உறவுகளே!!

நாம் இங்கு எழுதுகின்ற கருத்துக்கள் ஏற்கனவே பல சான்றோர்களாலும் முன்னோர்களாலும் எழுதப்பட்டவை. அவற்றை கற்றுக் கொண்டதும் விளங்கிக் கொண்டதன் அடிப்படையில் இதை  தொகுத்து உங்களுக்கு வழங்குகின்றோம். இதன் ஊடாக இலகு முறையில் நமது வாழ்வியலை எடுத்துச் செல்ல முயற்சிக்கின்றோம். நாம் பெற்ற பயன்களை நீங்களும் பெற்று வாழ்வியலில் முன்னேறுவீர்களாக!!!

நன்றியுடன் இணையவாசிகள்.

நமது முன்னேற்றத்தை தடுக்கும்…..

வெட்கம் (Shyness) ஒரு தொழிலை செய்யும் பொழுதோ அல்லது ஒரு செயலை தொடங்கும் பொழுதோ அதனை நம்மால் செய்ய முடியுமா(?) அதற்கு நமக்கு தகுதி இருக்கா(?) அதில் தோல்வி அடைந்தால் மற்றவர்கள் கேலி(!!) செய்வார்களே! என்று வெட்கப்பட்டால் முன்னேற முடியாது .

பயம் (Fear)  இதனை நம்மால் செய்ய முடியுமா(?) அதாவது இந்த செயலை நம்மால் செய்ய முடியுமா என பயப்படுவது.

தாழ்வுமனப்பான்மை ( Poorself-image) அவங்களுக்கு தைரியம் இருக்கு எனக்கு இல்லை., அவங்களுக்கு அதற்கான தகுதி இருக்கு நமக்கு இல்லை., என நம்மை நாமே தாழ்த்திக் கொள்ளுதல்.

 நாளையவாதிகள் (Procrastination) எந்தச் செயலையும் நாளை நாளை என தள்ளி போட்டு கொண்டே செல்லுதல்.

 சோம்பல் (Laziness) சாக்குப் போக்கி எந்த செயலையும் செய்யாமல் இருப்பது

பிற்போக்கான பழக்க வழக்கம்(Negative Habits) பிற்போக்கான எண்ணங்கள் அல்லது கீழ்த்தரமான செயல்களையும் அவற்றுக்கான சிந்தனைகளையும் பழக்கவழக்கங்களாக வைத்துக் கொள்ளுதல்.

எதிர்மறை எண்ணங்கள்(Negative thoughts) எதிர்மறை எண்ணம் நமது முன்னேற்றத்திற்கு மாபெரும் எதிரி என்பது தெரிந்தும் அதை நீக்கும் வழி தெரியாமல் பலரும் திண்டாடுகின்றோம்.

மேலே எழுதிய கருத்துக்கள் நாம் கற்றுக் கொண்டவைகளும் அனுபவ ரீதியாக பெற்றவையும் ஆகும். இவற்றை எழுதுவது இலகு, ஆனால் அதை வாழ்வியலில் கடைப்பிடிப்பதும் அந்த நெறிமுறையை சரியாக ஒழுங்குபடுத்தி செய்வதும் கடினத்திலும் கடினம்., இருப்பினும் வாழ்வியல் என்பது இவை அனைத்தையும் தாண்டி கடந்து வாழ்ந்து காட்டுவது தான். இப் பிறப்பிலேயே பிறந்த வாழ்வுக்கு எங்கள் வாழ்வு முன்னுதாரணங்கள் ஆகும். ஆகவே மேற் கூறிய சில கருத்துக்களில் இருந்து நாங்கள் எங்களை சற்றேனும் மாற்றுவோமாயின் ஓர் ஆக்கபூர்வமான, அறிவுபூர்வமான,வீரியமிக்க ஒரு சமுதாயத்தை நாங்கள் உருவாக்க முடியும் என்பதில்  சந்தேகம் இன்றி உறுதியோடு நாங்கள் இருக்கின்றோம். 

நன்றியுடன் அடுத்த பதிவில்.. 

Last Modified: January 22, 2023