போட்டா போட்டி

போட்டா போட்டி

அன்றொரு காலம்

சனம் என்றால் சனம்

ஒவ்வொரு வீட்டிலும்

எட்டுப் பத்து

பாடசாலையில் இடம் பிடிக்க

போட்டா போட்டி

பின்னர்

சண்டையும் வந்தது

சனமும் அழிந்தது

பாடசாலையும்

கதிரை மேசையும்

தேடுவாரின்றி

வெறிச்சோடிக் கிடக்கிறது

அப்போது

படிக்க இடமில்லை

இப்போது

படிக்க ஆளில்லை

இங்கே வா, இங்கே வா என்று

இப்போது

பாடசாலைக்கிடையேதான்

போட்டா போட்டி

பொன் கந்தவேல்

01.5.2016

சோமசெற் கந்தசாமி

பிறந்த வாழ்ந்த மண்ணை விட்டு விலக மனமில்லாமல் மனைவி மக்களின் வற்புறுத் தலுக்கிணங்க ஊரைவிட்டுப் புறப்படும்போதும் அவர் மிகவும் வேதனைப்பட்டது தன் உயிருக்கு உயிராக நேசித்த காரைவிட்டுவிட்டுப் போகிறோமே என்று தான். அதனைத் தன் உயிர்நண்பனான ராசுவிடம் ஒப்படைத்துவிட்டு தான் திரும்பி வரும்வரை அதைப் பத்திரமகப் பாதுகாக்கும்படி கூறிவிட்டுத்தான் போனார்.

கந்தசாமி கனடா போய்விட்டார். அவர் கனடாவைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும் அங்கத்திய நாட்டு நடப்பு அவருக்கு சங்கடமாகத்தான் இருந்தது. அங்கு ஓடிதிரியும் புதிய புதிய கார்களைப்பார்தபோது தொழில் நுட்பம் எவ்வளவு வளர்ந்துவிட்டது என்பதை நேரில் கண்டார்.

ஊரில் எட்டுமணிக்கும் நித்திரையால் எழும்பாத மகன் நித்திரையே இல்லாமல் இரவு முழுவதும் வேலை செய்வதைக் கண்டபோது இந்த நாடு எப்படிஎல்லாம் மனிதர்களை மாற்றிவிட்டது என வியந்து நின்றார்.

அப்பா இங்கு வாழ்வதானால் அனைவரும் கார் ஓடத்தெரிந்தி ருக்கவேண்டும். எனவே நீங்களும் காரோடப்பழகி லைசென்ஸ் எடுங்கோ என மகன் கூறியபோது சரி அதையும்தான் பார்ப்போமே என தன் மகனின் காரை ஓட்டமுனைந்தார், கந்தசாமி. அங்கு கிளச் உள்ள வாகனம் ஓடிவிட்டு இங்கு கிளச் இல்லாத வகனம் ஓடுவது சங்கடமாக இருந்தது, ஒரு நல்ல நாளில் கந்தசாமி காரின் சாரதியின் ஆசனத்தில் அமர்ந்துகொண்டார். அவருக்குப் பக்கத்தில் மகன் அமர்ந்துகொண்டார். காரை இயக்கி பத்து யார்கூடப்

போயிருக்காது., ஐயோ அப்பா மற்றப்பக்கம், மற்றப்பக்கம் என மகன் கத்தியபோது தான் அந்த விபரீதத்தை கந்தசாமி உணர்ந்துகொண்டார். முப்பது வருடமாக இடப்பக்கத்தால் ஓடி அனுபவப்பட அவரால் இங்கு வலப்பகதால் ஓடுவதற்கு கையும் மனமும் இடம் கொடுக்கவில்லை. தொட்டிலில் பழக்கம் என்பார்களே, அவரால் மாற்றவேமுடியவில்லை. அன்றுடன் கார் ஓடும் எண்ணதைக் கைவிடுவிட்டார், கந்த்சாமி.

மாதம் மூன்று ஓடிவிட்டது. ஊரிலே ராசாவாகத் திரிந்த கந்தசாமிக்கு அன்னிய தேசம், அந்நிய மொழி, அந்நிய முகங்கள், அவர் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார். மீண்டும் ஊருக்கே போகப்போகிறேன் என தனது முடிவக்கூறியபோது மனைவி மக்கள் அதைத் தடுக்க விரும்பவில்லை,

ஆண்டு 2010.

