிட்டார், கந்த்சாமி.

மாதம் மூன்று ஓடிவிட்டது. ஊரிலே ராசாவாகத் திரிந்த கந்தசாமிக்கு அன்னிய தேசம், அந்நிய மொழி, அந்நிய முகங்கள், அவர் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார். மீண்டும் ஊருக்கே போகப்போகிறேன் என தனது முடிவக்கூறியபோது மனைவி மக்கள் அதைத் தடுக்க விரும்பவில்லை,

ஆண்டு 2010.

கந்தசாமி மீண்டும் ஊருக்கு வந்துவிட்டார். சகோதரி பாக்கியத்துடன் தங்கிக்கொண்டார். பலரும் வந்து அவரைச் சந்தித்தனர். அவர் திரும்ப வந்ததில் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி.

கால ஓட்டம் பல மாறுதல்களைச் செய்துதான் வருகிறது. கார் வைத்திருந்த பலர் அதனை விற்றுவிட்டு முச்சக்கர வண்ண்டிக்கு மாறிவிட்டனர். கந்தசாமி மட்டும் தன் சோமசெற் வாகனதை விற்கவுமில்லை, கைவிடவுமில்லை. கந்தசாமியின் கார் மீண்டும் வீதியில் வலம் வந்தது. அவருக்கென்று சில வாடிக்கையாளர் இன்னமும் இருக்கவே செய்தனர். நாள் போகப்போக அவரின் உடலில் தளர்ச்சி ஏற்பட்டபோதும் மனதிலோலோ கொள்கையிலோ தளர்ச்சி ஏற்படவில்ல்லை. இன்னனும் பிரவசத்துக்கு அவரின் கார் அரைச்சலார் கட்டணத்தில்தான் ஓடிக்கொன்றிருக்கிறது.

அந்தக்கார் அவரின் கைகு வந்து இருபது வருடங்களாகி விட்டது. அவரைப்போலவே அவரது காருக்கும் வயதாகிவிட்டதை உணர்ந்தார். தனக்கும் இறுதிநாகள் நெருக்குவதை அவர் உள்ளுணர்வு கூறியது. எனவே தூர நோக்குடன் ஒரு மரண சாசனதை தயார் செய்துகொண்டார்.

தனது காரினை யாழ்ப்பாணத்த்திலுள்ள றங்கசாமி கராச்சுக்கு கொண்டுசென்று முழுச்சேவீஸ் செய்துதரும்மப்டி மெக்கனிக் ரங்கசாமியைக் கந்தசாமி கேட்டபோது, ஏன் அண்ண இதிலை மினக்கிடுறியள் ஒரு ஆட்டோவை எ டுத்து ஓடலாம் தானே என றங்கசாமி சொன்னபோது இல்லை, நான் செத்தாலும் இன்னும் இருபது வருசத்துக்கு அசையாமல் ஓ டவேண்டும், செலவைப்பற்றி கவலைஇல்லை எனக்கூறி அதைப் புதிய வாகனம் எனக் கூறுமளவுக்கு திருத்திகொண்டு வந்தபோது பலருக்கும் அது ஆச்சரியமாகத் தான் பட்டது.

இதைக்கண்டு சகோதரி பாக்கியமும் அதைத்தான் கேட்டாள்.

அப்போது அவர், பாக்கியம் , நான் இனிக்கனநாள் இருக்கமாடன் நான் இறந்ததும் செய்யவேண்டியவைகளை எனது உயிலில் எழுதி இந்தப்பெட்டியில் வைத்திருக்கின்றேன். நான் இற்ந்ததும் அதன்படி செய்யுங்கள் என அவர் கூறியபோது இல்லை அண்ணை நீங்கள் இன்னும் கனகாலம் இருப்பியள் என ப்பாகியம் கூறியபோது, இல்லைப் பாக்கியம் வந்த அலுவல் முடிந்தால் போகத்தானே வேண்ணும் எனக் கந்தசாமி கூறியபோது பாக்கியத்தின் உள்மனம் ஏதோ கூறியது.

ஒருமாதம் கூட ஆகவில்லை. காலை எட்டுமணியும் ஆகிவிட்டது, காலை ஐந்து மணிக்கே எழும்பிவிடும் கந்தசாமி

ஏன் இன்று இன்னும் எழும்பவில்லை என எண்ணிய பாக்கியம் அவரைதேடியபோது அவர் காரின் சாரதி ஆசனத்தில் ஸ்ரியறிங்கில் முகம் புதைத்தபடி இருப்பத்க்கண்ட பகியம் அண்ணை அண்ணை எனக்கூவிய போதும் பதில் இல்லை, கிட்டிடே போய் அவரைத் தொட்டபோது உடல் சில்லிட்டது.

