Angeli Easwaramoorthy Bharathanatya Arangetram

எமது மகள் அஞ்சலி இன் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெறவுள்ளது. இதில் எமது அனைத்து உறவுகளும் கலந்துகொண்டு நிகழ்சியை நிறைவுடன் நடாத்தி தருமாறு அன்புடன் அழைக்கின்றோம். அரகேற்ற நிகழ்ச்சி நேரம், இடம் பற்றிய விபரங்களை இத்துடன் உள்ள அழைப்பிதழில் இருந்து அறிந்து கொள்ளவும். மற்றும் எமது உறவுகளிடமும் இதனை அறிந்து கொள்ள முடியும். மேலும் நாட்டிய நிகழ்வில் ஆர்வம் உள்ள நண்பர்களையும் அழைத்து வந்து நிகழ்ச்சி சிறப்புற நடைபெற ஆவன செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றியுடன்,
திரு. திருமதி. சிவா, மோகனா ஈஸ்வரமூர்த்தி குடும்பத்தினர்

Invitation_preview_1 Invitation_preview_2

தமிழ் மொழித் தினப் போட்டி – 2013

தேசிய மட்டத்தில்
முதலாம் இடம்

0OHL2O

செல்வி தங்கவேல் தீபிகா
கணிதப் பிரிவு (2014 Batch)
யா/இடைக்காடு மகாவித்தியாலயம்

தந்தை :   திரு. நடராசா  தங்கவேல்
தாய்   :   திருமதி தங்கவேல் சிவேஸ்வரி
முகவரி :   ஐயன்குட்டிய வளவு ,
இடைக்காடு,
அச்சுவேலி.

யா/இடைக்காடு மகாவித்தியாலயத்தை சேர்ந்த செல்வி தங்கவேல் தீபிகா, 2013 ஆம் ஆண்டுக்கான தமிழ் மொழித்தின இலக்கியத் திறனாய்வு தேசிய மட்ட போட்டியில் (06.07.2012 இல் நடைபெற்றது.) முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.  மேலும் எமது பாடசாலையில் இவ்வாறான போட்டியில் பங்கு கொண்டு தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளமை இதுவே முதல் தடவையாகும். இது ஒரு வரலாற்றுப் பதிவாகும்.

எனவே அவரை கௌரவித்து பாராட்டும் விழா நேற்று (2013.07.15) நடைபெற்றது. இத்தியடிச் சந்தியிலிருந்து  பாண்ட் வாத்திய அணியுடன் அழைத்து வரப்பட்டு பாடசாலை மண்டபத்தில்; அவரின் பெற்றோர் உறவினர் மற்றும் சிறப்பு விருந்தினர் வலயமட்ட பிரதிநிதிகள்  ஊர்மக்கள் முன்நிலையில்        மிகச்சிறப்பாக அவர் கௌரவிக்கப்பட்டுள்ளார்.  செல்வி த.தீபிகா அவர்களின் திறமையினை பாராட்டுவதோடு எதிர்காலத்திலும் பல வெற்றிகளை பெற்றிட வாழ்த்துகின்றோம்.

பழைய மாணவர் சங்கம்,
யா/இடைக்காடு மகாவித்தியாலயம்.

தமிழ் மொழித்தினப் போட்டி 2013

lM22KW

தேசிய மட்டத்திற்கு தெரிவு

செல்வி தங்கவேல் தீபிகா
கணிதப் பிரிவு (2014 Batch)
யா/இடைக்காடு மகாவித்தியாலயம்

தந்தை: திரு. நடராசா  தங்கவேல்
தாய்: திருமதி தங்கவேல் சிவேஸ்வரி
முகவரி: ஐயன்குட்டிய வளவு ,
இடைக்காடு,
அச்சுவேலி.

யா/இடைக்காடு மகாவித்தியாலயத்தை சேர்ந்த செல்வி தங்கவேல் தீபிகா, 2013 ஆம் ஆண்டுக்கான தமிழ் மொழித்தின இலக்கியத் திறனாய்வு போட்டியில் பங்குபற்றி பாடசாலை,  கோட்டம்,  வலயம், மாவட்டம்,  மாகாணம் ஆகிய அனைத்து மட்டங்களிலும் முதலாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலக்கியத் திறனாய்வு என்பது கொடுக்கப்பட்ட செய்யுள் உரை நடைப்பகுதியில் காணப்படும் ஆக்கத்திறன் சார்ந்த விடயங்களை விமர்சித்து எழுதுதல் ஆகும். இவ் வினாப்பத்திரம் மூன்று மணித்தியாலயங்களைக் கொண்டது.

தமிழ்த்துறை சார்ந்த இப் போட்டியில் கணிதப்பிரிவில் கல்வி பயிலும் மாணவியாகிய த. தீபிகா அவர்கள் பங்கு கொண்டமை பாராட்டத்தக்கது. மேலும் எமது பாடசாலையில் இவ்வாறான போட்டியில் பங்கு கொண்டு தேசிய மட்டம் வரை செல்வது இதுவே முதல் தடவையாகும் என்பது ஒரு வரலாற்றுப் பதிவாகும். 2013 தமிழ்த்தினப் போட்டியில் எழுத்தாக்க நிகழ்வில் யாழ்ப்பாணக் கல்வி வலயத்தில் தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இரு மாணவர்களில் இவர் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை(2013.07.06) கொழும்பு றோயல் கொலிஜ்  இல் நடைபெறவுள்ள தேசிய மட்டப் போட்டியிலும் இம் மாணவி  வெற்றி வாகை சூடிவர வாழ்த்துகின்றோம்.

பழைய மாணவர் சங்கம்,
யா/இடைக்காடு மகாவித்தியாலயம்.