கந்தசாமி மீண்டும் ஊருக்கு வந்துவிட்டார். சகோதரி பாக்கியத்துடன் தங்கிக்கொண்டார். பலரும் வந்து அவரைச் சந்தித்தனர். அவர் திரும்ப வந்ததில் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி.

கால ஓட்டம் பல மாறுதல்களைச் செய்துதான் வருகிறது. கார் வைத்திருந்த பலர் அதனை விற்றுவிட்டு முச்சக்கர வண்ண்டிக்கு மாறிவிட்டனர். கந்தசாமி மட்டும் தன் சோமசெற் வாகனதை விற்கவுமில்லை, கைவிடவுமில்லை. கந்தசாமியின் கார் மீண்டும் வீதியில் வலம் வந்தது. அவருக்கென்று சில வாடிக்கையாளர் இன்னமும் இருக்கவே செய்தனர். நாள் போகப்போக அவரின் உடலில் தளர்ச்சி ஏற்பட்டபோதும் மனதிலோலோ கொள்கையிலோ தளர்ச்சி ஏற்படவில்ல்லை. இன்னனும் பிரவசத்துக்கு அவரின் கார் அரைச்சலார் கட்டணத்தில்தான் ஓடிக்கொன்றிருக்கிறது.

அந்தக்கார் அவரின் கைகு வந்து இருபது வருடங்களாகி விட்டது. அவரைப்போலவே அவரது காருக்கும் வயதாகிவிட்டதை உணர்ந்தார். தனக்கும் இறுதிநாகள் நெருக்குவதை அவர் உள்ளுணர்வு கூறியது. எனவே தூர நோக்குடன் ஒரு மரண சாசனதை தயார் செய்துகொண்டார்.

தனது காரினை யாழ்ப்பாணத்த்திலுள்ள றங்கசாமி கராச்சுக்கு கொண்டுசென்று முழுச்சேவீஸ் செய்துதரும்மப்டி மெக்கனிக் ரங்கசாமியைக் கந்தசாமி கேட்டபோது, ஏன் அண்ண இதிலை மினக்கிடுறியள் ஒரு ஆட்டோவை எ டுத்து ஓடலாம் தானே என றங்கசாமி சொன்னபோது இல்லை, நான் செத்தாலும் இன்னும் இருபது வருசத்துக்கு அசையாமல் ஓ டவேண்டும், செலவைப்பற்றி கவலைஇல்லை எனக்கூறி அதைப் புதிய வாகனம் எனக் கூறுமளவுக்கு திருத்திகொண்டு வந்தபோது பலருக்கும் அது ஆச்சரியமாகத் தான் பட்டது.

இதைக்கண்டு சகோதரி பாக்கியமும் அதைத்தான் கேட்டாள்.

அப்போது அவர், பாக்கியம் , நான் இனிக்கனநாள் இருக்கமாடன் நான் இறந்ததும் செய்யவேண்டியவைகளை எனது உயிலில் எழுதி இந்தப்பெட்டியில் வைத்திருக்கின்றேன். நான் இற்ந்ததும் அதன்படி செய்யுங்கள் என அவர் கூறியபோது இல்லை அண்ணை நீங்கள் இன்னும் கனகாலம் இருப்பியள் என ப்பாகியம் கூறியபோது, இல்லைப் பாக்கியம் வந்த அலுவல் முடிந்தால் போகத்தானே வேண்ணும் எனக் கந்தசாமி கூறியபோது பாக்கியத்தின் உள்மனம் ஏதோ கூறியது.

ஒருமாதம் கூட ஆகவில்லை. காலை எட்டுமணியும் ஆகிவிட்டது, காலை ஐந்து மணிக்கே எழும்பிவிடும் கந்தசாமி

ஏன் இன்று இன்னும் எழும்பவில்லை என எண்ணிய பாக்கியம் அவரைதேடியபோது அவர் காரின் சாரதி ஆசனத்தில் ஸ்ரியறிங்கில் முகம் புதைத்தபடி இருப்பத்க்கண்ட பகியம் அண்ணை அண்ணை எனக்கூவிய போதும் பதில் இல்லை, கிட்டிடே போய் அவரைத் தொட்டபோது உடல் சில்லிட்டது.

அண்ணா அண்ணா என்ற பாக்கியத்தின் அழுகுரல் ஊரையே அழவைத்தது. கந்தசாமி ஒருவருக்கும் ஒருதொல்லயும் இல்லாமல் காரில் இருந்தபடியே போய்விட்டார். மனைவி பங்கயமும் மகன் சிவராசாவும் கனடாவிலிருது வந்து ஈமச்சடங்கை செய்து வைதனர்.