அண்ணா அண்ணா என்ற பாக்கியத்தின் அழுகுரல் ஊரையே அழவைத்தது. கந்தசாமி ஒருவருக்கும் ஒருதொல்லயும் இல்லாமல் காரில் இருந்தபடியே போய்விட்டார். மனைவி பங்கயமும் மகன் சிவராசாவும் கனடாவிலிருது வந்து ஈமச்சடங்கை செய்து வைதனர்.

ஆண்டு 2020.

கந்தசாமியும் காலமாகி ஆண்டுகள் பத்து ஓடிவிட்டது. விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில கார்கள் மட்டுமே யாழ்ப்பாணப்பகுதியில் இன்னமும் இருக்கின்றன.

அவர் எழுதிய உயிலின்படி அவரது வங்கியில் இருந்த பணம் ஐந்து லட்சம் நிலையான வைப்பிலிட்டு அதன் வட்டிப்பணம் ஊர் வாசிக்சாலையின் பத்திரிகை மற்ற்றும் இன்னபிற தேவை க்கும், கார் வாசியசாலையின் பொறுப்பிலும், ஊரிலுள்ள இளைஞர்கள் ஓடிப்பழகுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

கந்தசாமியின் சோமசெற்கார் அதேபழைய கம்பீரதுடன் மந்திகையிலிருந்து வல்லைவெளியத்தாண்டி அச்சுவேலி நோக்கி வந்துகொண்டிருக்கிறது. கந்தசாமியின் மருமகன் ஞானம் காரை ஓட்டிக்கொண்டிருந்தான். கந்தசாமியின் கம்பீரமான உருவப்படம் சாரதி ஆசனத்துக்கு முன்னால் பொருத்தப்ட்டிருந்தது. பின் ஆசனத்தில் நாயகி தனது

கைக்குழந்தையுடன் , அவள் அருகில் அவள் தாய் ராசம் . தாயின் கண்ணிலிருந்து கண்ணீர் வர, அதைகண்ண்ட மகள் நாயகி அதப்ப்ற்றிகேட்க, , பிள்ளை, இருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன் நீ மந்திகை ஆஸ்பத்திரியில் பிறந்தபோது இப்படி ஒருநாள் இதே வல்லைவீதில் இதே காரில் என்மடியில் இருந்தாய். இதே காரை .கந்த்சாமி அண்ணர்தான் ஓட்டி வந்தார். அதேபோல் இன்று நீ உன் குழதையுடன். அதை நினைதேன் அழுகையை அடக்க முடியவில்லை.

உயிருடன் இருக்கும் பலர் அடுதவருக்கு உதவாத இந்தக் காலதில் இறந்தபின்பும்….

அவர் மனிதப்பிறவியல்ல. அவர் ஒரு தெய்வப்பிறவி.

கடவுள் படைத்த படைத்த மனிதன் ஆகட்டும், மனிதன் படைத்த இயந்திரமாகட்டும், ஊருக்கு உளைப்பவர்கள் என்றுமே இறப்பதில்லை …..

அன்பிலார் எல்லாம் தமக்குரியர், அன்புடையர்

என்பும் உரியர் பிறற்கு – குறள்

பொன் கந்தவேல்

01.01.2016

Canada Day

திருமதி.கமலா தம்பி

துயர் பகிர்வோம்

யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கமலா தம்பி அவர்கள் 28-06-2021 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சிவகாமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்ற தம்பிமுத்து தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,தமயந்தி, இராகவன், முரளீதரன், அசோகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,பத்மாவதி டெல்விஸ் அவர்களின் அன்புச் சகோதரியும்,Harmeet, தயாராணி, Lucy, சுபத்திரிக்கா ஆகியோரின் அன்பு மாமியாரும்,ரசிகா, Angud, தன்யா, திமோதி, மலிசா, கரோலினா, நவீன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,Aden அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது
பார்வைக்கு
Wednesday, 30 Jun 2021 11:00 AM – 12:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Wednesday, 30 Jun 2021 12:30 PM – 2:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Wednesday, 30 Jun 2021 2:30 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
அசோகன் – மகன்
Mobile : +14162581054Phone : +19054301865

உழவர் பெருமக்கள்

மண்ணின் மைந்தர்கள் ஆகிய உழவர்  பெருமக்கள்

அனைவருக்கும் இடைக்காடு பழைய மாணவர் சங்கத்தின்

தைத்திருநாள் வாழ்த்துக்கள் என்றும் ஆரோக்கியமாகவும்

விவேகம் அதி உன்னத உழவர் மைந்தர்களுக்கு நாம்

நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்

கொள்கின்றோம்

images pon 2021

சிதம்பரப்பிள்ளை வேலாயுதபிள்ளை

Siva mama

முல்லைத்தீவு ஒட்டுசுட்டானைப் பிறப்பிடமாகவும், இடைக்காடு, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை

வேலாயுதப்பிள்ளை அவர்கள் 30-12-2019 திங்கட்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை(ஓய்வுநிலை தபால் அதிபர்), சின்னப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், சரவணமுத்து(பிரதம கணக்காளர்) சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிலம்பு செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,
தர்ஷினி(Doctor Of Chiropractic), தர்மினி(Bachelor Of Mathematics) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவபாக்கியம்(ஒட்டுசுட்டான்), நல்லதம்பி(கனடா), காலஞ்சென்ற கமலாதேவி, கதிர்காமு(நாதன் -இடைக்காடு) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற சிவப்பிரகாசம், சிவஞானசுந்தரம்(ஓய்வுநிலை தபால் அதிபர்- இலங்கை), கங்கா(கனடா), பரமேஸ்வரி(இலங்கை), பத்மினி(அவுஸ்திரேலியா), சிறிகாந்தன்(அவுஸ்திரேலியா), சிவா(லண்டன்), தேன்மொழி(கனடா), ஆனந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவலோகநாதன், கையிலை, சிவசோதி, சிவகணேஸ்(கனடா), சிவயோகம்(இலங்கை), கமலினி, ரூபன், சுதா, கமல்(கனடா), குமுதா(சுவிஸ்), சிவா(இலங்கை), ஆரதன், அக்‌ஷன்யன்(லண்டன்), சுறேண்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரதீபன், சசி, காலஞ்சென்ற மதுரா, அமலன், மிதுலன், தீபா, சரவணன், சுதன், அர்சுனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
Visitation:
Saturday Jan 18 – 6:30 pm to 9:30 pm
Sunday Jan 19 – 8:00 am to 9:00 am
Funeral Service:
Sunday Jan 19 – 9:00 am to 10:30 am
Cremation:
Sunday Jan 19 – 10:30 am
Place:
Lotus Funeral & Cremation Center Inc
121 City view DR, Etobicoke
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகள்:
செல்வி (மனைவி) 905-201-7308
ரூபன் – மருமகன் 416-566-6523
கமல் – மருமகன் 416-464-0282
தேனி – மைத்துனி 647-638-8611
மூர்த்தி 416-966-2453
பிரதீபன்(சசி) – பெறாமகன் 647-280-3215
கையிலை – மருமகள் 416-305-4475

திருமதி. வள்ளிநாயகி பொன்னையா

திருமதி. வள்ளிநாயகி பொன்னையா இன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.. ஈமைச்சடங்குகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்!

யாழ் இடைக்காட்டை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி வள்ளிநாயகி பொன்னையா அவர்கள் 10-11-2019 ஞாயிற்றுக்கிழமை

அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற செல்லையா பொன்னையா அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான செல்லையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும் முருகையா, சிவகாமிப்பிள்ளை , சின்னையா , காலஞ்சென்ற திலகவதி , குமாரசாமி ஆகியோரின் அன்பு சகோதரியும்,
சுகந்தினி , சாந்தினி, சாமினி, வேற்செல்வன், உதயணன் ஆகியோரின் அன்புத்தாயாரும்,
கேதீஸ்வரன், Hans Arnulf Busch , அன்னலிங்கம், கலையரசி, சத்தியதேவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுகேசன், கார்த்திகா , பிரதாபன், பிருந்தா, வள்ளுவன், இளநகையோன், இளமாறன், சேயோன், சிந்துயன், சரண்யா, ஆகியோரின் பேத்தியும் ஆவர்.
பார்வை நேரம்:
16-11-2019 சனிக்கிழமை 6:30 to 9:30 pm
17-11-2019 ஞாயிறு 7:00 am to 8:00 am
கிரியை :
17-11-2019 ஞாயிறு 8:00 to 10:00 am
தகனம் :
17-11-2019 ஞாயிறு 10:30 am
இடம்:
Lotus Funeral and Cremation Centre Inc
12 Cityview Drive
Etobicoke, ON, M9W 5A8

தொடர்பு :
பிள்ளைகள்
வேற்செல்வன் 416-275-8961
உதயணன் 647-297-6552
சாமினி 647-766-3887

By பிள்ளைகள்

2019_ponnaamma

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது

 

IMG-53938957137a1a678fe430c80609ce11-V

OSA-J/IMV

IMG-dcf0bf104c0abd357c16dc4993888305-V

OSA-JIMV