ஆண்டு 2020.

கந்தசாமியும் காலமாகி ஆண்டுகள் பத்து ஓடிவிட்டது. விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில கார்கள் மட்டுமே யாழ்ப்பாணப்பகுதியில் இன்னமும் இருக்கின்றன.

அவர் எழுதிய உயிலின்படி அவரது வங்கியில் இருந்த பணம் ஐந்து லட்சம் நிலையான வைப்பிலிட்டு அதன் வட்டிப்பணம் ஊர் வாசிக்சாலையின் பத்திரிகை மற்ற்றும் இன்னபிற தேவை க்கும், கார் வாசியசாலையின் பொறுப்பிலும், ஊரிலுள்ள இளைஞர்கள் ஓடிப்பழகுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

கந்தசாமியின் சோமசெற்கார் அதேபழைய கம்பீரதுடன் மந்திகையிலிருந்து வல்லைவெளியத்தாண்டி அச்சுவேலி நோக்கி வந்துகொண்டிருக்கிறது. கந்தசாமியின் மருமகன் ஞானம் காரை ஓட்டிக்கொண்டிருந்தான். கந்தசாமியின் கம்பீரமான உருவப்படம் சாரதி ஆசனத்துக்கு முன்னால் பொருத்தப்ட்டிருந்தது. பின் ஆசனத்தில் நாயகி தனது

கைக்குழந்தையுடன் , அவள் அருகில் அவள் தாய் ராசம் . தாயின் கண்ணிலிருந்து கண்ணீர் வர, அதைகண்ண்ட மகள் நாயகி அதப்ப்ற்றிகேட்க, , பிள்ளை, இருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன் நீ மந்திகை ஆஸ்பத்திரியில் பிறந்தபோது இப்படி ஒருநாள் இதே வல்லைவீதில் இதே காரில் என்மடியில் இருந்தாய். இதே காரை .கந்த்சாமி அண்ணர்தான் ஓட்டி வந்தார். அதேபோல் இன்று நீ உன் குழதையுடன். அதை நினைதேன் அழுகையை அடக்க முடியவில்லை.

உயிருடன் இருக்கும் பலர் அடுதவருக்கு உதவாத இந்தக் காலதில் இறந்தபின்பும்….

அவர் மனிதப்பிறவியல்ல. அவர் ஒரு தெய்வப்பிறவி.

கடவுள் படைத்த படைத்த மனிதன் ஆகட்டும், மனிதன் படைத்த இயந்திரமாகட்டும், ஊருக்கு உளைப்பவர்கள் என்றுமே இறப்பதில்லை …..

அன்பிலார் எல்லாம் தமக்குரியர், அன்புடையர்

என்பும் உரியர் பிறற்கு – குறள்

பொன் கந்தவேல்

01.01.2016

Canada Day

திருமதி.கமலா தம்பி

துயர் பகிர்வோம்

யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கமலா தம்பி அவர்கள் 28-06-2021 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சிவகாமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்ற தம்பிமுத்து தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,தமயந்தி, இராகவன், முரளீதரன், அசோகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,பத்மாவதி டெல்விஸ் அவர்களின் அன்புச் சகோதரியும்,Harmeet, தயாராணி, Lucy, சுபத்திரிக்கா ஆகியோரின் அன்பு மாமியாரும்,ரசிகா, Angud, தன்யா, திமோதி, மலிசா, கரோலினா, நவீன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,Aden அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது
பார்வைக்கு
Wednesday, 30 Jun 2021 11:00 AM – 12:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Wednesday, 30 Jun 2021 12:30 PM – 2:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Wednesday, 30 Jun 2021 2:30 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
அசோகன் – மகன்
Mobile : +14162581054Phone : +19054301865

திரு.கந்தையா இராசரத்தினம்

அமரர்.கந்தையா இராசரத்தினம்
அன்னை மடியில்:
25-11-1934
ஆண்டவன் அடியில்:
21-06-2021

அமரர்.கந்தையா இராசரத்தினம்
பளை இயக்கச்சியை பிறப்பிடமாகவும், இடைக்காடு அச்சுவேலியை புகுந்த இடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு.கந்தையா இராசரத்தினம் அவர்கள் 21-06-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். இவர் அளுத்கம, யா/ஸ்ரீசோமஸ்கந்தா கல்லூரி ஆகிய இடங்களில் ஆசிரியராகவும் ஞானாசாரியார், இடைக்காடு மகா வித்தியாலயம், பூநகரி மகாவித்தியாலயம் ஆகிய இடங்களில் அதிபராகவும், மன்னாரில் வட்டாரக் கல்வி அதிகாரியாகவும் (CEO), கொழும்பில் கல்வி அமைச்சு நிர்வாகியாகவும், Ethiopia, Zambia, South Africa (Transkei) இல் Head of Science Department இலும் பணியாற்றினார்
அன்னார் காலம் சென்றவர்களான கந்தையா சிதம்பரம் தம்பதியினரின் அன்பு மகனும், காலம் சென்றவர்களான செல்வத்துரை நாகரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும், சிவேஸ்வரியின் அன்புக் கணவரும், உதயநாயகி, செல்வரத்தினம், காலம் சென்ற நவரத்தினராசா ஆகியோரின் பாசமிகு அண்ணாவும், சீதாலக்ஷ்மி, மீனலோஜினி, காலம் சென்ற சுந்தரவேல் ஆகியோரின் அன்பு மைத்துனரும், நாகநந்தினி, நாகநளினி, நாகநிமலினி ஆகியோரின் பாசமிகு அப்பாவும், தயாபரன், இளம்சென்னி, வள்ளுவன் ஆகியோரின் அன்பு மாமாவும், சரண்யா, தரண்யா, மயூரி, அனுஜன், திவ்யா,அகல்யா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,ஷியாமின் பாட்டாவும், அகிலன், நகுலன், சுமதி ஆகியோரின் மாமாவும், விசாகன், நிசாந்திகா, நிசாந், சுசித்ரா, ஜானகி, அகிம்சதாசன் ஆகியோரின் பெரியப்பாவும் கவிதா, ஜனகன்,கரிமா ஆகியோரின் மாமாவும், அனித்தா,ஆகாஷ்,கஸ்தூரி, அசோக், நிலா,ரோஜா, கீதா, அபினயன், கரிகாலன், டெக்காட், கேலிப், ஐரிஸ், ஆகியோரின் தாத்தாவும், சிவமங்களவதி, சிவமலர், நடராசபதி, சிவயோகராணி, சிவமனோகரி, சிவயோகேஸ்வரி மற்றும் காலம் சென்றவர்களான கதிர்காமசுந்தரலிங்கம், சிவபாக்கியவதி, சிவசோதிமதி, சன்னிதிவேல் ஆகியோரின் அன்பு மைத்துனரும், சோதிமுருகேசு, இராஜேஸ்வரி , சிவரஞ்சனி, சிறீதரன், சிவபாலன், கணேசலிங்கம் மற்றும் காலம் சென்றவர்களான பொன்னம்மா, துரைசிங்கம், சிதம்பரநாதன்,சண்முகபாரதி ஆகியோரின் சகலனும் ஆவார்.
இறுதிக்கிரியைகள் Covid -19 காரணமாக கனேடிய சட்டத்திற்கமைய குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்களுடன் நடைபெற வேண்டும் என்பதால், இந் நிகழ்வானது குடும்ப உறவுகள் மட்டும் பங்கு பற்றும் நிகழ்வாக நடைபெறஉள்ளது. இந் நிகழ்வினை உறவினர்கள், நண்பர்கள் நேரலை மூலம் பார்வையிட முடியும். இதன் விபரம் பின்னர் அறிய தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது

நிகழ்வுகள்
பார்வைக்கு:
Thursday 24-06-2021
12:00pm – 2:00pm
St. John’s Dixie Chappal
737 Dundas St. E
Mississauga, Ontario
கிரியை:
Thursday 24-06-2021
2:00pm – 3:00pm
St. John’s Dixie Chappal
737 Dundas St. E
Mississauga, Ontario

தொடர்புகளுக்கு:
Nanthini Thayaparan (Canada)
905 216 6458 (Home)
647 648 3514 (Cell Nanthini)
647 284 2726 (Cell Thayaparan)
Nalini Elanchenny (London)
447932752182
Nimmy Valluvan (America)
937 684 2190
Ahilan Sundravel (Canada)
647 461 9344
Nagulan Sundaravel (Canada)
416 315 1899

திருமதி. வேலுப்பிள்ளை நாகம்மா

துயர் பகிர்வோம்

திருமதி. வேலுப்பிள்ளை  நாகம்மா

தமிழ் ஈழம் இடைக்காட்டுடை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி. வேலுப்பிள்ளை நாகம்மா இன்று மண்ணுலகை விட்டு
நீத்துள்ளார்.

அன்னார் அமரர்கள் முருகேசு  சின்னாச்சி  ஆகியோரின் மகளும் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை இன் அன்பு மனைவியும்.

அமரர்கள் சின்னப்பிள்ளை, வேலுப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை, பெரியதம்பி, மாணிக்கம், வள்ளிப்பிள்ளை ஆகியோரின் அன்பு சகோதரியும்.

திரு.முருகுப்பிள்ளை இன் பாசமிகு தாயாரும்,  சத்திஎஸ்வரி இன் அருமை மாமியாரும்.

பகீரதன்,யசோதரன், அமரர் வாசுகி, திலீபன் ஆகியோரின் அப்பாம்மாவும்.சிவதர்ஷினி இன் பேத்தியும், டர்மிகா வின் பூட்டியும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது

தகவல்:

இவ்வண்ணம் குடும்ப உறுப்பினர்கள்

திருமதி. பாலசுதர்சினி கிரிதரன்

திருமதி பாலசுதர்சினி கிரிதரன்
தோற்றம் ஏப்ரல் 04 1976
மறைவு யூன் 06 2021

பாலசுதர்சினி கிரிதரன் இடைக்காட்டை பிறப்பிடமாகவும் இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட பாலசுதர்சினி கிரிதரன் (ராஜி) இன்று இலண்டனில் இறைபதம் அடைந்தார்.

கிரிதரனின் அன்பு மனைவியும் சதுர்த்,சானிகா,சஞ்ஞிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

இவர் திரு பாலசுப்பிரமணியம் (பாலா மாஸ்ரர்) காலம் சென்ற சுகிர்தலட்சுமி தம்பதியரின் அன்பு மகளும் காலம் சென்ற சற்குணநாதன் நேசரத்தினம் தம்பதியரின் அன்பு மருமகளும் ஆவார்.

இவர் பாலசுதாயினி (ராதை) பாலசுதாயன் (மாயா) அவர்களின் அன்பு சகோதரியும் ஆவார். கனகேஸ்வரன், வாசுகி, சுபாஜினி, தபோதினி, நளாயினி, சசிகரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவர் மேசிகா, கேசிகன், ஆதவன், பிரணவி ஆகியோரின் அன்பு பெரியம்மாவும் ரிஷிகர், சுரபி,ரஷிகா,வினுஜன் ஆரணி, அபிஷன், ஆருஜன், பவிசனன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 அன்னாரின் இறுதி சடங்கு விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் அயலவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது

தகவல் குடும்பத்தினர்

தொடர்புகட்கு

கிரிதரன் : +447951966813
            பாலசுப்பிரமணியம்: +94766236297
            மாயா: +94770872948

கல்விப் பொதுத் தராதர உயர்தர

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் 0505T043502இடைக்காடு மகாவித்தியாலய சித்தியடைந்த மாணவர்களுக்கும் நன்கு கற்பித்து அவர்களை வழிநடத்திய ஆசிரியர் சமூகத்துக்கும் அவ்வாறான சூழ்நிலைகளை உருவாக்கிய இடைக்காடு கிராம மக்களுக்கும் கனடா பழைய மாணவர் சங்கம் தனது மகிழ்ச்சியையும் தொடர்ந்தும் இதுபோன்ற முன்னேற்றகரமான செயல்களை செய்வோம் அனைவரும் இணைந்து என்று கூறி விடை வருகின்றோம் நன்றி

உழவர் பெருமக்கள்

மண்ணின் மைந்தர்கள் ஆகிய உழவர்  பெருமக்கள்

அனைவருக்கும் இடைக்காடு பழைய மாணவர் சங்கத்தின்

தைத்திருநாள் வாழ்த்துக்கள் என்றும் ஆரோக்கியமாகவும்

விவேகம் அதி உன்னத உழவர் மைந்தர்களுக்கு நாம்

நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்

கொள்கின்றோம்

images pon 2021

ஆங்கில புதுவருட 2021

அனைவருக்கும் இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள் 

 

images 2021

அனைவருக்கும் இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள் இரண்டாயிரத்தி இருபத்தியோராம்(2021) ஆண்டு வாழ்க வளமுடன் ஆரோக்கியமுடன் பாதுகாப்புடனும் கோவின் 19 எதிர்கொள்வோம்

இவ்வண்ணம்

இடைக்காடு பழைய மாணவர் சங்கம் கனடா